02-06-2005, 01:16 PM
காதல், கணவர் - சினேகா 'ஜில்' விளக்கம்
<img src='http://www.kathalnet.com/graphics/Sneha/0000284-Sneha.jpg' border='0' alt='user posted image'>
"என்னோட பலம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். சிரிப்புதான் என் பலம். பலவீனம் கோபம்" முதலிலேயே தனது பிளஸ், மைனஸ்களை சினேகா சொல்லிவிடுவதால் எதிராளி உஷாராக வசதி.
சினேகாவுக்கு பிடித்த நடிகர்கள்... ஸாரி, இந்த லிஸ்டில் யங் ஹீரோக்களுக்கு நோ வேகன்சி! சிவாஜி, எம்.ஜி.ஆர்., அமிதாப், கமல், ரஜினி என மூத்த நடிகர்களால் மட்டுமே இந்த சிரிப்பழகியின் இதயத்தில் இடம்பிடிக்க முடிந்திருக்கிறது. நடிகைகளில் சாவித்ரி. சரோஜாதேவியும், கே.ஆர். விஜயாவும் அழகான நடிகை என சர்ட்டிபிகெட் தந்ததை பெருமையாக நினைக்கிறார்.
மற்ற நடிகைகளைப் போல், என்னை ஜாக்கிசான் கூப்டாக, அமெரிக்காவில் அர்னால்டு கூப்டாக என்று கதைவிடும் ரகமல்ல சினேகா. "குடும்பப்பாங்கான கேரக்டர்களுக்குதான் நான் சரி. இந்திக்குப் போனால் 'வேறுமாதிரி' நடிக்க வேண்டும். ஸோ, என்னால் அங்கு பிரகாசிக்க முடியாது" என்று உண்மையை ஒப்புக்கொள்ளும் தைரியம் சினேகாவிடம் இருக்கிறது.
கிடைக்கிற சம்பளத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதிலும் இவர் கில்லாடி. 'விரும்புகிறேன்' படத்திலிருந்து 'சின்னா'வுக்கு வாங்கிய அட்வான்ஸ் வரை சேர்த்து, சென்னையில் டப்பிங் ரிக்கார்டிங் ஸ்டுடியோ கட்டி வருகிறார். இதை நிர்வகிக்கப் போவது சினேகாவின் அண்ணன்.
பேசுனது போதும், காதல் மேட்டருக்கு வா என்று நீங்கள் கூச்சல் போடுவது கேட்கிறது. இது போன்ற சென்ஸிடிவ் விஷயங்களை நாம் சொல்வது சுவாரஸ்யமல்ல. சினேகாவின் 'ஹஸ்கி' வாய்சை நினைத்தபடியே படியுங்கள். முதலில் காதல்; "என்னைப் பொறுத்தவரை காதல் என்பது சாதாரண உணர்ச்சிதான். அப்படி ஒரு உணர்ச்சி எனக்கு இதுவரை யார் மீதும் வரவில்லை" - அதாவது சினேகாவின் இதயம் Tolet போர்டுடன் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் ட்ரை பண்ணலாம்.
அடுத்து கணவர்; "எனக்கு 23 வயதுதான் ஆகிறது. 25 படங்களில்தான் நடித்திருக்கிறேன். அதனால் எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. எனக்கு கணவராக வருபவர் அழகானவராகவும்,'ஜென்டில்மேன்' ஆகவும், என்னை புரிந்துக்கொண்டு என்மீது அக்கறை செலுத்துபவராகவும் இருக்கவேண்டும்."
சினேகாவின் ஆசையை தெரிவித்துவிட்டோம். அப்ளிகேஷன் போடுகிறவர்கள் போடலாம்!
Cine South

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>