Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
desam
#1
கேட்டதில் பிடித்தது

உன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா.....
சொந்த வீடுனை வாவென்று
அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா...
அயல்நாடுந்தன் வீடில்லை
விடுதியடா தமிழா

வானம்மெங்கும் பறந்தாலும்
பறவையென்றும் தன் கூட்டில்
உலகம்மெங்கும் வாழ்ந்தாலும்
தமிழனென்றும் தாய்நாட்டில்
சந்தர்பங்கள் வாய்த்தாலும்
அங்கு செல்வமரம் காய்த்தாலும்
புல்மரத்தின் கூவல் உந்தன்
செவியில் விழாதா

கங்கை உனை அழைக்கிறது
யமுனை உனை அழைக்கிறது
இமயம் உனை அழைக்கிறது
பல சமயம் உனை அழைக்கிறது
கண்ணாழூச்சி ஆட்டம் அழைக்க
சின்ன பட்டம் பூச்சி கூட்டம் அழைக்கும்
தென்னம் தோப்பு துறவுகள் உனை அழைக்க
கட்டி காத்த உறவுகள் அழைக்க
நீதான் தின்ற நிலாச்சேறுதான் அழைக்க

பால்பேல் உள்ள வென்னிலவில்
பார்தால் சில கறையிருக்கும்
மலர்போல் உள்ளதாய்மன்னில்
மாறா சில வலியிகுக்கும்
கண்ணீர் துடைக்க வேண்டும்
உந்தன் கைகள்
அதில் பிறக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்புத்தாயின் மடி உனை அழைக்குதடா
தமிழா…

உன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா.....
Reply


Messages In This Thread
desam - by விது - 02-06-2005, 03:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)