02-07-2005, 07:23 PM
கணவன் மனைவி இருவருக்கிடையில் சண்டை இருவரும் நேரே பார்த்து பேசுவதில்லை ஏதாவது தேவையெனில் ஒருவர் கடதாசியில் எழுதி முகம்பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி விடுவார் மற்றவரும் அதற்கு பதிலெழுதி கண்ணாடியில் ஒட்டிவிடுவது வழமை ஒருநாள் கணவனிற்கு ஒரு முக்கிய வேலை சிறிது அலுப்பாக இருந்ததால் ஒருகடதாசியில் என்னை மாலை 4 மணிக்கு எழுப்பிவிடவும் என்று வழமைபோல் எழுதி ஒட்டி விட்டு நித்திரைக்கு போய் விட்டார் அவர் நித்திரை விழித்து பார்த்தபோது மாலை 6 மணி மனைவியை பாரத்து கத்தினபர் ஏண்டி நாலு மணிக்கு ஏன் என்னை எழுப்பவில்லை முக்கிய அலுவல் பாழாய் போய்விட்தே என்று.மனைவியோ அமைதியாக கண்ணாடியில் போய் பாருங்கள் என்றாள்.கண்ணாடியில் எழுதி ஒட்டப் பட்டிருந்தது மாலை 4 மணியாகிவிட்டது எழும்பவும்(எங்கோ படித்தது)
; ;


