01-31-2005, 10:58 PM
shiyam Wrote:என்னவளிற்குஅண்ணணுக்கு நன்றியும் வாழ்த்தும்
தமிழினில்
கவிதனை
எழுதவே
நிலவினை
உதவி கேட்டேன்
வெண்ணிலவதோ
வியர்த்துபோய்
அது மன்மதனவன்
பகுதியென்றொதுங்கவே
புறப்படடேன்
குளக்காட்டுவழியே
எதிரே
மப்பிலே ஒரு அப்பு
குருவியை கலைத்து
கல்லெறிந்தபடி
நிறுத்தி அப்பு
கவியெழுதமதன்
தேடுகிறேன் என்றதும்
மேலும் கீழும் பார்த்தபடி
மதன் தெரியாது
(மது)ரனைத்தான் தெரியும்
உன் க(ஹ)ரி மூஞ்சைக்கு
கவிதையொரு கேடா
என்றார்.
என்ன செய்ய
அண்ணாந்து பார்த்தேன்
எனைபோலவே
சோகமாய்
வானத்தில் வானம்பாடி
என்னால் எழுதத்தான்
முடியவில்லை
அனைவருக்கும்
வாழ்துக்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

