Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கத்திக்குத்திற்கு இலக்கான குருக்கள் உயிரிழந்தார்
#1
கத்திக்குத்திற்கிலக்கான மதகுரு உயிரிழந்தார்.
திங்கட்கிழமை31 சனவரி 2005 மூதூர்
கத்திக்குத்திற்கிலக்காகி படுகாயமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு கதிரேசன் வீதி கதிரேசனாலய பிரதம குரு சபாரட்ண குருக்கள் சடானந்த குருக்கள் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கரவெட்டி துன்னாலையைச் சேர்ந்த இவர் கதிரேசன் ஆலயகுருமார் இளைப்பாறும் அறையில் கடந்த திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது அங்கு வந்த இருவர் "அப்பு சாமியை தெரியுமா?" என வினவியுள்ளனர். அதற்கு அவர் அவ்வாறு ஒருவரைத் தெரியாது என தெரிவிக்கவே அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அபகரித்துக் கொண்டு ஓட முற்பட்டனர் இச் சமயம் குருக்கள்ää ஓட முற்பட்டவர்களில் ஒருவரை எட்டிப் பிடித்து விடவே திடீரென மற்றவர் தான் வைத்திருந்த கத்தியால் குருக்களின் வயிற்றில் குத்திவிட்டு சங்கிலியுடன் தப்பிச் சென்றுவிட்டார்.

வயிற்றில் ஏற்பட்ட படுகாயத்திற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருக்கள் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றுக்காலை மரணமடைந்துள்ளார். இறக்கும் போது குருக்களுக்கு வயது 55.

Source : http://www.nitharsanam.com/?art=8432
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கத்திக்குத்திற்கு இலக்கான குருக்கள் உயிரிழந்தார் - by Vaanampaadi - 01-31-2005, 12:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)