02-04-2005, 04:43 AM
சர்வதேசம் தமிழருக்கு உதவுவதைத் தடுக்க...
'சுனாமி அனர்த்த நிவாரணப் பணி என்ற பெயரில் சில வெளிநாடுகளும்ää அரச சார்பற்ற நிறுவனங்களும் சிறிலங்காவிற்குள் ஊடுருவி விடுதலைப்புலிகளுக்கு இராணுவ உதவிகளைப் புரிந்து வருவதால் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவரும் வெளிநாடுகள் மற்றும் அவர்களது பணி குறித்து உடன் விசாரணை செய்யப் படவேண்டும்" எனச் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் ஜே.வி.பி. விடுத்துள்ள கோரிக்கையானது ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல. ஆயினும்ää எதிர்கால அரசியலை இலக்காகக் கொண்டதாகும்.
இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் ஜே.வி.பியின் இந்நிலைப்பாடு வழமையானதுபோல் ஆகிவிட்டது. அதாவதுää சுனாமியினால் ஏற்பட்ட அழிவிற்கான நிவாரணமாகட்டும்ää யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்பிற்கான நிவாரணம் ஆகட்டும் தமிழ் மக்கள் கைகளில் அவை சென்று சேருவதை அனுமதிக்கும் நிலையில் ஜே.வி.பியினர் இல்லை. இத்தகைய நிலையில்ää தற்பொழுது கிட்டும் மிகச் சிறிய அளவிலான உதவிகள்கூட தமிழ் மக்களைச் சென்றடைவதைத் தடை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் புனர்நிர்மாணப் பணிகளுக்காகப் பெரியளவிலான நிதிகள் சென்று சேருவதைத் தடை செய்வதே ஜே.வி.பியின் நோக்கமாகும்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பாதிப்புக்களுக்கு ஏற்ற வகையில் தமது நிவாரண உதவிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதே இலங்கைக்கு உதவி வழங்கிய அநேக நாடுகளின் எதிர்பார்க்கை ஆகும். இது குறித்து சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் அவை வலியுறுத்திக் கூறவும் தவற வில்லை.
இதேசமயம்ää சில மேற்கு நாடுகள் தம்மால் வழங்கப்படும் நிதி உதவிகள் வடக்கு-கிழக்கிற்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றனவா என்பது குறித்து தமது அவதானிப்புக்கள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளன. இதேவேளைää ஐ.நா. சபைää உலக வங்கி போன்ற அமைப்புக்கள் வழங்கப்படும் நிதி உரிய முறைகளில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்கவும்ää கணக்கறிக்கைகளைப் பரிசீலிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டும் உள்ளன.
இன்னொரு புறத்தில்ää சில அரசாங்கங்கள் சுனாமி அனர்த்தத்திற்கென அறிவிக்கப்பட்ட நிதி உதவியின் ஒரு பகுதியை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக வழங்கவே முன்வந்துள்ளன. உதவி வழங்கும் நாடுகளின் இத்தகைய நிலைப்பாடுகள் தமிழ் மக்களுக்கும் சிறிதளவேனும் சர்வதேச நிதியுதவிகள் சென்றடைந்துவிடுமோ என்ற சந்தேகத்தை ஜே.வி.பி.க்குத் தோற்றிவித்துள்ளது.
இவை யாவற்றிற்கும் மேலாக தற்பொழுது அரசாங்கம் சர்வதேச நாடுகளின் நிதியுதவிகளைப் பயன்படுத்துவது குறித்து ஒரு பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து அரசää புலிகள் சமாதானச் செயலகங்கள் ஊடாக விடுதலைப்புலிகளுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் ஜே.வி.பி.க்கு மேலும் சினத்தைத் தோற்றுவிப்பதாகியுள்ளது. ஏனெனில்ää இதன் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் நிதி விடுதலைப்புலிகளுக்கும் பங்கிடப்பட வேண்டிய தேவைää காட்டாயம் உருவாகிவிடும் என்ற அச்சத்தை ஜே.வி.பிக்கு ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடுää இவ்விடயத்தில் சந்திரிகா அரசிற்கும்ää விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஓர் புரிந்துணர்வு ஏற்படுமானால்ää இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முயற்சிகளிலும் முன்னேற்றம் காணக்கூடியதொரு சூழ்நிலையும் உருவாகலாம் எனவும் ஜே.வி.பி. அச்சமடைந்துள்ளது. அத்தகையதொரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் தமது இனவாத அரசியல் பாதிப்பிற்குள்ளாகவும் அது தமது எதிர்கால அரசியலைப் பாதிக்கவும் கூடும் என அது அச்சம் கொண்டுள்ளது. இத்தகையதொரு நிலையில்தான் தமிழ் மக்களுக்குச் சர்வதேச நிதியுதவிகள் எவையும் கிட்டிவிடாது தடுக்கும் வகையிலும் அரசாங்கத்திற்கும் - விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நிதியுதவிகள் பயன்பாடு குறித்த பேச்சுக்களில் முன்னேற்றம் காண முடியாத வகையிலும் தடைகளை உருவாகும் வகையில் ஜே.வி.பி. சர்வதேச நாடுகளினதும்ää அரச சார்பற்ற நிறு வனங்களினதும் செயற்பாடு குறித்து விசாரணைக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கை மூலம்ää அரச சார்பற்ற நிறுவனங்கள் வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளில் முட்டுக் கட்டைகளைத் தோற்றுவிக்க முடியும். ஏற்கனவே அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் - குறிப்பாகää கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வந்திறங்கும் நிவாரணப் பொருட்கள் மீதான சுங்கப் பரிசோதனை உட்பட்ட கெடுபிடிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிவாரணப் பணிகளைப் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. இதனை மேலும் தீவிரமாக்கச் செய்வதன் மூலம் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டை பெருமளவில் முடக்கிவிட ஜே.வி.பி. முற்பட்டு நிற்கின்றது.
இதேபோன்று அரசு சிறிதளவேனும் தமிழருக்கு நேரடியாக வழங்கிய உதவிகள் தொடர்ந்தும் இடம்பெறாது தடுத்துவிடும் நோக்;கிலேயே தற்பொழுது ஜே.வி.பி. குரல் எழுப்பத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவே மனிதாபிமான உதவிகள் கூட இராணுவ உதவிகளாக மாற்றம் கண்டுள்ளது. ஆனால்ää ஜே.வி.பி யினரின் இந்நிலைப்பாடு புதிதானதும் அல்லää எதிர்பார்க்க முடியாததுமல்ல.
ஏற்கனவேää டோக்கியோ மாநாட்டில் பெருந்தொகை நிதி உதவிகளை வழங்க உதவி வழங்குவோர் தயாரானபோதும் அதில் ஒரு பகுதி தமிழர் தாயகப்பகுதிக்குச் சென்றடைந்துவிடும் என்ற காரணத்தினாலேயே ஜே.வி.பி. அதற்கு எதிராகப் போர்க் கொடிதூ}க்கியது. தற்பொழுதும் அவசர நிவாரண உதவிகள் யாவும் கிடைக்கப்பெற்றுää உடனடி நிவாரணப்பணிகள் யாவும் தெற்கில் பூர்த்தியானதும் உதவிகள் வடக்கு-கிழக்கிற்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில்ää சர்வதேச உதவி தொடர்பான சர்ச்சையை அது தோற்றுவித்து வருகின்றது.
ஜே.வி.பியின் இன்றைய நிலைப்பாட்டின்படிää ஏகாதிபத்தியமோää வெள்ளைத்தோலோ என்ற பேச்சுக்கள் எல்லாம் இல்லை. சர்வதேச உதவிகள் வேண்டாம்ää எங்கள் கால்களில் நாங்கள் நிற்போம் என்ற குரலும் இல்லை. தற்பொழுது அவர்களின் குரல் தமிழரின் கைகளில் சர்வதேச நிதியுதவிகள் சென்றடையக்கூடாது என்பதும்ää சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கும் சூழ்நிலையை சுனாமி அனர்த்தம் உருவாக்;கிவிடக்கூடாது என்பதுமே.
நன்றி: ஈழநாதம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>