Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆப்பிரிக்க மன்னரின் 13-வது மனைவி
#1
ஆப்பிரிக்க மன்னரின் 13-வது மனைவி

ஆப்பிரிக்க நாடான சுவாஸிலேண்ட் மன்னர் தற்போது 17 வயது பெண்ணை தன் 13-வது மனைவியாக்கி உள்ளார்.

ஆப்பிரிக்க நாடு சுவாஸிலேண்ட். இதன் முழு அதிகாரம் படைத்த கடைசி மன்னன் 3ம் மிஸ்வதி. இவர் இப்போது 17 வயது பெண்ணை தமது 13-வது மனைவியாக தேர்வு செய்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் தமது 12-வது மனைவியாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவரும், அழகு ராணி பட்டம் பெற்றவருமான பெண்ணை கரம் பிடித்திருந்தார் மன்னர். அந்த நாட்டு மரபுப்படி மன்னர் கைப்பிடிக்கும் பெண்கள் தாய்மை அடையாமல் போனால் அவர்களுக்கு மன்னாpன் மனைவி என்ற அங்கீகாரம் கிடைக்காது. இதன்படி 3 பெண்கள் அங்கீகாரம் இழந்தனர். சுவாஸி நாட்டில் அநேக மக்கள் வறுமையில் வாடு கின்றனர். இந்த நிலையில் மன்னர் ரூ.68 கோடி செலவில் தமது 10 அதிகாரபூர்வ மனைவிதான் அரண்மனைகளை புதுப்பித்து வருவது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு மன்னர் ஒரு ஆடம்பர கார் வாங்கினார். அதன் விலை ரூ. 2 கோடியே 15 லட்சம். அதில் டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர், 21 ஸ்பீக்கர் கொண்ட சர்ரவுண்ட் சவுண்டு சிஸ்டம், பிரிட்ஜ;, மது பாட்டில் அடுக்கு போன்ற வசதிகள் உண்டு.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஆப்பிரிக்க மன்னரின் 13-வது மனைவி - by Vaanampaadi - 02-01-2005, 12:45 PM
[No subject] - by sinnachi - 02-01-2005, 03:22 PM
[No subject] - by sinnappu - 02-01-2005, 05:10 PM
[No subject] - by vasanthan - 02-01-2005, 06:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)