Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேடல்
#1
இவ் உலகமனிதர் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வென்றைப்பற்றித்தேடல்

அரசியல்வாதிக்கு எதிர்கால தலைமுறை பற்றித்தேடல்.
வைத்தியனுக்கு அதிக உழைப்பை பற்றித்தேடல்.
நடிகனுக்கு தனது பிரபல்யம் பற்றித்தேடல்.
ஆனால் எனக்கோ இவ் உலகில் மனிதநேயம் பற்றித்தேடல்.
கர்ப்பிணிகளுக்கு பஸ்சில் அமர இடங்கொடுக்காத இளையர்களிடம்,
பாடசாலைக்கல்வியைவிட தனியார் கல்விநிலையங்களில் அக்கறைகாட்டும் ஆசிரியரிடம்,
தனது ஆயுதபலத்தால் உலகநாடுகளை அச்சுறுத்தும் வல்லரசுநாடுகளிடம்
சிறுவர்களை தமது காம இச்சைக்கு பயன்படுத்தும் காமுகனிடம் மனித நேயத்தை தேடுகிறேன்....

தேடி தேடி விடைகாணாததால் இவ்வுலகத்தை படைத்த ஆண்டவனைத்தேடுகிறேன்.




மீன்முள்

உயிரோடு கொன்ற பாவத்திற்க்கு
பழி தீர்த்தது தொண்டையில் முள்.


<span style='font-size:25pt;line-height:100%'>பெண்ணுரிமை </span>

பெண்களுக்காக உயிரைத்தரச்சித்தமாகஇருக்கும் ஆண்கள்.
ஏனோ அவர்களின்உரிமையை தரமட்டும் சம்மதிப்பதில்லை.



பெறுமதி

கோழிக்கு வைரக்கற்களை விட
நெல்மணிகள் பெறுமதியானது
அதே போல நீ எனக்கு உலகஅழகியை
விட அழகானவள்..


சாரதி

பயணிகள் தூங்கினால் சொகுசுபயணம், நான் தூங்கினால் அவர்களுக்கு இறுதிப்பயணம்.



தொடர் நாடகம்

காலையிலிருந்து பட்ட கஷ்டத்தை
கனவாக மறக்க அயர்வாக அமர்ந்து
தொடங்கினேன்.தெலைக்காட்சியில்
தொடர்நாடகம் பார்க்க
அழதகண்ணீருடன் அபலைப்பெண்
சனலை மாற்றினேன்.அதில் மூவர்
சேர்ந்து கதறிக்கொண்டிருந்தார்கள்.
அலுப்புடன் மாற்றினேன் அடுத்த சனலை.
அதிலே ஒரு குடும்பமே சேர்ந்து
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது
அயர்வை மறக்க ஆசையுடன் வந்த
எனக்கு அழுகைதான் வந்தது......

தி அல்டிமேட் மெஷின்

துணி துவைக்க ஒரு மிஷினும்
மாவரைக்க ஒரு மிஷினும்
தரை துடைக்க ஒரு மிஷினும்
பொழுது போக்க ஒரு டிவியும்
சுமை தூக்க ஒரு வண்டியும்
எதற்கு பெண்ணே?
சீக்கிரமே ஒருவனை மணந்துக் கொள்!!.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
தேடல் - by Vaanampaadi - 01-30-2005, 02:47 PM
[No subject] - by sinnappu - 01-30-2005, 03:09 PM
[No subject] - by KULAKADDAN - 01-30-2005, 03:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)