Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இளம்பெண் கற்பழிப்பு சாமியாருக்கு இங்கிலாந்தில் ஜெயில் தண்டனை
#1
"கடந்த பிறவியில் நீதான் என் மனைவி'' என்று கூறி இளம்பெண் கற்பழிப்பு
இந்திய சாமியாருக்கு இங்கிலாந்தில் ஜெயில் தண்டனை


லண்டன், ஜன.31-

``கடந்த பிறவியில் நீதான் என் மனைவி'' என்று ஆசை வார்த்தை கூறி, இந்திய சாமியார் ஒருவர் இளம் பெண்ணை கற்பழித்தார். அவருக்கு இங்கிலாந்து கோர்ட்டில் ஜெயில் தண்டனை விதிக்கப்பட் டது.

கற்பழிப்பு வழக்கில் சாமியார்

அந்த சாமியாரின் பெயர் ஆர்.சோமநாதன் (வயது 41). தெற்கு லண்டனில் உள்ள இந்துக் கோவிலில் குருக்களாக இருந்து வந்தார். திருமணம் ஆன அவருக்கு, பெண்களிடம் சற்று சபலம் அதிகம்.

இங்கிலாந்தில் வசித்துவந்த 29 வயது தமிழ்ப் பெண்ணை அவர் இரண்டு முறை கற்பழித்து விட் டார். இதனால் கர்ப்பம் தரித்த அந்த பெண் பின்னர் கருக் கலைப்பு செய்து கொண்டார். இதுபற்றி அந்தபெண்ணின் புகாரின் பேரில் போலீசார் சாமியார் சோமநாதனை கைது செய்து லண்டன் குரோய்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் தனர். கற்பழிக்கப்பட்ட பெண், கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

ஜாதகம் பார்க்க சென்றபோது

இந்த கற்பழிப்பு சம்பவம் பற்றி அரசு வக்கீல் கிலியன் ஈத்தர்டன் கூறியதாவது:-

புதிய வீடு வாங்க முடிவு செய்த அந்தப் பெண் ஜாதகம் பார்ப்ப தற்காக முதலில் அந்த சாமி யாரை நாடி இருக்கிறார். அவரு டைய அழகில் மயங்கிய சோம நாதன் எப்படியும் அவரை அடைந்தே தீருவது என்ற முடிவில் ஆசை வார்த்தைகளை தனக்கே உரிய பாணியில் அள்ளி வீசினார்.

முற்பிறவியில் என் மனைவி

முதலில் ``உனது கண்கள் மிக அழகானவை'' என்ற அவர் ``நீ கணவரை பிரிந்து வந்தது நன்மைக்கே'' என்றார். ``கடந்த பிறவியில் நீதான் எனது மனைவி. அந்தபிறவியில் நீ தற்கொலை செய்து கொண் டாய். ஆனால், கடவுள் மீண்டும் என்னிடம் உன்னை அனுப்பி வைத்துவிட்டார்'' என்று கூறி முற்றும் உணர்ந்த முனிவர்போல் அந்த பெண்ணை `வசியம்' செய் தார்.

கடந்த 2002-ம் ஆண்டு ஜுலை 11-ந்தேதி அன்று தனது புதிய வீட்டில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்துக்கு சாமியார் சோமநாதனுக்கு அந்தப் பெண் அழைப்பு விடுத்து இருந்தார்.

இருமுறை கற்பழிப்பு

அந்த நிகழ்ச்சியில், இளம் பெண்ணின் அருகே அமர்ந்தபடி கட்டி அணைத்து முத்தமிட முயன்றார். ஆனால் சாமியாரின் இச்சைக்கு அவர் இணங்க மறுத்துவிட்டார். ஆனால் சோம நாதன் மனம் தளர வில்லை. அந்த பெண்ணின் தோள் மீது கைபோட்டபடி ``உன் மீது எனக்கு உரிமை உள் ளது. நீ இன்னும் என் மனைவி தான். உன்னை மிகவும் நேசிக்கி றேன்'' என்றார்.

பின்னர் அதற்கு ஒருபடி மேலே சென்று என் ஆசைக்கு இணங்காவிட்டால் கடவு ளுக்கே அது பொறுக்காது'' என்று எச்சரிக்கும் விதத்திலும் மிரட்டல் விடுத்து அந்த பெண்ணை பலவந்தமாக கற்பழித்து விட்டார். பின்னர் ``உன் வாழ்க்கை இனி ஒளி மய மாக இருக்கும்'' என்று ஆசீர் வதித்து இருக்கிறார். இதேபோல் 2003-ம் ஆண்டி லும் ஒருமுறை அந்தப் பெண்ணை கற்பழித்து இருக்கிறார்.

ஜெயில்

கைது செய்யப்பட்டு கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்ட சாமி யார் சோமநாதனுக்கு நீதிபதி ஜெயில் தண்டனை விதித்தார். தண்டனை விவரம் பற்றி பிப்ரவரி 18-ந்தேதி முடிவு செய் யப்படும் என்று நீதிபதி அறிவித் தார். அதைத் தொடர்ந்து சோம நாதன் சிறையில் அடைக்கப் பட்டார்.

சாமியாருக்கு எதிராக நீதி கேட்டு போராட முன்வந்த பெண்ணின் தைரியத்தை இங்கி லாந்து போலீஸ் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

Source: Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இளம்பெண் கற்பழிப்பு சாமியாருக்கு இங்கிலாந்தில் ஜெயில் தண்டனை - by Vaanampaadi - 01-31-2005, 11:53 AM
[No subject] - by kirubans - 01-31-2005, 09:13 PM
[No subject] - by kuruvikal - 01-31-2005, 09:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)