Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இவரும் ஓர் வரலாறே
#1
இவரும் ஓர் வரலாறே
ஈழத்தின் மூத்த தமிழ் அறிஞரும் ஆன்மீக சிந்தனையாளரும் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணி புரிந்தவரும் சிறந்த இலக்கிய அரசியல் மேடை பேச்சாளரும் கவிஞரும் பல நூ}ல்களை எழுதியவருமான வித்துவான் க.ந. வேலன் அவர்கள் இலண்டன் மருத்துவ மனையில் தமது எண்பதாவது வயதில் நேற்று காலமானார்.
அவருடைய தமிழறிவும் இலக்கிய திறனூம் புகலிட தமிழ் ஊடகங்களால் சரியாகப் பயன் படுத்தப்படவில்லை என்பது புகலிடத் தமிழருக்கும் ஊடகங்களுக்கும் பேரிழப்பு. வித்துவான் வேலன் அவர்கள் நன் மாணாக்கர் பலரை உருவாக்கியவர். மானவர்களுடன் தோழமையுடன் பழகி நகைச்சுவையாக பேசுவார்.
அவர் எழுதிய இரண்டு நூ}ல்கள் அடுத்த மாதம் வெளியீடு செய்யப் பட இருந்தன.
ஈழத் தமிழர்கள் வந்தேறு குடிகளென்று சந்திரிகா தென் ஆபிரிக்காவின் பேசிய கருத்துக்கு எதிராக சென்ற ஆண்டு ஈழத்தமிழரின் வரலாறு பற்றிய நூ}ல் ஒன்றை எழுதியுள்ளார்.
இவர் முன்னாள் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் .அரசியலையும் இலக்கியமாக கொள்ளும் பக்குவம் கொண்டவர்.தரப்படுத்தலை எதிர்த்து மாணவர் பேரவை நடாத்திய ஊர்வலத்தில் அரசாங்க ஊழியராக கடமையாற்றியபோதே கலந்துகொண்டு இலங்கை அரசாங்கத்தை எதிர்த்தவர்.தனக்கு சரியென்பதை அஞ்சாமலுரைக்கும் வல்லாண்மை கொண்ட தமிழன். தமிழ்ப் பேராசானின் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தாருக்கும்..மாணாக்கர்களுக்கும் ஆழ்ந்த அனூதாபங்களைத் தெரிவித்து அஞ்சலிக்கிறேன்.

-
Reply


Messages In This Thread
இவரும் ஓர் வரலாறே - by Manithaasan - 06-08-2003, 08:42 PM
[No subject] - by nalayiny - 06-12-2003, 09:52 PM
[No subject] - by sOliyAn - 06-12-2003, 10:52 PM
[No subject] - by Paranee - 06-13-2003, 09:13 AM
[No subject] - by kuruvikal - 06-13-2003, 10:27 AM
[No subject] - by sethu - 06-16-2003, 05:40 PM
[No subject] - by sethu - 06-16-2003, 05:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)