02-07-2005, 12:42 PM
Jude Wrote:தமிழரல்லாத பெண்ணொருவர், தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய சேலை படு ஆபாசமாக இருப்பதாக சொல்கிறார். காரணம் இடுப்பு தெரிகிறதாம். தான் ஒரு போதும் இந்த ஆபாசமான ஆடையை அணியமாட்டேன் என்கிறார். அதனிலும் மோசம் தமிழ் ஆண்கள் கோவில்களில் மேல் சட்டையில்லாமல் படு ஆபாசமாக வெட்கமே இல்லாமல் பெண்களுக்கு முன்னாலேயே நடமாடுகிறார்கள் எ;னறு சொல்லி, ஒரு முறைக்கு பிறகு கோவில் பக்கமே தலை காட்டுகிறாரில்லை.
தமிழர் பணபாடு பார்க்க விருமிபியவரை தமிழரின் விழாக்களுக்கு கூட்டிக்கொண்டு போய் இப்போது முகம் காட்டவே சங்கடப்படும் நிலை வந்துவிட்டது, என்ன செய்யலாம்?
அவர் யாரென்டே நீங்கள் சொல்லவில்லையே யூட்.
ஏனெனில் எழுதும் பதில் யார் என்பதைப் பொறுத்தெயுள்ளது..முடிந்தால் அறியத்தாருங்கள்.

