02-07-2005, 02:15 PM
சரி கவரிமான் அண்ண. அங்கிலத்தில் எழுதுவதற்கு பல பக்கங்கள் உண்டு. ஆனால் தமிழில் எழுத எங்களுக்கு யாழ் மட்டும்தான் உண்டு. எனவே யாள்க்களத்தை விட்டால் எம்மை போன்றவர்களுக்கு வேறு கதி இல்லை. எனக்கு ஆங்கிலம் தெரியாது. நான் எவ்வாறு போய் வேறு களங்களில் எனது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளமுடியும். எனவே எம்மைபோன்றவர்களுக்காக யாழ்க்கள பொறுப்பாளர்களின் முயற்சியில் இசைக்கப்படுகின்ற இக் களத்துக்கு. நாம் எல்லோரும் ஆதரவு கொடுத்து அவர்களின் இவ் அரிய முயற்சியை மேலும் ஊக்கபடுத்தி, நாமும் பயனடைவோம். இங்கே ஒவ்வொருவருக்கும் தத்தம் ஆசைகள் விருப்பு வெறுப்புக்கள் உண்டு. எனவே களப்பொறுப்பாளர்கள் சொல்வதை கேட்டு அவர்களின் வளிகாட்டலில் பயணிப்பதே பயனளிக்கும். உங்களின் பல கருத்துக்கள் ஆக்கபூர்வமானவை அவற்றில் எனக்கு பலவற்றில் எந்த முறன்பாடுகளும் இல்லை. ஆனால் இந்த விடயத்தில் நீங்கள் கள பொறுப்பாளர்களுடன் முறன்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்களும் எங்கள் உறவுகளில் ஒருவர். எனவே நீங்களும் வாருங்கள் தமிழில் உங்கள் கருத்துக்களைத்தாருங்கள். எங்கள் கள உறவுகளுடன் ஒன்றாக நாம் பயணிப்போம்.
அன்புடன்
மதுரன்
அன்புடன்
மதுரன்

