06-20-2003, 11:07 AM
cannon Wrote:Quote:மனிதாபினாம்
எடியே பிள்ளய்,
" மனிதாபிமானம், ஜனனாயகம், சகோதரப் படுகொலை, கருத்துச் சுதந்திரம், மாற்றுக்கருத்துக்கள், ....." என்னடி உந்தப் புதுபுதுப் பெயரிகளிலை புதுக் கூத்துக்கள் போடுறீங்கள்..
என்னடி பிள்ளய், வெளி நாட்டுக்கு விட்டுட்டு ஓடியந்துட்டா, முன்னே செய்ததுகளை மறந்திடுகிறதோ?, திரும்ப வரவிட்டாலும் உதைத்தானே செய்யவும் போறியள்?, எடியே நீ மேலே சொன்னதை, நீங்கள் தானடி எல்லோருக்கும் காட்டிக்கொடுத்தனீங்கள்?, பழக்கியும் விட்டனீங்கள்?.
அடி பிள்ளய். வயலுக்குள்ளே களைகளை விட்டால் என்ன நடக்கும்?, அது போலத்தான் நாட்டுக்குள்ளேயும் களையத்தான் வேண்டுமடீ.
ஐயா நீங்கள் எதையும் சாடுங்கள் அது உங்கள் உரிமை அதைத்தந்ததே மனிதாபிமானம் தான் என்பதை உணர்ந்தீர்கள் என்றால் மனிதாபிமானத்தை சீண்டமாட்டீர்கள்...ஆனால் ஒன்று உண்மை... இன்று மனிதனை மதிக்க அவனை வாழ அனுமதிக்காத சக்திகளும் மனிதாபிமானத்தை பாவிப்பதுதான் உங்கள் பக்கத்திற்கு சில வேளைகளில் நியாயம் சேர்க்கலாம்....ஆனால் ஒன்றை கவனித்துக்கொள்ளுங்கள் குற்றவாளிகளூம் மனிதர்களே...மனிதாபிமானத்தின் முன் சகலரும் மனிதர்களாகவே பார்க்கப்படுகின்றனர் . இன மத பிராந்திய குல குண அடிப்படையில் அல்ல. அப்படிப்பார்த்திருந்தால் மனித உரிமைகள் என்ற எல்லோருக்கும் பொதுவான உரிமைகள் கிடைக்க வாய்ப்பிருந்திருக்காது..நீங்களும் இங்கு இப்படி மனிதாபிமானத்தை கடித்துக் குதறி இருக்க முடியாது!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

