Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
த மி ழ் இ ந் தி யா
#6
கண்டமாய் இந்திரத்தீவும்இ கசேருத்தீவும்இ தாமிரபர்ணித் தீவும்இ கபதித்தீவும்இ நாகத்தீவும்இ சாந்திரமத்தீவும்இ காந்தருவத்தீவும்இ வாருணத்தீவும்இ குமரித்தீவு மெனப் பெயர் பெற்றுப் பல மலைகளும் பல நதிகளும் பல்வேறு வகைப்பட்ட சாதிகளுமுடைத்தாய் வயங்கும். இவ் வொன்பதுள்ளும் குமரிக்கண்ட மொன்றே வேதாகமவழக்கும்இ சாதிவரம்பும்இ கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களும்இ காசி முதலிய புண்ணிய தலங்களுமுடைத்தாய்ச் சிறந்தது. ஏனை எட்டுக் கண்டங்களும் மிலேச்சர் வாழிடங்களாம்.

"பூமியின் மேற்பரப்பு ஏழுகடலும் ஏழு பெருந்தீவும் நடுவே மேருவரையு முடைத்தாய்ப் பூலோகமெனப் பெயர் பெறும். இந் நாவலந்தீவினடுவே மேருவரை நூறாயிரம் யோசனை அளவுடைத்தாய் வயங்கும்.இஇஇஇஇஇ" இது மிருகேந்திரத்திற் கண்டது.


மேரு உலகுக்கு நடு

புராணங்களும் இதிகாசங்களும் பழைய கடல் நிலங்களைப் பற்றிப் பிறழக் கூறுமாயினும் மேரு உலகுக்கு மத்தியில் உள்ளது என்பதை எல்லாம் ஒரு தலையாக ஏற்றுக்கொள்ளும். புத்தசைன நூல்கள் மேருவை மந்தரம் எனக்கூறும். பாகவத புராணமும் கந்தபுராணமும் ஒரு காலத்தில் காற்றுக் கடவுளுக்கும் மேருமலைக்கும் நேர்ந்தபோரில் காற்றுக் கடவுளால் முறித்துக் கடலுள் விசப்பட்ட மேருவின் திகரமொன்றே இலங்கை எனக் கூறுகின்றன. இது வெப்ப நாடுகளில் அடிக்கடி நேரும் காற்றுக்குழப்பம் ஒன்றையும் அக்காலத்தில் மேருவின் ஒருபகுதி கடலுள் மறைந்த வரலாற்றினையும் குறிக்குமெனக் கருதப்படுகின்றது. ஆகவே இம்மலை பூமத்திய இரேகையை அடுத்து உலகுக்கு மத்தியில் இருந்ததெனத் தெரிகின்றது. பிற்காலத்தில் இம்மலை இமயமலையை அடுத்தோ அதற்கு வடக்கிலோ இருந்ததெனக் கருதப்பட்டது. கி. மு. 4-ம் நூற்றாண்டில் விளங்கிய மெகஸ்தீனஸ் என்னும் கிரேக்கர் மேருமலை பாண்டி நாட்டில் உள்ளதெனக் கூறியுள்ளார்.1

பாஸ்கராச்சாரியர் எழுதிய வானநூற் குறிப்பில் பூமத்திய இரேகை பழைய இலங்கைக்கு ஊடாகச் சென்றதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமத்திய இரேகை சுமத்திராவுக்கு ஊடாகச் செல்கின்றது. இலங்கைப் புத்த நூல்கள் இப்பொழுதுள்ள இலங்கைஇ முன்னைய இலங்கையில் பன்னிரண்டில் ஒரு பகுதி எனக் கூறுகின்றன. இப்பொழுது இலங்கைக்கு 400 கல் தூரத்திலுள்ள மாலைத் தீவு எனப் படும் தீவுக்கூட்டங்கள் இலங்கையின் பகுதியாக இருந்தன என்று நில நூலார் கூறுவர். அத்தீவுகளில் வாழும் மக்கள் ஆஸ்திரேலிய மக்களுக்கும் இந்தியாவிற் காணப்படும் சில மக்கட் கூட்டத்தினருக்கும் இனமுடையவர்களாகக் காணப்படுகின்றனர்1 செங்கோன்றரைச் செலவு என்னும் நூலில் கடல் கொண்ட நாட்டின் சில மலைஇ ஆற்று இடப் பெயர்கள் காணப்படுகின்றன. இறையனாரகப் பொருளுரை தலைச்சங்கமிருந்த மதுரையைக் கடல் கொண்டதெனக் கூறுகின்றது. இளங்கோவடிகள் பஃறுளியாறுஇ குமரியாறு முதலியவைகளைக் கடல் கொண்டதெனக் குறிப்பிட்டுள்ளார். அடியார்க்கு நல்லார் குமரிமுனைக்குத் தெற்கே கிடந்து கடல் கொள்ளப்பட்ட நாற்பத்தொன்பது நாடுகளைக் குறிப்பிட்டதோடு அந்நிலப் பரப்பு 700 காவத2 முடையதெனவுங் கூறியுள்ளார். இவைகள் எல்லாம் ஒரு காலத்தில் இந்தியக் குடாநாட்டின் அமைப்பு வேறு வகையில் இருந்ததென்பதை நன்கு விளக்குவன.


கடல் கோள்


இவ்வுலக மக்கள் எல்லோரும் ஒரு பெரிய கடல் கோளைப்பற்றிக் கூறுகின்றனர். ஒவ்வொரு மக்கட் கூட்டத்தினரும் அது தத்தம் நாட்டில் நிகழ்ந்ததென்பர். இக்கதை சிறிய சிறிய வேறுபாடுகளுடன் ஒரே வகையாக எல்லோராலும் கூறப்படுகின்றது. ஆகவே உலக மக்கள் மத்திய இடமொன்றிலிருந்து பிரிந்து செல்வதன் முன் இக் கடல்கோள் நிகழ்ந்ததெனக் கருதப்படுகின்றது.3

1. The formation of Malaidives P 23,-J. S. Gardmer.
2. காவதம் 10 கல் தூரம்.
3. When the ancestors of Indians. the Pereans, the Greeks, the Romans, the Slaves, the Celts and the Germans were living together within the same onclosures. Nay under the same roof, Lectures on the science of language.--1864-Maxmuller.
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 02-03-2005, 08:13 PM
[No subject] - by aathipan - 02-03-2005, 08:15 PM
[No subject] - by aathipan - 02-03-2005, 08:20 PM
[No subject] - by aathipan - 02-03-2005, 08:22 PM
[No subject] - by aathipan - 02-05-2005, 12:20 PM
[No subject] - by aathipan - 02-05-2005, 12:23 PM
[No subject] - by aathipan - 02-08-2005, 03:24 PM
[No subject] - by aathipan - 02-09-2005, 11:23 AM
[No subject] - by aathipan - 02-09-2005, 11:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)