02-04-2005, 09:36 AM
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/02/20050202120608baby_ap_203b.jpg' border='0' alt='user posted image'>
சுனாமியினால் அநாதரவான நிலையில் கல்முனை வைததியசாலை நிர்வாகத்தின் பராமரிப்பிலுள்ள குழந்தையின் உண்மையான பெற்றோரை கண்டறிவதற்கான மரபனு பரிசோதனை எதிர் வரும் புதன்கிழமை கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு கூடமொன்றில் நடை பெறவிருக்கின்றது.
அன்றைய தினம் குழந்தையை அங்கு கொண்டு செல்ல வேண்டும் என வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இன்று நீதிமன்றம் கட்டளை அனுப்பியுள்ளது.
உரிமை கொண்டாடும் பெற்றோர்
உரிமை கோரும் பெற்றோரையும் அன்றைய தினம் அங்கு செல்ல வேண்டும் என நீதிமன்றம் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான செலவுகளை யுனிசெப் பொறுப்பேற்க முன் வந்துள்ளதையடுத்து குழந்தையினதும் உரிமை கோரும் பெற்றோரிகளினதும் மாதிரி இரத்தம் பெறப்படும் போது யுனிசெப் பிரதிநிதியொருவர் அங்கு பிரசன்னமாகியிருக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குழந்தைக்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Source : BBC

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>