02-02-2005, 08:11 PM
நிதிலா
தவறுகளை ஒத்துக்கொண்டதால் மட்டும் கவிஞர் கண்ணதாசனை ஞானி என்று சொல்லவில்லை. அவரது போற்றத்தக்க கருத்துக்கள் அவர் அனுபவம் என்று பல காரணங்கள். அதற்கும் மேலாக அவர் மனிதனாக வாழ முயற்சித்தார். தன் தவறுகளை தவறுகளாக ஒத்துக்கொண்டார். அவராக புகழைத்தேடிச்செல்ல வில்லை. காந்தி கூட நிறையத் தவறுகள் செய்தார் ஆனால் அவரது கொள்கைகளால் பின்பு மகாத்மா என் அழைக்கப்பட்டார்.
நீங்கள் சொன்னது போல தாமரை கூட எதிர்காலத்தில் ஞானியக மாறலாம். அதற்கான தகுதி அவரிடம் வரலாம். அதற்காக இப்போது அவர் செய்ததவறை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். யாரோ ஆண் செய்தான் என்பதற்காக பெண்ணும் அதேவிதமான தவறைச்செய்யலாம் என்பது எப்படி நியாயம். இந்த மாதிரி ஒரு செய்கையை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கண்டிப்பது சரியானதே.
பெண்ணியவாதிகள் காலச்சாரத்திற்கு கட்டுப்பட்டா செயல்படுகிறார்கள் ?எங்கே அப்படிப்பட்ட பெண்ணியவாதிகள் உள்ளார்கள். அப்படியாரும் இருந்தாலும் குறுகிய வட்டத்திற்குள் கோசம் போடுபவர்கள் உண்மையான பெண்ணியவாதிகளாக இருக்க முடியாது. அவர்கள் தங்களை பெண்ணியவாதிகள் என்று சமுதாயத்திற்கு காட்டிக்கொள்பவர்கள் அவ்வளவே. ஏனெனில் உண்மையான பெண்ணியவாதிகள் முதல் எதிர்ப்பது ஆணதிக்கத்தை மற்றும் அதன் அடிமைத்தனத்தை. ஆணாதிக்கம் கலாச்சாரத்துடன் இரண்டறக்கலந்துள்ளது. கலாச்சாரத்திற்கு பங்கம் வராமால் எப்படி அவர்கள் பெண்ணியம் பின்பற்ற முடியும். உதாரணமாக ஒரு சாதாரண குடும்பத்தில் பெண் ஆணுக்கு உணவு பரிமாறுவாள். பெண்ணிய எண்ணங்கொண்ட குடும்பத்தில் கணவனே உணவை எடுத்து உண்டு பாத்திரங்களை சுத்தப்படுத்தும் நிலை உள்ளது. எமது காலச்சாரத்தில் ஆணுக்கு உணவு கொடுத்து அதன்பின் உணவுஉண்பது பெண்களின் கடமையாக கருதப்படுகிறது. பெண் வீட்டில் இருந்தும் அவள் தொலைக்காட்சி பார்க்க ஆண் தானே உணவை எடுத்து உண்பது என்பது கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளபடாத செயல். நீங்கள் சொல்வது போல் கலாச்சாரத்தை உடைக்கும் செயல். கணவனுக்கு பணிவிடைகள் செய்து எப்படி ஒரு பெண் தன்னை பெண்ணியாவதி எனக் கூறமுடியும்?