02-01-2005, 07:20 AM
aathipan Wrote:பெண்ணிய எண்ணம் கொண்டபெண்கள் மத்தியில் திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழ்தல் கூட ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தங்கள் சுதந்திரம் அது இது என்று அவர்கள் அதற்கு காரணம் சொல்கிறார்கள். இப்படியிருக்கும் போது திருமணமான ஒருவரை மீண்டும் (அந்தக்குடும்பத்தைக் சீர்குலைத்து) திருமணம் செய்துகொள்வதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதற்கும் அவர்கள் விளக்கம் சொல்ல தயாராக இருப்பார்கள். பெண்ணிய சிந்தனையில் பெண்கள் வாழ்வை பெண்களே சீர்குலைக்கும் செயல்களுக்கு என்ன நியாயம் உண்டு என தெரியவில்லை. எல்லா செயல்களுக்கும் அவர்கள் சுதந்திரம் என்று நியாயம் கூறமுற்படலாம்.
கண்ணதாசனை இந்த விடயத்தில் ஏன் இழுக்க வேண்டும். அவர்தான் தன் தவறுகளை ஒத்துக்கொண்டவராயிற்றே. அவர் ஞானி. அவரை இதில் சேர்க்க வேண்டுமா?
பெண்ணிய எண்ணம் கொண்ட முற்போக்கு பெண்களின் கருத்து என்ன? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
வணக்கம்,
அதென்னங்க கண்ணதாசன் ஞானி என்றால், தாமரை கூனியா? நல்ல தெளிவான உங்கள் பார்வைகள். யார் செய்தாலும் குற்றம் குற்றம்தானே. நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே. கண்ணதாசனுடய வயதினை எட்டும்போது தாமரையும் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வாரோ என்னமோ. கண்ணதாசன் இரண்டாம்தாரமாக திருமணம் செய்துகொண்டாலும் அங்கே ஒரு குடும்பம் சிரளிக்கப்பட்டது என்பதுவே உண்மை.
அன்புடன்
மதுரன்

