02-03-2005, 01:31 AM
thamizh.nila Wrote:ரவா இட்டலி............ :wink:Quote:தேவையான பொருட்கள்
ரவா 4 கப்
கடுகு ஒரு தேக்கரண்டி
உளுந்து இரண்டு தேக்கரண்டி
கடலைப்பருப்பு இரண்டு தேக்கரண்டி
அப்பச்சோடா கால்த்தேக்கரண்டி
உப்பு அரைத்தேக்கரண்டி
முந்திரிப்ருப்பு (விரும்பினால்) எட்டு
கருவேப்பிலை தேவையான அளவு
எண்ணெய் 2 தேக்கரண்டி
தயிர் ஒரு கப்
இரும்புச்சட்டியில் எண்ணெய்விட்டு கடுகைப்போட்டு தாளிக்கவும்.கடுகு வெடிக்க உளுந்து மற்றும் கடலைப்பருப்பைபோட்டு வாசம் வரும்வரை வறுக்கவும். அதன்பின் ரவா உப்பு அப்பச்சோடாவைக்கொட்டி ரவா பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். இதை காற்றுப்புகாதபடி டின்னில் அடைத்து வையுங்கள். தேவையான போது தயிர் ஒரு கப் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து. இட்லிமா பதத்திற்கு ஏற்ப சிறிது நீர் சேர்த்து இட்லித்தட்டுகளில் ஊற்றி ஆவியில் அவியவைக்கவும். இரவா இட்லிமேல் சிறிது கொத்தமல்லி தூவி அலங்கரிக்கலாம். நெய் சேர்த்து செட்டிநாடு இட்லியாகவும் உண்ணலாம். சட்னி மற்றும் சாம்பாருடன் ஒரு பிடி பிடியுங்கள்;. எங்கள் ஊர் இஞ்சி சம்பலுக்கும் சுவையாக இருக்கும்
இந்த இட்லிக்கு என்ன பெயர்?? உடனே செய்வதற்கு அருமையான யோசனை.நன்றி.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

