Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தளபதி ராம் அவர்களின் விசேட செவ்வி.
#1
மட்டு அம்பாறை மாவட்ட தளபதி ராம் அவர்களின் விசேட செவ்வி.
சனிக்கிழமை 29 சனவரி 2005 வேலணை

தற்போது மட்டு - மட்டு அம்பாறை மாவட்ட நிலைமை பற்றியும்ää அங்கு நிகழும் புனர்நிர்மான செயற்பாடுகள் பற்றியும்ää மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தளபதி ராம் அவர்கள் அவர்கள் தந்த விசேட செவ்வி. கேள்வி : இந்த கடற்கோள் அனர்த்தம் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வட - கிழக்கு மக்களின் புனர்வாழ்வு சம்பந்தமாக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் புனர்நிர்மான மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பாக தங்களால் விளக்கிக் கூற முடியுமா?


பதில் : 26-1204 அன்று தமிழீழத் தாயகத்தின் கரையோரப் பிரதேசங்களை தாக்கிய சுனாமி பேரலைகளின் தாக்கத்தால் எமது தமிழ்பேசுமமக்கள் மிகப்பெரும் பாதிப்புக்களை அடைந்துள்ளார்கள். இந்த அனர்ததம் நடந்த உடனேயே எமது தேசியத் தலைவர் அவர்கள் தளபதிகள்ää போராளிகள் அனைவரையும் மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைவாக நாம் அனைவரும் பணிகளை மேற்கொண்டோம். வடக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் எமது இயக்கத்தின் பூரண கட்டுப்பாட்டுப் பகதி ஆகையால் அங்குள்ள தளபதிகள்ää பாறுப்பாளர்கள்ää படையணிகளை ஈடுபடுத்தி உடனடியாக பணிகளை ஆரம்பிக்க முடிந்தது. ஆனால் மட்டக்களப்பு அம்பாறையைப் பொறுத்தவரையில் பாதிக்கப்pபட்ட பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்தது. அங்கு எமது அரசியல் பணிபுரியும் போராளிகள் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
அதிலும் சுனாமி தாக்கிய அன்று அவர்கள் அங்கிருக்கவில்லை. காரணம் விசேட அரசியல் வகுப்புகளுக்காக அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின்
அழைப்பிற்கிணங்க அவர்கள் வன்னி சென்றிருந்தனர். உடனடியாக அவர்கள் செய்தி அறிந்து திரும்பி வந்தனர். அதற்கிடையில் பாதிப்புற்ற பகுதிகளில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் தமது ஆளணி வளங்களைப் பயன்படுத்தி கனரக வாகனங்களைப்
பயன்படுத்தி மக்களை பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டனர். உண்மையில் அந்த நேரத்தில் எமது மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டமைக்காக அவர்களுக்கு நன்றி கூற
வேண்டியுள்ளது. அதேவேளை வடமராட்சிப் பகுதிகளில் கடலலைகளால் பாதிப்புற்ற படையினரை எமது போராளிகளும் பாதுகாத்துள்ளனர். கல்லடி முகாமில்இருந்த இராணுவம்கடல் அலைகளினால் பாதிப்புற்று காயமடைந்த வேளையில் கொக்கட்சிச்சோலையில் வைத்து மருத்துவ சிகிச்சை
செய்து பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படட்னார். உண்மையில் அந்த இக்கட்டான வேளையில்பரஸ்பரம் மனிதாபிமான உணர்வோடு அனைவரும் செயற்பட வேண்டியுள்ளது. மட்டு - அம்பாறை பகுதிகளில் எமது தளபதிகளான ரமணன்ää ஜனார்த்தனன்ää அரசியல்துறைப் பொறுப்பாளர்களான தயாமோகன் கௌசல்யன் குயிலின்பன் குவேனி (தமிழ்நிலவு) ஆகியோர் உடனடியாக பணிகளை ஆரம்பித்தனர். 500க்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் எமது
போராளிகளால் மீட்கப்ப்டது. இடம்பெயாந்த மக்கள் வேகமாக எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து கொண்டிருந்தனர். சிறப்புத்தளபதி கேணல் பாணு உட்பட அனைவரும் வேகமாகச் செயற்பட்டு காயமடைந்த மக்களுக்கான மருத்துவச்சேவை சமைத்த உணவு வினியோகம்ää உடுபுடவைகள் வழங்கல் எனப் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை வன்னியிலிருந்து
நிவாரணப் பணிகளை முன்னெடுக்க பெருமளவு பெண்போராளிகளும் ஆண்போராளிகளும் வந்து சேர்ந்தார்கள் அத்துடன் வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும்பொது அமைப்புக்களும்ää மக்களும்ää தொண்டர்களும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள்ää பல்கலைக்கழக மாணவர்களும் நிவாரணப் பொருட்களோடு வந்திருந்தார்கள் இது எமது பணிகளுக்க
மேலும் பலமூட்டியது. அத்துடன் தெற்குப்பகுதி மலையகப் பகுதி மக்களும் நிவாரணப் பொருட்களோடு வந்திருந்ததால் அவர்களை இடைமறித்த அதிரடிப்படையனர்நிவாரணப் பொருட்களை
தம்மிடம் ஒப்படைக்குமாறும்ää புலிகள் நிவாரணப் பொருட்களை மறித்து தமது முகாம்களுக்கு கொண்டுசெ;னறு விடுவார்கள் என்றும் அம்மக்களுக்கு கூறியபோது அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதிரடிப்படையினரின் வற்புறுத்தலையும்ää மிரட்டலையும் மீறி அவர்கள் அந்த நிவாரணப் பொருட்களை கொண்டுவந்து எம்மிடம் தந்தர்கள்.

தந்துவிட்டு கூறினார்கள்ää கடந்த வருடம் தெற்கில்ää மலையகத்தில் மழைவெள்ளம்ää மண்சரிவு ஏற்பட்டபோது எந்தப்பேதமும் பாராது எமது காலடிதேடி நிவாரணப்பொருடகளோடு வந்த புலிகள் அவர்கள் ஒருபோதும் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை பறித்தெடுக்கின்ற வேலையை செய்ய மாட்டார்கள் என்கின்ற நம்பிக்கை எமக்கிருந்தது எனக் கூறினார்கள். தற்பொழுது எமது போராளிகள் மருத்துவப் பணிகள் பெண்கள்ää குழந்தைகளுக்கான விசேட கவனிப்புக்கள்ää பாலர்
வகுப்பு தொடக்கம் பல்கலைக்கழகம் வரைக்குமான மாணவர்களின் கல்வி மேம்பாட்டுப் பணியென பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

கேள்வி :- தமிழீழ விடுதலைப் புலிகளின் புனர்நிர்மான செயற்பாடுகளின்போது படையினரால் இடையூறுகள் விளைவிக்கப்படுவதாகவும்ää புலிகளுக்கும்ää படையினருக்குமிடையே அடிக்கடி முரண்பாடுகள் நிகழ்வதாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது. படையினரின் இத்தகைய
நடவடிக்கைகளுக்கு காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள்?

பதில் :- காலம் காலமாகவே எமது மக்களின் உரிi8மகளைப் பறித்துபோராட்டத்தையும் அழித்துவிடுகின்ற நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் சிங்களப் பேரினவாத அரசு செயற்படுத்தி வந்துள்ளது அனைவருக்கும் தெரியும்ää இதே போலத்தான் அண்மையில் ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான அவசர நிவாரணப் பணிகளைää புனர்வாழ்வுப் பணிகளை நாம்மேற்கொள்ளும்போது அதற்கு இடையூறு விளைவிப்பதன் மூலம் ஏற்கனவே உயிர்களையும்ää உடமைகளையும் இழந்து உள ரீதியாகப்
பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர். போராளிகள் நேரடியாக நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு இடையூறு செய்தல்ää கல்வி மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுக்கும்போது மாணவர்களைää ஆசிரியர்களை அச்சுறுத்தல்ää ஆயுதபாணிகளாக நலன்புரி நிலையங்களில் இரவுபகல் பாதுகாப்பு பணி என்ற போர்வையில் நின்று மக்களின் இயல்பான நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல் குறிப்பாக பெண்களுக்கான தனித்துவத்தைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்ளுதல் என்பன திட்டமிட்ட தமிழின ஆக்கிரமிப்பு நடவடிக்கையின்
இன்னுமொரு வடிவம் அல்லது அதன் தொடர்ச்சி என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் 1983ல் இருந்து அம்பாறை மாவட்டத்தில் பலபடுகொலைகளுக்குக் காரணமான இதே அதிரடிப்படையினர் இந்த சமாதான காலத்திலும்கூட இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுக்க விடாமல் இடையூறு செய்து மக்களின் மனங்களை மேலும் புண்படுத்துவது எமக்கு வேதனையளிக்கிறது.

கேள்வி :- களமுனைத் தளபதிகள் எல்லோரும் நின்று அர்ப்பணிப்புடன் மக்களுக்கு
சேவையாற்றுகின்றீர்கள் படையினரின் இத்கைய செயற்பாடுகள் உங்களின் பணிகளுக்கு இடையூறாக அமையுமிடத்து தங்களால் எத்தகைய மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது பற்றி கூற முடியுமா?

பதில் :- எமது போராட்டம் மக்களுக்கானதுää மக்களைப் பெருமளவு பாதித்த இச்சம்பவம் எம் அனைவருக்கும் ஆழ்ந்த மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் தமது சொத்து சுகங்களைää உயிர்களை இழந்து துன்பப்பட்ட மக்கள் இயற்கை
அனர்த்தத்தினால் பாதிப்புக்களைச் சந்தித்துள்ள இவ்வேளையில் எமது பணிகளுக்கு
இராணுவத்தினர் மூலமாக இடையூறுகள் ஏற்படும்போது மக்களின் நலனுக்காக எமது போராளிகள் மிகவும் பொறுமைகாத்து வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். எமது அரசியல்துறைப் பொறுப்பாளர்கள் கௌசல்யன்ää குயிலின்பன் ஆகியோர் நெருக்கடி நிலைமைகள் தோன்றும்போது படை அதிகாரிகளைச் சந்தித்து சுமூகமான சு10ழலை உருவாக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். ஆனால் இந்த நெருக்கடி மிக்க காலத்தில் படைத்தரப்பினர் புரிந்துணர்வுடன் செயற்பட முயற்சிக்காமல் மீண்டும் மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்துருவது எதிர்காலத்தில சமாதான முயற்சிகளில் கூட பாதிப்புக்களை ஏற்படு;தும் வாய்ப்புள்ளது.

கேள்வி :- மட்டு - அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் இந்த கடல்கோள் அனர்த்தம்
காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிறிலங்கா அரசில் போதியளவு அரசியல் பலம் இல்லாத காரணத்தினால் கிடைக்கப்பெறும் அரச நிவாணரம் மற்றும் ஏனைய உதவிகள் பற்றி மக்கள் மத்தியில் பெரும் ஐயம் நிலவுகின்றது. இது முறையாக கிடைக்க விடுதலைப் புலிகளால் எத்தகைய முயற்றி மேற்கொள்ளப்படுகின்றது என்பது பற்றி கூற முடியுமா?

பதில் :- அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது சிறுபான்மை இனமாகவே இன்று தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இதனால் அரசியல் ரீதியான பலம் மற்றைய
மாவட்டங்களைப்போல்இல்லை என்பது உண்மைதான். அரச அதிபர் தொடக்கம் அரச அதிகாரிகள் பலரும் பெரும்பான்மை சமூகங்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. பத்மநாதன் அவர்களும் சுனாமி அலைகளினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றார். இந்நிலையில் சுனாமி அனர்த்தத்தின் பின்பு மேலதிக அரச அதிபராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டு இருப்பது நல்ல விடயம்தான்ää ஆனால் அவரின் பணிகள் வேகமாகவும்ää சிறப்பாகவும் அமைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.


கேள்வி :- எமது மாணவர்களின் கல்வி வளங்கள் பாதிக்கப்பட்டு அவர்களின் கல்வி
நடவடிக்கைகளுக்கும் இந்த கடல்கோள் அனர்த்தம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது கல்வி மேம்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுக்க தங்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பற்றியும்ää தேவைகள் பற்றியும் கூற முடியுமா?

பதில் :- மட்டு அம்பாறை மாவட்டங்களைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால்பல கிராமங்கள் முற்றாகவே கல்வியில் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன. அதேவேளை சுனாமித் தாக்கத்தினால் பல பாடசாலைக் கட்டடங்கள்ää தளபாடங்கள் முற்றாக அழிந்து போயுள்ளன. பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பாடசாலைகளே பலஇடங்களில் மக்களின் நலன்புரி நிலையங்களாக உள்ளதால்ää பாடசாலைகளை உரிய காலத்தில் ஆரம்பிக்க முடியாதுள்ளது.இதனால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகிறது. அத்துடன்
பல்கலைக்கழக மாணவர்கள்ää வேறு உயர்கல்வி மாணவர்கள் கல்வியைத் தொடரமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள்ää அதிபர்கள்ää கல்வி அதிகாரிகள்கூட பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் கல்வியை மேம்படுத்த நாம் பலமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித்திட்டம் ஒன்றை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆரம்பித்துள்ளது. அதுவும் ஒரு நல்ல முயற்சி இவ்வாறாக எதிர்காலங்களில் எமது மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

கேள்வி :- எமது மண்ணில் அன்னியப் படையினர் மனிதாபிமான ரீதியில் உதவுவதற்காக வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இருந்தாலும் மக்கள் மத்தியில் இவர்கள் மீது ஒரு விதமாக சந்தேகம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது. இது தொடர்பாக தங்களின் கருத்தை அறிய
முடியுமா?

பதில் :- மட்டு - அம்பாறை மாவட்டங்களில் வெளிநாட்டுப் படையினர் பல பணிகளில்
ஈடுபட்டுவருவதனை அவதானிக்க முடிகிறது. அவர்கள் சுனாமி அனர்த்த மனிதாபிமானப் பணிகளை ஆற்றுவதற்காகவே தாம் வந்துள்ளதாகவும்ää அப்பணிகளை முடித்துக் கொண்டு தமது நாடுகளுக்குச் செல்வதாக கூறுவதை ஊடகங்கள் மூலமாக அறிய முடிகிறது. நாமும் அவர்கள் கூறியதுபோலவே
செயற்படுவார்கள் என்று நினைக்கின்றோம்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
தளபதி ராம் அவர்களின் விசேட செவ்வி. - by Vaanampaadi - 01-29-2005, 10:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)