02-01-2005, 11:25 PM
[size=14]<b>மீண்டும் உயிர்க்கும் மூளைக்கு வேலை.</b>
<b>
நீண்ட காலமாக இப்பகுதி கவனிப்பாரற்று உள்ளபடியால் அதனை மீள உயிர்ப்பிக்க எண்ணி இச் சிறிய புதிரைத் தருகிறேன். </b>
<b>பொன்னூரைச் சேர்ந்த கண்மணியும் மின்மினியும் சிறுவயதிலிருந்தே இணைபிரியாத தோழிகள். காலவோட்டத்தில் மின்மினி 270 கி.மீ தூரத்திலுள்ள பொன்னகரத்தில் மணமுடித்து அங்கேயே சென்று வசிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஒரு சனிக்கிழமை இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க தத்தமது இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் புறப்பட்டனர். மின்மினி தனது காரில் 40 கி.மீ/மணி வேகத்தில் பொன்னூரை நோக்கியும், கண்மணி 10 கி.மீ/மணி வேகத்தில் பொன்னகரத்தை நோக்கியும் பயணித்தனர்.
இதேவேளை கண்மணியின் சகோதரன் பொன்முடி சகோதரி புறப்பட்ட செய்தியை மின்மினிக்கு தெரிவிக்க கண்மணி புறப்பட்ட அதே தருணத்திலேயே தனது மோட்டார் சைக்கிளில் 90 கி.மீ/மணி வேகத்தில் புறப்பட்டான். மின்மினியை சந்த்தித்து செய்தியை தெரிவித்துவிட்டு மின்மினியின் செய்தியை கண்மணிக்குத் தெரிவிக்க ஒரு நொடியையும் வீணாக்காது முந்தைய வேகத்திலேயே பயணித்தான். இவ்வாறு இரு நண்பிகளுக்கும் இடையில் மாறிமாறி செய்திகளை பரிமாறியவண்ணம் பலமுறை பொன்முடி பயணித்தான்.
இறுதியாக மூவரும் ஒரேநேரத்தில் பொன்னூருக்கும் பொன்னகரத்திற்கும் இடையிலுள்ள பொற்பதியில் சந்த்தித்து இளைப்பாறினர். பொன்முடி மோட்டார் சைக்கிளில் பயணித்த தூரம் எத்தனை கி.மீ?</b>

<b> . .</b>