02-03-2005, 03:54 PM
அனர்த்த நிவாரணம் அமைதி முயற்சி ஆகியவற்றை உறுதி செய்ய கிளிண்டன் நியமனம்
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணி தொடர்பில் சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடரும் இழுபறித்தீர்வு காண உதவிபுரியவும் அனர்த்த நிவாரணப்பணிகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனான் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனை ஐ.நா.வின் சிறப்புத்தூதராக நியமிக்கவுள்ளார்.
இந்தத் தகவலை ஜ.நா. இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிளிண்டனின் நியமனம் குறித்த ஐ.நாவின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழிப்பேரலையால் பயங்கரமாகப் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாää சிறீலங்கா ஆகிய நாடுகளில் மீள்கட்டுமானப்பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஐ.நாவின் விசேட தூதுவராக கிளிண்டனை நியமிக்க எண்ணியுள்ள அனான்ää இந்த இரு நாடுகளிலும் அரசுக்கும் விடுதலை அமைப்புக்களுக்கும் இடையில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சச்சரவுகளுக்கான தீர்வுக்கும் கிளிண்டன் உதவவேண்டும் எனக்கருதுகிறார் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தோனேசியாவிலும் சிறீலங்காவிலும் சுதந்திரத்துக்காக இருதசாப்த காலத்துக்கு மேலாகப் போராடிவரும் இயக்கங்களுக்கும் அந்நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையில் பணியாற்றி தனது அரசியல் முதிர்ச்சி மூலம் நல்ல பங்களிப்பை நல்கி தீர்வுக்காக உழைக்க கிளிண்டனுக்கு நல்ல சந்தரர்ப்பம் கிடைத்துள்ளது என்று ஐ.நா. வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
ஆழிப்பேரலையால் அழிந்துபோன இடங்களைப் பார்வையிட சிறீலங்காவுக்கு அண்மையில் வந்திருந்த கோபி அனானை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் செல்லவிடாமல் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா தடுத்தமை குறிப்பிடத்தக்கது.
புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>