02-03-2005, 04:08 AM
ஆழிப்பேரலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை அடையாளம் காண மரபணு பரிசோதனைக்கு உத்தரவு
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/02/baby_81_06_36601_200.jpg' border='0' alt='user posted image'>
ஆழிப்பேரலையில் அநாதரவான நிலையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையின் பராமரிப்பிலுள்ள 4 மாத ஆண் குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோரை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 26ம் திகதி மாலை கல்முனை பகுதியில் அநாதரவான நிலையில் எஸ்.சிறீஸ்கந்தராஜா என்பவரால் கண்டெடுக்கப்பட்டு எஸ்.அழகையா என்பவர் ஊடாக இந்த குழந்தை கல்முனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட இந்த குழந்தைக்கு பல பெற்றோர்கள் தமது குழந்தை என வைத்தியசாலை நிர்வாகத்திடம் உரிமை கோரியிருந்தனர்.
இருப்பினும் கல்முனையைச் சேர்ந்த ஜெயராஜா - ஜூனித்தா தம்பதிகள் இந்த குழந்தை தங்களுடைய குழந்தை அபிலாஸ் எனக் கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
கடந்த 12ம் இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற போது குறிப்பிட்ட தம்பதிகளிடம் பராமரிப்பிற்காக குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்தது.
வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் கே.முருகானந்தம் மகப்பேற்று வைத்திய நிபுணர் எம்.முகுந்தன் ஆகியோர் நீதிபதியைச் சந்தித்து குழந்தையின் உடல் ஆரோக்கியம் கருதி தொடர்ந்து வைத்தியசாலைப் பராமரிப்பில் வைப்பதற்கு அனுமதி கேட்டது.
இதனையடுத்து குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலை பராமரிப்பில் இருந்து வருகிறது.
இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.பி.முகைதீன் முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பெற்றோர் எனக் கூறும் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழந்தைக்கு பல பெற்றோர் உரிமை கோரியிருந்தாலும் சட்ட ரீதியாக குறிப்பிட்ட தம்பதிகளே உரிமை கோரியிருப்பதால் குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்குமாறு வாதிட்டனர்.
மகப் பேற்று வைத்திய நிபுணர் எம்.முகுந்தன் தமது சட்டத்தரணி ஊடாக சமர்ப்பித்த வாதத்தில் தற்போது ஆழிப்பேரலையினால் பல பெற்றோர்கள் தமது குழந்தைகளை இழந்துள்ளனர்.
எதிர்காலத்தில் மேலும் சிலர் இக் குழந்தைக்கு சட்ட ரீதியாக உரிமை கோர இடமுன்டு.
இந்நிலையில் உரிமை கோருபவர்களையும் குழந்தையையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலமே பெற்றோரை அடையாளம் காண முடியும் என்றார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி குழந்தையையும் அதற்கு உரிமை கோரும் பெற்றோரையும் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
எதிர்காலத்தில் யாராவது உரிமை கோரினால் அவர்களையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதுவரை குழந்தை வைத்தியசாலை பராமரிப்பில் இருக்க வேண்டும்.
உரிமை கோரும் பெற்றோர் வைத்தியசாலை சட்ட திட்டத்திற்கு அமைய பார்வையிட முடியும் என்றும்䤠தனது உத்தரவில் குறிப்பிட்டு விசாரனையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதற்கிடையில் குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலை பராமரிப்பில் இருக்க வேண்டும் என நீதிமன்றத்தினால் விடுக்ப்பட்ட உத்தரவையடுத்து ஆத்திரமடைந்த உரிமை கோரும் தம்பதிகளும் அவர்களது உறவினர்களும் நீதிமன்றத்திற்கு வெளியே வந்து வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினார்கள்.
அங்கிருந்து நேரடியாக வைத்திசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழந்தையை எடுத்துச் செல்ல முற்பட்டார்கள். இதனால் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் அவர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக வைத்தியசாலை அலுவல்கள் ஓரிரு மனித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன.
இதனையடுத்து பொலிசார் அங்கு வரவழைக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இவர்கள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கும்䤠வைத்திசாலை ஊழியர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகம் செய்தமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட போதிலும் பின்பு நிலமை சுமூக நிலைக்கு திரும்பியுள்ளது.
குழந்தைக்கு உரிமை கோரும் விவகாரத்தில் கைது செய்யப்பட்டோர் விளக்கமறியலில்
கல்முனை ஆதரார வைத்தியசாலையில் இன்று நண்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவர் நிபந்தனையின் பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்ப்பட்டுள்ளனர்.
ஆழிப்பேரலையின் பின் மீட்கப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரும் தம்பதிகளான முருகுப்பிள்ளை ஜெயராஜா அவரது மனைவி ஜூனித்தா ஜெயராஜா ஆகியோரே நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இன்றிரவு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மரபண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பொலிசார் நீதிபதி கே.தட்சனாமூர்த்தி முன்னிலையில் சமர்ப்பித்த அறிக்கையையடுத்தே இவர்களுக்கு பினை வழங்கப்பட்டது.
குழந்தையை வைத்தியசாலைக்கு சென்று பார்ப்பது என்றால் இருவர் மட்டும் தான் செல்ல வேண்டும் என்றும் நீதிபதி இவர்களுக்கு எச்சரிக்கையுடன் உத்தரவிட்டார்.
வைத்திசாலையில் சட்ட விரோதமாகக் கூடியது. அத்துமீறி பிரவேசித்தது䤠தாதியர்களை தாக்கியது䤠போன்ற குற்றச்சாட்டுக்கள் இந்த நால்வர் மீதும் பொலிசாரால் சுமத்தப்பட்டுள்ளது.
ஏனைய சந்தேக நபர்களான சாமித்தம்பி சிறீஸ்கந்தராஜா தாமோதரம் பிரதீபன் ஆகியோரே எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
News: Puthinam
Photo: TamilNet

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>