Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுதந்திர தினம்
#11
இன்றைய தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை

இலங்கையின் சுதந்திர தினமென்பது, தமிழ் மக்களைப் பொறுத்தவரை துக்கதினமாகவே இருப்பதால் இன்றைய நாளை கரிநாளாகக் கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்றைய சுதந்திர தினத்தை பகிஷ்கரித்து தமிழ் மக்கள் துக்கதினம் அனுஷ்டிக்க வேண்டுமெனக் கோரி மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில்:

சுதந்திர தினம் தமிழ் மக்களாகிய எம்மைப் பொறுத்தவரை துக்க தினமாகவே அமையும். தமிழர்களாகிய எம்மைப் பேரினவாதச் சிங்கள அரசாங்கம் நசுக்குவதற்கு ஆரம்பித்த நாள்தான் இலங்கையின் சுதந்திர தினமாக அமைந்திருக்கின்றது. 1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் சுதந்திரத்தினைப் பெற்ற இலங்கைத் தீவில் சிறுபான்மை இனம் என்ற முத்திரை குத்தப்பட்டு, வந்தேறு குடிகள் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு மொழி ரீதியாகவும் இன ரீதியாகவும் பல்வேறுபட்ட வகையில் தமிழர்களைப் புறக்கணிப்பதில் சிங்கள ஆட்சி பீடத்தில் ஏறிய பேரினவாதச் சக்திகள் முனைப்புப் பெற்றுச் செயற்பட்டன.

நில ஆக்கிரமிப்புகளைச் செய்து மொழி உரிமையைப் பறித்து தனிச் சிங்களச் சட்டம் என்ற இன அழிப்பு வேலைக்கு அடித்தளங்கள் போட்டு, தமிழ் மக்களை அடக்குமுறைச் சகதிக்குள் தள்ளினார்கள்.

இவ்வாறான அடக்குமுறைகளுக்கு தமிழர்களை இட்டுச்சென்ற நாளே சுதந்திர தினமாகும்.

இந்த நாள் சிங்களவர்களுக்கு மட்டுமே சுதந்திர தினமாகும். தமிழர்கள் இன்றும் சுதந்திரம் பெறவில்லை. தமிழர்களுக்கு என்ற தனித்துவம் இன்னும் அமையப்படவில்லை. தொடர்ந்து வந்த இனவாதப் போக்குடைய சிங்கள அரச தலைவர்கள் மேலும் மேலும் தமிழர்களை ஓரம் கட்டவே எத்தனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இராணுவ ஆக்கிரமிப்பில் நிலத்தினை இழந்து உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை அரசு பல்வேறுபட்ட அடக்குமுறைகளையே மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை இராணுவம் சொந்த நிலத்தில் சொந்தக் கடலில் சுந்திரமாக தொழில் செய்ய முடியாமல் தமிழர்களைத் தடுத்தும், பல்வேறு தடைகளை ஏற்படுத்தியும் வருகின்றது. இந்த நிலையில் ஒரு பக்கம் சுதந்திரம் என்ற தொனிப்பும் மறுபக்கம் அடக்குமுறை என்ற இன அழிப்பு நடவடிக்கையையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருவதனை வெளிப்படையாக உணரலாம்.

இயற்கையின் அனர்த்தத்தினால் தெற்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளையும் கட்டிக்கொடுத்து சொந்த இடத்தில் அவர்களை குடியமர்த்த வேண்டும் என்ற உலக நாடுகளிடம் உதவிப் பிச்சைக்கு கையேந்தும் இன்றைய அரசாங்கத்திடம் பல ஆண்டுகளாக சொந்த வீடுகளை உயர் பாதுகாப்பு வலயம் என்ற இராணுவ ஆக்கிரமிப்புக்குள் பறிகொடுத்த தமிழ் மக்களை அவர்களுடைய சொந்த வீடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணப்பாடு ஏன் ஏற்படவில்லை?

இதுவே இன ரீதியான பாகுபாட்டினை, இன ரீதியான அடக்குமுறையினை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. எனவே, தமிழர்களை அடக்குவதற்கு காழ்கோளாக ஆரம்ப நாளாக இருந்த சுதந்திர தினத்தினைக் கரிநாளாக, தமிழர்களை இருண்ட வாழ்வை நோக்கி நகர்த்திய நாளாகவே நாம் கருதுகின்றோம்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 02-04-2005, 12:43 PM
[No subject] - by வியாசன் - 02-04-2005, 12:54 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 02-04-2005, 01:46 PM
[No subject] - by Danklas - 02-04-2005, 01:52 PM
[No subject] - by Niththila - 02-04-2005, 02:23 PM
[No subject] - by shiyam - 02-04-2005, 02:30 PM
[No subject] - by Niththila - 02-04-2005, 02:49 PM
[No subject] - by வியாசன் - 02-04-2005, 03:34 PM
[No subject] - by Mathan - 02-04-2005, 04:38 PM
[No subject] - by Mathan - 02-04-2005, 04:40 PM
[No subject] - by shiyam - 02-05-2005, 03:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)