Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேலும் புகழ் சேர்க்கும் ஐஸ் அக்கா...!
#1
<img src='http://thatstamil.com/images26/cinema/aish8-500.jpg' border='0' alt='user posted image'>

<b>அமெரிக்க டிவியில் ஐஸ்வர்யா ராய்..!</b>

அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் லேட் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார்.

சி.பி.எஸ். தொலைக்காட்சி நிறுவனத்தின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று லேட் ஷோ. இது எம்மி விருது பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் வரும் 9ம் தேதி ஐஸ்வர்யாராய் பங்கேற்கிறார்.

இதற்கு முன்னதாக சி.பி.எஸ். தொலைக்காட்சியின் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சிக்காக ஐஸ்வர்யாராய் மும்பையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.

இந் நிலையில் நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெறும் லேட் ஷோ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராய் தனது முதல் ஹாலிவுட் படமான 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்' குறித்து டேவிட் லெட்டர்மேனுடன் உரையாடுகிறார்.

இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ வரும் 11ம் தேதி அமெரிக்காவில் நடைபெறுகிறது. பெண்ட் இட் லைக் பெக்ஹாம் படத்தை இயக்கிய, வெளிநாடுவாழ் இந்தியரான குரீந்தர் சாதா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் மார்டின் ஹெண்டர்சன், நவீன் ஆண்ட்ரூ மற்றும் அனுபம் கேர் நடித்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக, மேரில் ஸ்ட்ரீபுடன் 'கேயாஸ்' என்ற படத்திலும், மைக்கேல் டக்ளசுடன் 'ரேசிங் த மான்சூன்' என்ற படத்திலும் ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளார்.

தட்ஸ்தமிழ்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மேலும் புகழ் சேர்க்கும் ஐஸ் அக்கா...! - by kuruvikal - 02-03-2005, 01:50 PM
[No subject] - by KULAKADDAN - 02-03-2005, 01:57 PM
[No subject] - by tamilini - 02-03-2005, 02:08 PM
[No subject] - by Niththila - 02-03-2005, 03:18 PM
[No subject] - by kuruvikal - 02-03-2005, 03:25 PM
[No subject] - by Niththila - 02-03-2005, 03:33 PM
[No subject] - by Mathan - 02-03-2005, 03:39 PM
[No subject] - by Malalai - 02-03-2005, 06:50 PM
[No subject] - by sinnappu - 02-03-2005, 10:02 PM
[No subject] - by tamilini - 02-03-2005, 10:22 PM
[No subject] - by tamilini - 02-10-2005, 03:48 PM
[No subject] - by shiyam - 02-10-2005, 06:36 PM
[No subject] - by anpagam - 02-10-2005, 09:40 PM
[No subject] - by tamilini - 02-10-2005, 09:44 PM
[No subject] - by kavithan - 02-11-2005, 02:13 AM
[No subject] - by வினித் - 01-03-2006, 08:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)