Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் நேதாஜியின் மரண சர்ச்சை
#1
மீண்டும் நேதாஜியின் மரண சர்ச்சை

இந்தியாவின் விடுதலைப் போராட்டத் தலைவர்களில் ஒருவரும், தென்கிழக்காசியாவில் ராணுவம் அமைத்து இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் இந்தியாவில் எப்போதுமே சர்ச்சைக்குரிய விஷயம் தான்.

நேதாஜி இறக்கவே இல்லை என நம்பும் மனிதர்களும் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி தைவானில் உள்ள தைப்பே விமான நிலையத்தில் விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த நாளில் எவ்வித விமான விபத்தும் தைவானில் நடக்கவில்லை என தைவான் அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து ஆராய்ந்து வரும் mukharjee விசாரணைக்குழுவிடம் இத்தகவலை தாய்வான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நேதாஜியுடன் கடைசியாகப் பயணம் செய்த அவரது தோழரும், பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுச் செயலாளருமான ரகுமான்கான் எழுதியுள்ள புத்தகத்தில் நேதாஜி பயணம் செய்த விமானம், தைவானின் காட்டுப்பகுதியில் விழுந்ததை நேரில் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ரகுமான்கான் குறிப்பிட்டுள்ள ஆகஸ்ட் 18-ஆம் தேதி, விமான விபத்துச் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளது. நேதாஜி மரணம் பற்றிய சர்ச்சைகள் கடந்த 59 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தைவானின் கருத்து மேலும் இப்பிரச்னையைத் தீவிரமாக்கியுள்ளது.

வணக்கம் மலேஷியா
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மீண்டும் நேதாஜியின் மரண சர்ச்சை - by Vaanampaadi - 02-06-2005, 09:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)