02-06-2005, 12:56 PM
மற்றொரு போருக்கான ஆயத்தம்!?
<b>பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வதற்காக இஸ்லாமாபாத் புறப்படும் ஜனாதிபதி சந்திரிகா...</b>
மற்றொரு போருக்கான ஆயத்தங்களை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பல நாடுகளுடனும் பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டு வரும் அரசு முப்படையினருக்குமான ஆயுதத் கொள்வனவிலும் தீவிர அக்கறை காட்டி வருகின்றது. அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகள், அரசு போருக்கான தயாரிப்பில் இறங்கிவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஈரானிடமிருந்து எண்ணெய்க்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாகப் பேச்சுக்களை நடத்திய ஜனாதிபதி சந்திரிகா, தற்போது பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் நாளை 7 ஆம் திகதி 3 நாள் பயணமாக இஸ்லாமாபாத் செல்லவுள்ளார்.
இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாடொன்றில் கைச்சாத்திடுவதில் இலங்கை அரசு, கடந்த வருடம் முழுவதும் தீவிர அக்கறை காட்டி வந்தது. எவ்வேளையிலும் அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திடலாமென்ற நிலையில், அந்த ஒப்பந்தத்திற்கெதிராக தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பால் அதிலிருந்து இந்தியா பின்வாங்கியது. இது இலங்கைத் தரப்பிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடல்கோள் அனர்த்தத்தால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது இலங்கையில் உதவிப் பணிகளுக்காக விரைந்து வந்த இந்தியா, அமெரிக்கப் படைகள் இங்கு வருவதைத் தடுக்க தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டும் அதனையும் மீறி அமெரிக்கப் படைகளை அழைத்ததன் மூலம் இலங்கை அரசு இந்தியா மீதான தனது அதிருப்தியை வெளிப்படையாகவே காண்பித்தது.
இது இந்தியாவைக் கடுமையாகச் சீண்டி, இலங்கை தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் தங்கள் கொள்கையில் மாற்றங்களைச் செய்யும் நிலைக்கு இந்தியாவை தள்ளியுள்ள போதிலும், தங்களுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தயங்கியதற்கான தண்டனையை அமெரிக்கப் படையை இங்கு அழைத்து இந்தியாவையும் மீறி தங்களால் எதுவும் செய்ய முடியுமென்பதை இலங்கை அரசு மிடுக்குடன் காட்டிவிட்டது.
இலங்கை வந்துள்ள அமெரிக்கப் படைகள் இங்கிருந்து செல்லுமா என்ற கேள்வி எல்லாத் தரப்பினரிடமும் எழுந்துள்ள நிலையில் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நெருங்கிய தோழனும் இந்தியாவின் பரம விரோதியுமான பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்தும் ஆராய்வதற்காக ஜனாதிபதி சந்திரிகா நாளை திங்கட்கிழமை இஸ்லாமாபாத் செல்கிறார்.
கடல்கோள் அனர்த்த நிவாரணப் பணிகள் மற்றும் புனர்வாழ்வு, புனர் நிர்மாணப் பணிகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும், ஜனாதிபதி சந்திரிகா தனது பாகிஸ்தான் பயணத்தைத் தொடர்வதன் மூலம், பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதி எவ்வளவு தூரம் அக்கறை காட்டுகின்றார் என்பது தெளிவாகியுள்ளது.
ஏற்கனவே, சீனாவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் கைச்சாத்திட்ட இலங்கை அரசு, ஈரானிடமிருந்தும் பல நூறு கோடி ரூபா பெறுமதியான போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்யவுள்ளது. இலங்கையில் அண்மைக் காலங்களில் எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்த நிலையில், ஈரானிடமிருந்து எண்ணெய்க்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் உடன்பாடொன்றை இலங்கை அரசு மேற்கொண்டது.
இதன்படி, ஈரானிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்யும் அநேநேரம், அதற்கு ஈடாக ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்தது. இதற்காக முப்படைகளினதும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று ஈரான் சென்று, கொள்வனவு செய்யும் ஆயுதங்களைப் பரிசோதித்த பின்னர் அண்மையில் நாடு திரும்பியது. விரைவில் இந்த ஆயுதக் கொள்வனவு நடைபெறவுள்ளது.
இந்தச் சூழ்நிலையில்தான் இலங்கைக்கு இராணுவ உதவிகளை அள்ளி வழங்கும் நாடுகளில் மிக முக்கிய நாடான பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி செல்கிறார். சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை, நீண்ட காலக் கடனுக்கு வழங்கும் சலுகையை அண்மையில் பாகிஸ்தான் வழங்கியதை அடுத்தே ஆயுதக் கொள்வனவு குறித்தும் பாதுகாப்பு உடன்பாடு குறித்தும் இலங்கை அரசு பாகிஸ்தானுடன் ஆராயவுள்ளது.
கடல்கோள் அனர்த்தத்தால் இலங்கை படையினர் பாரிய இழப்புகளைச் சந்தித்தனர். ஆட்லறிகள், பீரங்கி மோட்டார்கள் உட்பட பல கோடி ரூபா பெறுமதியான போர்த் தளபாடங்களைக் கடல் காவு கொண்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினரும் காணாமல் போய்விட்டனர். பல படை முகாம்கள் இருந்த இடமே தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டன. கடற்படையினரே இதில் பாரிய இழப்புகளை சந்தித்திருந்தனர்.
போர்க் கப்பல், பீரங்கிப் படகுகள் உட்பட பல கடற்படை கலங்கள் உடைந்து நொருங்கின. காலி கடற்படைத் தளமும் திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை கடற்படைத் தளமும், பெரும் இழப்புகளைச் சந்தித்தன. இந்த நிலையிலேயே கடல்கோள் அனர்த்தத்திற்காகச் சர்வதேச சமூகம் அள்ளிக் கொடுத்த பெரும் நிதியிலிருந்து சுமார் 400 கோடி ரூபாவுக்கு போர்க் கப்பல்களைக் கொள்வனவு செய்ய கடற்படையினர் தீவிர அக்கறை காட்டுகின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் நிதியில் ஒரு பகுதியை கடற்படையினரின் பலத்தை கட்டியெழுப்ப ஒதுக்க வேண்டுமெனவும் பல பீரங்கிப் படகுகளை கொள்வனவு செய்ய ஒதுக்குமாறும் கூட்டுப் படைகளின் தளபதியும் கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி கோரியுள்ளார். சுமார் 400 கோடி ரூபா செலவில் கடற்படைக்கான கப்பல்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தமொன்றில் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி அட்மிரல் தயாசந்தகிரி தனியார் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமும் செய்துள்ளார்.
சுமார் 300 கோடி ரூபா செலவில் பத்து அதிவேக பீரங்கிப் படகுகளையும் 60 கோடி ரூபா செலவில் துருப்புக் காவி, தரையிறங்கு கலங்களையும் கொள்வனவு செய்வதே இந்த ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் கைசாத்தாகி நான்கு நாட்களில் கடல்கோளினால் கடற்படை பாரிய இழப்பைச் சந்தித்ததால், தற்போது சர்வதேச சமூகம் அள்ளிக் கொடுக்கும் நிதியில் ஒரு பகுதியை கடற்படைக்காக கிள்ளியெடுப்பதற்கான திட்டங்களுடன் கடற்படைத் தளபதி காய் நகர்த்தி வருகிறார்.
கடற்படையை கட்டியெழுப்ப முயற்சி ஒரு புறம் நடக்கையில், விமானப் படையினருக்கான போர் விமானக் கொள்வனவில் தீவிர அக்கறை காட்டி வரும் விமானப் படைத்தளபதி ஏயார் மாஷல் டொனால்ட் பெரேரா, பலாலி விமானத் தள ஓடு பாதையையும் பலகோடி ரூபா செலவில் அவசர அவசரமாகப் புனரமைத்து வருகின்றார். இதற்காக அமெரிக்க படையினரின் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.
நிவாரணப் பணிக்கென அமெரிக்கப் படைகள் பாரிய சரக்கு விமானங்களிலும் பாரிய கடற்படைக் கப்பல்களிலும் வந்திறங்கிய போது அவர்கள் பெருமளவு இயந்திர உபகரணங்களையும் கொண்டு வந்தனர். ஆனால் அவை குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனாலும் இங்கு கொண்டு வந்த இந்த இயந்திர உபகரணங்களில் பெரும்பாலானவற்றை அவர்கள் இங்கேயே விட்டுச் செல்லவுள்ளனர். அவை இராணுவத் தளபாடங்களாகக் கூட இருக்கலாம்.
வேறொரு நாளில் அமெரிக்க கப்பல்கள் அல்லது விமானங்கள் வந்தால் அவை மிக நுணுக்கமாக அவதானிக்கப்படும். அவற்றில் என்னென்ன வருகின்றன என்பதும் அறியவரும். ஆனால் நிவாரணப் பணிக்கென நூற்றுக்கணக்கான விமானங்கள் அடுத்தடுத்து வந்திறங்கிய போது அவற்றில் வந்தவை பற்றி எதுவுமே தெரியாது. இராணுவத் தளபாடங்கள் கூட அவற்றில் அடங்கியிருக்கலாம்.
இந்த நிலையில் அமெரிக்காவிடமிருந்து இலங்கை விமானப் படையினர் போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதுடன், பாரிய சரக்கு விமானமான சி.130 ற்கான உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்யவுள்ளனர். அமெரிக்கத் தயாரிப்பான சி.130 ரக ஹேர்குலிஸ் சரக்கு விமானங்கள் இரண்டு தற்போது இலங்கை விமானப் படையினரிடம் இருக்கின்றபோதிலும் அவை பழுதடைந்த நிலையில் ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை திருத்துவதற்கான உதிரிப்பாகங்களை தந்துதவுமாறு விமானப் படைத்தளபதி கேட்டுள்ளார். அத்துடன், அமெரிக்காவில் தேவைக்கு அதிகமாயிருக்கும் சரக்கு விமானங்களில் ஒன்றையாவது தந்துதவுமாறும் அவர் கேட்டுள்ளார். பல நூறு துருப்புகளையும் யுத்த டாங்கிகள் போன்ற கனரக வாகனங்களையும் ஒரே நேரத்தில் ஏற்றியிறக்கும் வல்லமை கொண்ட இந்தச் சரக்கு விமானங்கள் தரையிறங்கும் வகையிலேயே தற்போது பலாலி விமான ஓடு பாதையும் திருத்தியமைக்கப்படுகிறது.
கடல்கோளினால் கடற்படையினர் பெரும் இழப்பைச் சந்தித்த அதேநேரம் கடற்புலிகளின் பெரும் வளர்ச்சியும், புலிகள் வசம் தற்போது வானூர்திகள் இருப்பதான தகவல்களுமே கடற்படையை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இதையடுத்தே குடாநாட்டுக்கான படையினரின் பயணத்திற்கு இனிமேல் விமானப் படையை நம்பியிருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்த, விமானப் படையினரின் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.
புலிகளின் வான் படையிடமிருப்பதாக படையினர் கருதும் வானூர்திகள் யுத்த விமானங்களல்ல.அவை இலகு ரக விமானங்களென்பதால் விமானப் படையினரின் போர் விமானங்களுடன் அவை மோதலில் ஈடுபடமாட்டாது. ஆனாலும், அதனைப் பயன்படுத்தி புலிகள் முக்கிய இலக்குகள், படைத்தளங்கள், பாரிய போர்க் கப்பல்கள் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தி விடக் கூடுமென்பதாலேயே விமானப் படையின் பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் அவசர வேண்டுகோளையடுத்து சி.130 ரக போக்குவரத்து விமானத்தை இலவசமாக வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது. இதேநேரம் பெல்-412 மற்றும் `மில் மி-17' ரக போக்குவரத்து ஹெலிகொப்டர்களை கூடுதலாக வாங்க வேண்டுமென அமெரிக்கா சிறிய நிபந்தனையொன்றையும் விதித்துள்ளதால் இவற்றில் இரண்டு ஹெலிகொப்டர்களை உடனடியாக கொள்வனவு செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. பெல் விமான நிறுவனமும் தனது ஹெலிகொப்டர்களை இலங்கைக்கு விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றது.
கடல்கோள் அனர்த்தத்தால் அழிந்து போன தங்கள் தேசத்தின் மீள் கட்டுமாணப் பணிகளிலும் மக்களுக்கான நிவாரணப் பணிகளிலும் விடுதலைப் புலிகள் மிகவும் தீவிரமாக உள்ள இவ்வேளையில் அரசு ஏன் ஆயுதக் கொள்வனவிலும் யுத்தத்திற்கான தயார்படுத்தலிலும் தீவிரம் காட்டுகின்றதென்ற கேள்வியும் எழுகிறது.
கடல்கோள் அனர்த்த நிவாரணப் பணிக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் வழங்கப்படும் வெளிநாட்டு உதவியை பயன்படுத்தி முப்படைகளையும் இவ்வேளையில் நன்கு கட்டியெழுப்பி விடலாமென அரசு கருதுவது போல் தெரிகிறது. இந்த நிதியை அரசு போர்த் தளபாடக் கொள்வனவுக்காகப் பயன்படுத்துவதாக விடுதலைப் புலிகளும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நிலையில் இது குறித்து சர்வதேச சமூகமும் கவனம் செலுத்த வேண்டுமென்ற வற்புறுத்தலும் அதிகரித்து வருகின்றது.
சமாதான முயற்சிகள் மீண்டும் ஆரம்பமாகும் வாய்ப்பே இல்லையென்ற நிலையிலும் தங்கள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனையின் அடிப்படையில் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பமாகாவிடின் ஈழ விடுதலைப் போராட்டத்தை தாங்கள் தொடரப் போவதாக புலிகள் அறிவித்த நிலையிலும் நாட்டில் மீண்டும் யுத்தம் வெடித்து விடலாமென்ற கடுமையான சூழ்நிலை நிலவியது. ஆனாலும் கடல்கோளானது சமாதான முயற்சிகளை மட்டுமல்லாது யுத்த சூழ்நிலையையும் அடித்துச் சென்றுவிட்டது.
தற்போதைய நிலையில் அமெரிக்கப் படைகள் போன்று அந்நியப் படைகள் நிலை கொண்டிருக்கையில் இலங்கை அரசு யுத்த முனைப்பிலும் ஆயுதக் கொள்வனவிலும் தீவிரம் காட்டுவது குறித்து கேள்விகள் எழுகின்றன. இது குறித்து இந்தியாவும் மிக அவதானமாக இருக்கின்ற போதும் இலங்கை அரசு தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது. தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்புகிறதோ இல்லையோ, அரசு படைபலத்தை கட்டியெழுப்புகிறது என்பது அப்பட்டமான உண்மை.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>