Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்த ஒரு நிமிடம்
#1
அந்த ஒரு நிமிடம்


வாலிபம்
எனக்குள் எந்த இரசாயனமாற்றங்களையும்
ஏற்படுத்தாத
எந்தன் பால்ய வயதில்

மட்டைகளைப் பொறுக்கிச் செய்த
பொம்மைத் துப்பாக்கியால்
காற்றை எதிர்த்து
சமர் செய்த பொழுதுகளில்

எனக்கு அத்துப்படியான
எண்கணிதங்களை
மீண்டும் மீண்டும் உருப்போட்டு
"கணக்கில் சுஸ்ரீரன்" பட்டத்தை
எனக்கு நானே
வழங்கிய வேளைகளில்

ஆசையாயிருந்த அக்காக்கும்
வீட்டிலிருந்த இளையவருக்கும்
அடித்து உதைத்துவிட்டு
நானே வீமன் என்று
கர்வத்தோடலைந்த தருணங்களில்

"ரியுஸ்ரீசன்" போவதாய் கூறிவிட்டு
பண்டாரக் குள வயல்வரப்புக்களில்
நண்பர்களுடன்
ரின்போல் விளையாடிய பொழுதுகளில்

அப்பாக்கு செய்த உதவிக்கு
கூலிப்பணம் பெற்று
உண்டியல் நிறைத்துää
""மம்மி"" ரொபி வாங்க
பெட்டிக் கடைக்கு ஓடிய நேரங்களில்

"அவன் கெட்டிக்காரன்"
எனக்கான நற்சாட்சிப் பத்திரத்தை
என் காதுபடுவதறியாது
மற்றவர்களிடம் அம்மா வழங்கிய பொழுதுகளில்

பின்னாளில்
""முறிந்த சிறகு"" படித்துவிட்டு
ஜிப்ரானின் சோகம் தாங்கி
தனிமையில் கரைந்த இரவுகளில்

நான் பெற்ற
அந்த சந்தோஸங்களையெல்லாம்
உன்னோடு பேசிய
அந்த ஒரு நிமிடம்
தந்துவிட்டு கரைந்ததடி


-தயா ஜிப்ரான் -

தலைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது ____ யாழினி
.
.!!
Reply


Messages In This Thread
அந்த ஒரு நிமிடம் - by Thaya Jibbrahn - 02-06-2005, 04:33 PM
[No subject] - by tamilini - 02-06-2005, 05:18 PM
[No subject] - by Thaya Jibbrahn - 02-06-2005, 05:30 PM
[No subject] - by tamilini - 02-06-2005, 05:44 PM
[No subject] - by kuruvikal - 02-06-2005, 07:51 PM
[No subject] - by tamilini - 02-06-2005, 07:55 PM
[No subject] - by kuruvikal - 02-06-2005, 07:59 PM
[No subject] - by tamilini - 02-06-2005, 08:09 PM
[No subject] - by kuruvikal - 02-06-2005, 08:22 PM
[No subject] - by tamilini - 02-06-2005, 08:40 PM
[No subject] - by shiyam - 02-07-2005, 03:49 AM
[No subject] - by kavithan - 02-07-2005, 03:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)