01-28-2005, 06:48 AM
அமெரிக்க வீராங்கனைகள் இறுதி மோதல்: ஷரபோவாவைத் தோற்கடித்தார் செரீனா
<img src='http://www.dinamani.com/Images/jan05/28serena.jpg' border='0' alt='user posted image'>
ஷரபோவாவைத் தோற்கடித்த களிப்பில் செரீனா வில்லியம்ஸ்
மெல்போர்ன், ஜன. 28: "ரஷிய இளம்புயல்' மரியா ஷரபோவாவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றில் நுழைந்துள்ளார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.
மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் வியாழக்கிழமை மகளிருக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
அதில் ஓர் ஆட்டத்தில் 17 வயது இளம் வீராங்கனை ரஷியாவின் மரியா ஷரபோவாவுடன் விளையாடினார் உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.
கடைசி வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் செரீனா 2-6, 7-5, 8-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் நுழைந்தார்.
முதல் செட்டை எளிதில் வென்ற ஷரபோவா, 2 மற்றும் 3-வது செட் ஆட்டங்களில் கடுமையான போராட்டம் தொடுத்தாலும் செரீனாவுக்கு அதிர்ஷ்ட தேவதை கைகொடுத்துவிட்டார்.
ஆஸி. ஓபன் போட்டியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்த ஆட்டம் 2 மணி, 39 நிமிஷங்கள் நீடித்தது.
வெற்றி பெற்றதும் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் காணப்பட்டார் செரீனா.
அதிர்ஷ்ட வெற்றியா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் நடைபெற்ற ஆஸி. ஓபன் அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸிடம் இதே மாதிரியான சூழலில் வெற்றியைப் பெற்று செரீனா பட்டத்தை வென்றது நினைவு கூறத்தக்கது.
""ஷரபோவாவுக்கு எதிரான வெற்றியை என்னாலேயே நம்ப முடியவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் வெற்றிக்கு 2 புள்ளிகள் குறைவாகச் சேர்த்திருந்த நிலையிலும், அதன் பின்னர் போராடி வெற்றி கண்டேன். இம் மைதானம் ஒருவேளை எனக்கு அதிர்ஷ்ட மைதானமாக இருக்குமோ என நினைக்கிறேன்'' என்றார் வெற்றிக்குப் பின் செரீனா.
இறுதிச் சுற்றில் சக நாட்டின் லின்ட்சே டேவன் போர்ட்டை சந்திக்கிறார் 23 வயதாகும் செரீனா வில்லியம்ஸ்.
டேவன்போர்ட் வெற்றி: மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் லின்ட்சே டேவன்போர்ட் 2-6, 7-6 (5), 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை நதாலி டெசியைத் தோற்கடித்தார்.
2000-ல் நடைபெற்ற யு.எஸ். ஓபன் போட்டிக்குப் பிறகு எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் இறுதிச் சுற்றுக்கு டேவன்போர்ட் முன்னேற முடியவில்லை. அதே சமயம் அதே ஆண்டில் ஆஸி. ஓபன் பட்டத்தை அவரே வென்றது நினைவு கூறத்தக்கது.
அதன் பிறகு தற்போது இறுதிச் சுற்று வாய்ப்பு டேவன்போர்ட்டுக்கு கிடைத்துள்ளது.
Thanx: Dinamani

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>