02-03-2005, 03:46 PM
காதல் எனக்கு ரொம்ப தூரம்: த்ரிஷா!
<img src='http://www.thatstamil.com/images26/cinema/trisha_7-425.jpg' border='0' alt='user posted image'>
வீடியோ விவகாரத்தையும் மீறி த்ரிஷா முகத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை.
காரணம் அவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி, இரண்டில் ஒன்று படு ஹிட்டாகவும் இன்னொன்று ஓரளவுக்கு நன்றாகப் போவதாகவும் வரும் தகவல் தான்.
த்ரிஷா அறிமுகமான புதிதில் அவர் பெரிய ரவுண்டு வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதற்கேற்றார்போல ஆரம்பத்தில் அவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடவும் இல்லை.
உனக்கு 18, எனக்கு 20 படத்தில் ஷ்ரியாவின் தோழியாக நடித்த த்ரிஷாவுக்கு சில ஆயிரம் தான் சம்பளமாகத் தரப்பட்டது. ஆனால் சாமி வந்தது, அதில் மாமியாக நடித்த த்ரிஷா விஸ்ரூபம் எடுத்துவிட்டார்.
சாமியில் அவர் போட்ட ஆட்டம், அவரை உச்சத்திற்குக் கொண்டு போய் நிறுத்திவிட, அடுத்தடுத்து த்ரிஷா நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகிவிட மிக ராசியான நடிகைகள் பட்டியலில் முதல் வரிசையைப் பிடித்ததோடு சம்பளத்தையும் தெலுங்கில் ரூ. 85 லட்சமாகவும் தமிழில் ரூ. 40 லட்சத்துக்கும் அதிகமாகவும் உயர்த்திவிட்டது பழைய கதை.
படு வேகமாக போய்க் கொண்டிருந்த த்ரிஷாவுக்கு ஸ்பீட் பிரேக்கர் போல அமைந்தது இன்டர்நெட்டில் வெளியான நிர்வாண வீடியோ விவகாரம். ரொம்பவே நொந்து போன த்ரிஷா, "அது" நான் இல்லை என்று எவ்வளவோ விளக்கம் தந்தாலும் விவகாரம் ஓயாமல் போகவே வெறுத்துப் போனார்.
இந்த விவகாரத்தால் மனதில் ஏற்பட்ட கடும் வலியைப் போக்கிவிட்டன இரு வெற்றிப் படங்கள்.
பொங்கல் அன்று தெலுங்கில் அவர் ஹீரோயினாக நடித்து ரிலீஸ் ஆன "நுவ்வே ஸ்டானன்டே நனோ தந்தானா" என்ற பட¬ம் மெகா ஹிட் ஆகிவிட்டது.
இதில் த்ரிஷா கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். படத்தை இயக்கியிருப்பவர், பிரபு தேவா! த்ரிஷாவுக்கு ஜோடியாக பாய்ஸ் பட நாயகன் சித்தார்த் நடித்தார். இதில் பிரபுதேவா சொல்லித் தந்த டான்ஸ் மூவ்மெண்ட்சுக்கு த்ரிஷா போட்ட ஆட்டத்துக்கு ஆந்திராவே ஆடிக் கொண்டிருக்கிறது.
அதே போல விஜய்யுடன் நடித்த திருப்பாச்சியும் வசூலில் ஓகே ரகத்தில் உள்ளது. பொங்கல் ரேசில் அந்தப் படம் தான் முன்னணியில் உள்ளது. கில்லி அளவுக்கு வசூல் நிச்சயமாக இல்லாவிட்டாலும் போட்ட காசை எடுத்துவிட்டது.
இதனால் த்ரிஷாவின் மார்க்கெட் தெலுங்கில் மேலும் சில படிகள் மேலே போய் நிற்க, தமிழிலும் அவரது திடமாக மார்க்கெட்டில் எந்த சரிவும் இல்லை.
தொடர் வெற்றிகளால் ரொம்ப சந்தோஷமோ என்று த்ரிஷாவிடம் கேட்டால்,
இந்த வெற்றிகள் எல்லாம் ஈசியா வந்துடலை. கடின உழைப்பும், காயங்களும் உண்டு. கூட நடிக்கும் ஹீரோக்களையும் என்னையும் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. திருமணமானவர்களையும் விடவில்லை. அவர்களுடனும் இணைத்துப் பேசினார்கள்.
இதனால் நல்ல நண்பர்களின் நட்பை இழந்தது தான் மிச்சம். சினிமா வாழ்க்கை கடினமானது. ஆஸ்திரேலியாவுக்குப் போய் படிப்பைத் தொடரலாமா என்று கூட ஒருமுறை முடிவு செய்தேன்.
ஆனால், அங்கு போய் மனம் மாறியதும் திரும்பி வந்துவிட்டேன். நானும் அம்மாவும் சேர்ந்து குடிப்பதாகக் கூட செய்திகள் போடுகிறார்கள். இண்டர்நெட் நிர்வாண படம் வேறு. கிராபிக்ஸில் அந்தப் படத்தை தயார் செய்து என்னை சம்பந்தப்படுத்திவிட்டார்கள்.
அந்த அதிர்ச்சி இன்னும் போகவில்லை. ஆனாலும் தொடர்ந்து நல்ல படங்களில் நல்ல ரோல்கள் செய்து, அதில் கிடைக்கும் வெற்றிகள் என மன வலியை போக்கிவிடுகின்றன என்றார்.
கூடவே, எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம் என்ற தகவலையும் சொன்னார் த்ரிஷா.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>