02-06-2005, 10:54 AM
nallavan Wrote:அதுசரி. யார் சொன்னது 10:1 கணக்கு. சுத்த பொய்க்கணக்கு. அப்பிடியொண்டும் பெரிய வித்தியாசமில்ல. நீங்கள் இல்லாத ஒரு கணக்க தந்து வாய்க்கு வந்தபடி கதைக்கிறியள். அந்தக் கட்டுரை நானும் பாத்தனான். சரியான விசயம் தானே சொல்லப்பட்டிருக்கு. ஆக்கபூர்வமா ஆராயாமல் சும்மா எழுந்தமானத்துக்கு சிலர் ஏதோ எழுதினம். பல தார மணம் முடிப்பதற்கு ஏற்ற காரணிகள் ஏதுமில்லை. சும்மா ஒரு 10;:1 கணக்கப் போட்டு எழுதுப்படுகிது.
ஆகா! அருமை. என்ன ஞானம் தங்களுக்கு! பிரச்சினையே இல்லை என்று சாதித்து விட்டால் தீர்வு காண வேண்டிய தேவையே இல்லையல்லவா!
சிங்களவர் மத்தியில் ஞானிகள் பலர் தமிழருக்கு இலங்கையில் பிரச்சினையே இல்லை என்று தான் சொல்லிவருகிறார்கள். "இருக்கிறது" என்று கலவரம் முதல் கத்தரிக்காய் விலை வரை எடுத்து சொன்னால் அது "எல்லாருக்கும் உள்ள பிரச்சினைதான்" என்கிறார்கள். இது தான் ஜேவிபின் நிலைப்பாடும். மற்ற நாடுகளும் "பிரச்சினையே இல்லை" என்று சாதித்து தீர்வுகாண வேண்டிய தேவையையே இல்லாமல் செய்யும் இந்த அரிய கலையை தங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். (நேரம் இல்லவிட்டால் ஜேவிபியிடம் அனுப்பி விடலாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> )

