Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய மருமகனாகின்றார் முத்தையா முரளிதரன
#1
உலக சாதனை படைந்த இளம் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் தமிழகப் பெண்ணை மணந்து இந்திய மருமகனாகிறார்.

சென்னையில் பிரபலமான மலர்மருத்துவமனை உரிமையாளரின் மகளை முரளி கரம்பற்றுகிறார் எனத்தெரியவருகின்றது.

இவர்களுடைய திருமணம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. வுரவேற்பு வைபவம் கொழும்பிலும் கண்டியிலும் இடம்பெறும். முணமகள் இதே மலர் மருத்துவமணையில் பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.முகாமைத்துவ நிர்வாகத்துறையில் விசேட பட்டம் பெற்ற மணமகளின் சகோதரியும் இதே மருத்துவமனையில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுள்ளார். மணமகளின் சகோதரியும் இதே மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றுகின்றார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்டி கட்டுகஸ்தோட்டையில் பிரபல தொழில் அதிபரான முததையா தம்பதிகளின் சிரே~;ட புதல்வராக 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி பிறந்தார் முரளி. இவருக்கு நான்கு சகோதரர்களும் இருக்கின்றனர்.

கட்டுகஸ்தோட்டை புனித அத்தோனியார் கல்லுரியில் கல்வி பயின்ற முரளிதரன் பாடசாலை கிரிக்கெட் அணியிலேயே சிறந்த பந்து வீச்சாளராக விளங்கினார்.

ஆரம்பம் முதலே சுழல் பந்து வீச்சில் ஆர்வம் கொண்ட முரளிää காலப்போக்கில் தன்னை ஒரு தலைசிறந்த சுழல்பந்து வீச்சாளராக நிரூபித்துக்கொண்டார்.

இது வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 532 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 369விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இந்திய மருமகனாகின்றார் முத்தையா முரளிதரன - by Vaanampaadi - 02-01-2005, 11:34 AM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 01:09 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 02:02 PM
[No subject] - by Vasampu - 02-01-2005, 02:26 PM
[No subject] - by shiyam - 02-01-2005, 02:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)