01-28-2005, 08:46 AM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->சண்முகநாதன் கதை
(ஷோபாசக்தியின் சமீபத்திய நாவலான 'ம்'லிருந்து,)
கனகரட்ணம் சண்முகநாதன் என்ற மட்டக் களப்புத் தமிழர் சிற்றாண்டி எனும் ஊரை சேர்ந்தவர், நோயாளியான அவரது மனைவிக்கு உணவும் மருந்தும் இரண்டு வயதேயான அவரது மகளுக்கு பாலும் வாங்க சண்முகநாதன் பணம் தேடி அலைந்தார். கடைசியாக நகரத்தில் 'மில்' வேலைக்கு கூலிக்கு ஆள் எடுப்பதாக கேள்விபட்டு அவர் வேலை தேடி புறப்பட்டு சென்றபோது சிற்றாண்டி எல்லையில் வைத்து சிறிலங்கா விசேட அதிரடி படையினரால் சண்முகநாதன் கைது செய்யப்பட்டார். அப்போது வருடம் ஆயிரத்து தொளாயிரத்து என்பத்தாறாய் இருந்தது. கைது செய்யப்படும் போது சணமுகநாதனுக்கு வயது இருபத்தியிரண்டு.
அன்று சண்முகநாதனுடன் மேலும் அறுபத்தியிரண்டு தமிழர்கள் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப் பட்டார்கள். இவர்கள் அனைவரும் இராணுவ வாகனங்களிலே காட்டுக்குள் அமைந்திருந்த விசேட அதிரடி படையினரின் துப்பாக்கி சுடும் பயிற்சி முகாமிற்கு அழைத்து செல்லபட்டார்கள். மறுநாள் அதிகாலையில் அதிரடி படையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டபோது அதுவரை இலக்குகளாக உபயோகிக்கபட்டுவந்த வைக்கோல் பொம்மைகள் அகற்றப்பட்டு பொம்மைகளின் நிலையில் சண்முகநாதனும் மற்ற கைதிகளும் நிறுத்த பட்டார்கள். அன்றய காலை பயிற்சியில் நாற்பத்தியிரண்டு அதிரடி படையினர் இலக்குகளை துல்லியமாய் சுட்டு தள்ளினார்கள். இருபத்தோரு படை வீரர்கள் இலக்கு தவறி சுட்டார்கள். சண்முகநாதனுக்கு காலிலே வெடி விழுந்தது. இன்னும் இருபது கைதிகள் குற்றுயிரும் கொலைஉயிருமாய் கிடந்தார்கள். காயமுற்றவர்களுக்கு கொழும்பு வைத்திய சாலையில் கட்டில்களோடு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
வைத்தியசாலையிலிருந்து நேராக சண்முகநாதன் இராணுவ தடுப்புமுகாமுக்கு அனுப்பப்பட்டர். அவர் அனுப்பப்பட்ட இராணுவ முகாம் அவிசாவளை பகுதியில் குரிவிட்ட என்னும் ஊரில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த தடுப்பு முகாமில் சண்முகநாதன் இரண்டு வருடங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த தருணங்களில் நிலமையை தன் குடும்பத்தாருக்கு சொல்லிவிட எந்த வழியும் திறக்கவில்லை. சண்முகநாதனை தேடி கண்டுபிடிக்க அவரின் குடும்பத்தாலும் முடியவில்லை. ஒரு வருடம் கழித்து, சண்முகநாதனின் குடும்பம் செத்தவீடு கொண்டாடிற்று. சிற்றாண்டியில் இழவு நடந்துகொண்டிருந்தபோது கொழும்பில் இந்திய இலங்கை ஒப்பந்தம் நடந்தது. ஒப்பந்தத்தின் பின்னால் பல அரசியல் கைதிகள் விடுவிக்கபட்ட போதும் யாருக்கும் தெரியாமல் யாருடைய கவனத்தையும் பெறாமல் சண்முகநாதன் குரிவிட்ட தடுப்பு முகாமிலேயே இருந்தார். அடுத்த வருடம் அவர் போகம்பர பெருஞ்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போகம்பர சிறையில் ஒன்றல்ல இரண்டல்ல, பதினாறு வருடங்கள் சண்முகநாதன் பிரேதமாய் கிடந்தார். அவருடைய எல்லா பற்களும் குறடுகளால் பிடுங்கப்பட்டன. அவரின் முதுகு கோடாரியால் பிளக்கப்பட்டது. அந்த நிணமும் தசையுமான உடல் கிடங்கில் கந்தகத்தை கொட்டி எரித்தார்கள். அவரின் மார்புக் காம்புகளில் மின் அதிர்வு செலுத்தப்பட்டு பதினெட்டு வருடங்களாக வெளியில் எவருடனும் எந்தவித தொடர்பும் இல்லாதிருந்தவரிடம் \"பிரபாகரன் எங்கே ஒளிந்திருக்கிறான்?\" என்ற பைத்தியக்காரத்தனமான கேள்வி அதிகாரிகளால் கேட்கப்பட்டபோது வேலுப்பிள்ளை பிராபகரன் வன்னியில் சர்வதேச பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடத்தி கொண்டிருந்தார்.
சண்முகநாதன் சிறையதிகாரிகளால் மிருகத்தனமாக வேலைவாங்கப்பட்டார். பகல் முழுவதும் சுத்தம் செய்தல், உருளைக்கிழங்கு, காரட், போஞ்சி பயிரிடுதல், சமையல் போன்ற வேலைகளை செய்ய அவர் கட்டளையிடப்பட்டர். காலையில் ஒரு துண்டு பாணும் சீனியில்லாத கருப்புத்தேனீரும் மதியம் நூறுகிராம் சோறும் ஒரு பூசணிக்காய் துண்டு அல்லது சிறிதளவு கோவா மட்டுமே அவருக்கு உணவாக வழங்கப்பட்டது. சண்முகநாதன் சிறைப் பிடிக்கபட்ட நாளிலிருந்து அவருக்கு முகச்சவரம் செய்ய வழி எதும் இருக்கவில்லை. அவரின் தாடி இடுப்புவரை படர்ந்து கிடந்தது.
சிறைவளாகத்துள் இருந்த ஒர் சிறையதிகாரியின் வீட்டை சுத்தம் செய்ய சண்முகநாதன் போவதுண்டு. அந்த சிறையதிகாரியின் நோனா சண்முகநாதனுக்கு இரங்கினாள்.அவளின் உதவியோடு சண்முகநாதன் இரண்டாயிரத்து நான்காம் வருடம் ஏப்ரலில் ஒரு மழைக்கால இரவில் போகம்பர சிறையிலிருந்து தப்பி சென்றார். காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்து கடைசியாக சண்முகநாதன் தனது ஊருக்கு வந்து சேர்ந்தபோது தனது வயதை மறந்து போயிருந்தார். சண்முகநாதனின் மனைவி இறந்து போயிருந்தார். இரண்டு வயதில் அவர் பிரிந்து சென்ற அவரது மகளுக்கு இப்போது நான்கு வயதில் ஒரு குழந்தையிருந்தது.
தப்பி வந்தவரின் கதையை இயக்கம் முதலில் நம்ப மறுத்தது. அவரை அரசாங்க உளவாளி அல்லது மாற்று இயக்கத்தை சேர்ந்தவர் என்று இயக்கம் சந்தேகமுற்றது. தன்னை விசாரணை செய்த இயக்கக்காரர்கள் நால்வரில் எவருமே பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தான் விசேட அதிரடி படையினரால் கைது செய்ய பட்டபோது பிறந்தேயிருக்கமாட்டார்கள் என்று சண்முகநாதன் அடித்து சொல்கிறார். இவர் சிறையிலிருந்த முழுக் காலங்களிலும் எந்த மனித உரிமை இயக்கமோ, செஞ்சிலுவை சங்கமோ அரசியல் கட்சியினரோ இவரை சந்திக்கவில்லை என்றும் கூறுகிறார். இவரைப் போலவே வந்தாறுமூலை, கிரான். முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி பகுதிகளை சேர்ந்த இருபது தமிழர்கள் வழக்குகள், விசாரணைகள் ஏதுமின்றி போகம்பர சிறையில் அநாதரவாய் கிடக்கிறார்கள் என்றும் சண்முகநாதன் கூறுகிறார்.
சண்முகநாதனின் உடல் சிதைக்கப்பட்டுவிட்டது. அவர் சற்று மனச்சமநிலை சரிந்தவராகவும் காணப்படுகிறார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நட்டஈடாக ஒரு வேலையும் வீடும் வழங்குமாறு இந்த அப்பாவி தொலைக்காட்சி பேட்டிகளில் அரசாங்கத்தை கோருகிறார். ஆனால் நட்டஈட்டை பெறுவதிலுள்ள ஒரு நுணுக்கமான சட்டச் சிக்கலையும் அவரே விபரிக்கிறார்.
அதாவது சண்முகநாதன் கைது செய்யப்பட்ட மறுவருடமே சண்முகநாதனின் மரண சான்றிதழ் கிராம நிர்வாக அதிகாரியால் சண்முகநாதனின் மனைவிக்கு வழங்கபட்டுள்ளது. இப்போது உயிரோடு மீண்டு வந்த சண்முகநாதன் கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து தனக்கு வழங்கபட்டுள்ள மரண சான்றிதழை அரசாங்கம் மீளப் பெற்றுகொள்ள வேண்டுமென்று கேட்டபோது மரண சான்றிதழை மீளபெற்றுகொள்ள தனக்கு அதிகாரமில்லை என சொல்லி கிராம நிர்வாக அதிகாரி மறுத்துவிட்டார். ஆக அரசு ஆவணங்களின் படி சண்முகநாதன் இன்றும் இறந்துபோனவராகவே கருதப்படுவார். கனகரட்னம் சண்முகநாதன் கூறுகிறார்:
\"எனவே எனது இப்போதய கவலையெல்லாம் நான் உயிருடன் இருப்பதை எப்படியாவது அரசாங்கத்திற்கு நிருபித்து காட்டவேண்டும் என்பதே.\"
நன்றி: ரோசாவசந்த்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்படி நிறைய சண்முகனாதன்கள் இராணுவமெனும் காட்டுமிராண்டிகளால் நிராதரவாக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழனாய் பிறந்துவிட்டோம் யாரிடம் போய் என்னத்தைச் சொல்லி அழுவது.