08-17-2003, 04:38 AM
இயல்பான கதை.. இயல்பான பாத்திரங்கள்.. பஞ்சாபி விசயத்தில் அந்தப் பெண் பாத்திரத்தின் மனதில் சந்தேகம் எழுவதை அற்புதமாக மிகவும் யதார்த்தமாக சித்தரித்திருக்கம் விதம் பாராட்டுதற்குரியது.. பல குடும்பங்களில் நிலவும் அவசர புத்தியால் எழும் சிந்தனையற்ற சந்தேகத்தை அப்படியே அந்த காட்சி மிகவும் தத்துரூபமாக வெளிப்படுத்துகிறது.
அந்த பஞ்சாபி அவளது பிறந்தநாளுக்கு வாங்கப்பட்டதுதான் என விளக்கமளிக்கும்போது.. அவள் உடனே தனது மகிழ்ச்சியை காட்டியிருந்தால்.. அந்தப் பாத்திரப் படைப்பே பாழாகியிருக்கும். தனது தவறை காட்டிக் கொடுக்க வெட்கத்திலோ அல்லது குற்ற உணர்விலோ அவள் மெளனமாக இருப்பது.. அந்தப் பாத்திரத்தின் போக்குக்கு மேலும் யதார்த்த வலுவையே சேர்க்கிறது.
வேலைக்குப் போகாத பெண் தனிமையாலும் வீட்டு வேலையாலும் வெறுப்படைகிறாள்.. வேலைக்குச் செல்பவனோ உடலாலும்.. மேலதிகாரிகளின் தொல்லையாலும் வெறுப்படைகிறான்.. அத்துடன் தனக்குதவி வேண்டுமென்பதற்காக நண்பனுக்கு வீடு மாற உதவி.. கோயிலுக்கு போற காட்சியின் மூலம் பல விடயங்களை மிகவும் எளிமையாக சுட்டிக் காட்டும் விதத்துக்கு.. அஜீவனின் முதுகில் இரண்டு தட்டுத் தட்டத்தான் வேண்டும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இன்னுமொரு தட்டு தட்டத்தான் வேண்டும்.. பலமாக.. அந்த இறுதி முடிவுக்காக.. சந்தேகங்களுக்க அப்பாலும்.. உள்ளங்களின் உரசல்களுக்கு அப்பாலும்.. பாசம் வெளிப்படுகிறதே.. அது.. அதில் நமது பண்பாட்டு படிவை அப்படியே பதித்துவிடுகிறார் அஜீவன்.. வாழ்த்துக்கள்.
சில சம்பவங்களை பொருத்தமான இசைகளின் மூலமும் பதிய வைத்து தனது திறமையை வெளிப்படுத்துகிறார் அஜீவன்.
நமக்குள் ஒரு திறமையான கலைஞன் நிமிர்ந்து நிற்கிறான. அவனைப் பயன்படுத்தி பெறுவதற்கு பற்பல உண்டு.. ஆகவே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றுமட்டும்தான் தற்போது கூறமுடிகிறது.
அந்த பஞ்சாபி அவளது பிறந்தநாளுக்கு வாங்கப்பட்டதுதான் என விளக்கமளிக்கும்போது.. அவள் உடனே தனது மகிழ்ச்சியை காட்டியிருந்தால்.. அந்தப் பாத்திரப் படைப்பே பாழாகியிருக்கும். தனது தவறை காட்டிக் கொடுக்க வெட்கத்திலோ அல்லது குற்ற உணர்விலோ அவள் மெளனமாக இருப்பது.. அந்தப் பாத்திரத்தின் போக்குக்கு மேலும் யதார்த்த வலுவையே சேர்க்கிறது.
வேலைக்குப் போகாத பெண் தனிமையாலும் வீட்டு வேலையாலும் வெறுப்படைகிறாள்.. வேலைக்குச் செல்பவனோ உடலாலும்.. மேலதிகாரிகளின் தொல்லையாலும் வெறுப்படைகிறான்.. அத்துடன் தனக்குதவி வேண்டுமென்பதற்காக நண்பனுக்கு வீடு மாற உதவி.. கோயிலுக்கு போற காட்சியின் மூலம் பல விடயங்களை மிகவும் எளிமையாக சுட்டிக் காட்டும் விதத்துக்கு.. அஜீவனின் முதுகில் இரண்டு தட்டுத் தட்டத்தான் வேண்டும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இன்னுமொரு தட்டு தட்டத்தான் வேண்டும்.. பலமாக.. அந்த இறுதி முடிவுக்காக.. சந்தேகங்களுக்க அப்பாலும்.. உள்ளங்களின் உரசல்களுக்கு அப்பாலும்.. பாசம் வெளிப்படுகிறதே.. அது.. அதில் நமது பண்பாட்டு படிவை அப்படியே பதித்துவிடுகிறார் அஜீவன்.. வாழ்த்துக்கள்.

.