02-02-2005, 01:33 AM
நறுக்கென? ஆட்சியைக் குழப்பும் சுனாமி.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலும் நடைபெறப்போவதில்லை என்ற சிறிலங்கா சனாதிபதியின் அதிரடி அறிவிப்பால் அதிகபட்சம் அதிர்ச்;சியடைந்து போயுள்ளார்கள். அவரது சகோதரரும், பிரதான பங்காளிகளும்தானாம்!
ஏப்படியாவது சனாதிபதிக் கதிரையில் ஒரு தடைவ குந்திவிட்டாவது எழும்பும் நாற்காலிக் கனவில் ?சதாபோதையுடன்? மிதக்கும் அனுரா பண்டாரநாயக்க தனது சகோதரியின் இந்த அறிவிப்பால் சோர்ந்து துவண்டு தொளதொளத்துப் போயுள்ளாராம்.
ஏற்கனவே ஜே.வி.பியினருக்கும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியினருக்குமிடையே தேர்தல் கால கூட்டணி அமைக்க உடல் குலுங்க அனரா ஓடியோடி புரோக்கர் பணியாற்றிய போது அடுத்த சனாதிபதித் தேர்தலில் அவருக்கு முழு ஆதரவளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்து ஜே.வி.பியினர் கடந்தவாரம் அடுத்த சனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்ததால் அலமலந்துபோன அநுரா இப்போது சகோதரியின் அறிவிப்பால் மனம் உடைந்தே போயுள்ளாராம்.
ஏல்லோருமே தன்னை ஒரு அரசியல் கோமாளியாகவே பார்க்கிறார்கள் என்ற எண்ணமும் அவருக்கு உருவாகியுள்ளதாம்.
ஆதனை விடவும் இப்போது ஜே.வி.பியினரின் அதிகார ? ஆதிக்க வெறியுடன் கூடிய செயற்பாடுகள் மற்றும் அறிக்கைகளால் ஆத்திரமும் ஆவசேமும் அடைந்த நிலையில் குமுறும் சந்திரிகா அவ்வப்போது அநுராவையும், அவரது சகபாடி புரோக்கரான மங்களசமரவீரவையும் அழைத்து ?உங்கள் தோழர்களை அளவுக்குமீறி அலட்ட வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கண்டித்ததால் ஒருவர் அசட்டு முழியும் மற்றவர் திருட்டு முழியும் முழிக்கத் தொடங்கியுள்ளனராம்.
இப்போதெல்லாம் ?உலகே மாயம்அவனியில்வாழ்வே மாயம்?; என்று குடிகார தேவதாஸ் பாணியில் உளறத் தொடங்கியுள்ள அனுராவை கட்சியின் சிரேஷ்ட தலைவர்களம் மதிப்பதில்லை. இவரால்தான் ஜே.வி.பியுடன் கூட்டணி அமைத்து கூத்தாட வேண்டி ஏற்பட்டது என்று எல்லோரும் குற்றம் சாட்டுவதும் உண்மையே.
ஜே.வி.பியும் அவரை ?ஆற்றைக் கடக்குமுன் அண்ணன் தம்பி, அதன் பிறகு நீ யாரோ, நான்யாரோ என்ற பாணியில் கையாள்வதாக உள்ளது.
சரி, ஐச்தாண்டுத் தேர்தல் இல்லை என்ற சனாதிபதி அறிவிப்பால் அநுராவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விடவும் ஜே.வி.பியினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அதிகமாக இருப்பதற்கு காரணம் சந்திரிகாவும் ஐ.தே.கட்சியும் ஏதோ நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஒன்றாக இணைந்து செயற்பட நேர்ந்ததால் தங்களது பதவிகளுக்கு மட்டுமல்ல அரசியல் எதிhகாலத்திற்கும் அச்சுறுத்தலாகிவிடும் என்றே ஜே.வி.பி அஞ்சுகிறது.
ஜே.வி.பியனரின் அதிகார மேலாதிக்க போக்கிற்கு சந்திகா கொடுத்துள்ள அதிர்ச்சி வைத்தியம் இந்;த அறிக்கை என்றும் சிலர் கூறுகிறார்கள். சுனாமி அலை அரசியல் அலையாகி நாட்டை குழப்பத் தொடங்கிவிட்டது போலும்.
Eelanaatham

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>