02-03-2005, 07:19 PM
Quote:[quote="தாலாட்டு ஒப்பாரி எல்லாம் நாட்டார் பாடல்களா
அவையும் நாட்டார் பாடல் களில் அடங்கும்நாட்டார் பாடல்களிற்கு இப்படித்தான் பாடவேண்டும் இன்னஇராகம் எனகிற வரையறையெல்லாம் இல்லை அவை கிராமத்து பாமர மக்களை போலவே சுதந்திரமானவை. ஏனெனில் அவை அவர்களால்தான் பாடப் பெற்றது கோயில் திருவிழாக்கள் திருமணங்களில் தொழிழாளர்கள் தம் அலுப்பை மறக்க பெண் ஆணை கேலிசெயது அல்லது ஆண் பெண்ணை கேலி செய்து .காதலர்கள் .வீரர்களிற்கு மரண வீட்டில் என்று மனிதனின் எல்லா வாழ்க்கை முறைகளிலும் அதன் முறை களையும் பிரதிபலிப்பனவாய் இருந்தவை இந்த பாடல்கள் எழுத படிக்க தொரியாத பாமரர் களாலேயே இவை அதிகம் பாடப்பட்டதால் அதிக மான பாடல்கள் எழுத்தில் இல்லை அதைவிட பின்னர் சினிமா பாடல் களின் ஆதிக்கத்தால் அவை இன்று முற்றாக அழிந்த நிலையிலேயே உள்ளது ஏனெனில் இன்று ஒப்பாரியை தவிர மிகுதி எல்லா இடங்களிலும் சினிமா பாடல்களே...............
தாலாட்டு கூட யாரும் இன்று பாடுவதில்லை (காரணம் பாட தெரியாது)எனக்கு நினைவு தெரிந்து யாழில் கோவில் பொங்கல் காலங்களிலும் மற்றும் மட்டகளப்பு வன்னி பகுதிகளில் வயலில் வேலை செய்வோரும் பாடும் போது கேட்டிருக்கிறேன்(80களின் இறுதியில்)இப்போ அதுகும் இருக்குமா தெரியவில்லை??
; ;

