Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Ricky Martin
#1
Ricky Martin

<img src='http://www.celebwelove.com/Ricky_Martin/ricky_martin05.jpg' border='0' alt='user posted image'>

இங்கிருக்கும் பலரைப்போலவே எனக்கும் Ricky Martin என்றதும் "Livin' La Vida Loca"தான் ஞாபகம் வரும். இப்போது கேட்டாலும் உற்சாகத் துள்ளல் தன்பாட்டில் ஓடி வரும். ஒரு காலத்தில் எங்கே பார்த்தாலும் Ricky Martin என்ற பெயரையும் புகைப்படங்களையும் பார்க்கலாம். ஆனால், இப்போது ஆளை எங்கேயுமே காணக் கிடைப்பதில்லை.

சமீபத்தில் Oprahவின் நிகழ்ச்சியில் Ricky Martinஐக் காணக்கூடியதாக இருந்தது. ரிக்கி மார்ட்டினின் பெயரைச் சொன்னதுமே ஒரே கூச்சலும் கும்மாளமுந்தான். ஆனால், ரிக்கி மார்ட்டினின் முகம் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தது. நிகழ்ச்சி அப்படிப்பட்டது. "Livin' La Vida Loca" ரிக்கி மார்ட்டினை விட, இந்த ரிக்கி மார்ட்டின் என்ன சொல்ல வருகிறார் என்று கவனமாகக் கேட்க வைத்தது.

சமீபத்தைய சுனாமிப் பேரழிவு பற்றிய செய்திகளுக்கு நடுவில் ரிக்கி மார்ட்டின் தாய்லாந்து சென்றிருக்கிறார் என்ற ஒரு பெட்டிச் செய்தியை என்னைப்போல பலரும் படித்திருக்கலாம். ரிக்கி மார்ட்டின் தாய்லாந்துக்குச் சென்றது சுனாமியால் பாதிக்கப் பட்ட இள வயதினருக்காக. இளவயதினரை தத்தம் தொழில், கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துபவர் கூட்டம் தாய்லாந்தில் வந்து சேர்ந்தபடி இருக்கிறது என்ற செய்தியை அறிந்ததும் தான் அங்கு சென்றதாக ரிக்கி மார்ட்டின் சொன்னார். ரிக்கி மார்ட்டினோடு ஓப்ராவின் குழுவினரும் சென்றிருந்தனர். ஆதரவற்ற இள வயதினருக்காகத் தான் அங்கு தொடர் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து அங்கே தங்கி 600 வீடுகள் மற்றும் தேவையான வசதிகளைச் செய்து முடிக்கும்வரை தான் அங்கே இருக்கப்போவதாகவும் ரிக்கி மார்ட்டின் சொன்னார்.

அனாதரவான இளவயதினர் குழந்தைகள் எப்படிப்பட்ட கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை ரிக்கி மார்ட்டின் விவரிக்கும்போதே பார்வையாளர் கூட்டம் விக்கித்துப்போனது. ஓப்ராவிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, சமீபத்தில் கைதான Pedophile ஒருவனைப் பற்றிச் சொன்னார். அவன் ஐந்து மாதக் ஆண் குழந்தை ஒன்றை சீரழித்தான் என்று ரிக்கி மார்ட்டின் சொன்னதைக் கேட்டு விக்கித்துப்போகதவர்கள் இருக்க முடியாது.

உணர்ச்சி கொப்பளிக்கும் முகத்துடனான இந்த ரிக்கி மார்ட்டினை முந்தைய ரிக்கி மார்ட்டினை விட ரொம்பவே பிடித்திருந்தது. ரிக்கி மார்ட்டின், விவேக் ஓபராய் போல ஒரு சில ஹ¥ரோக்களும் இருக்கிறார்கள்.

rickymartinfoundation.org

நன்றி - மதி கந்தசாமி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
Ricky Martin - by Mathan - 02-01-2005, 03:22 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)