01-27-2005, 06:55 PM
வெறும் வாயை மெல்லும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள்
9/10 ஜப் போலவே 12/26 உம் வரலாற்று புகழ்பெற்ற திகதியாக மாறிவிட்டிருக்கிறது. அன்றைக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் மனித அவலங்களை சுனாமி அரங்கேற்றியது. சிறிலங்காவின் தென் பகுதிகளும் தமிழீழத்தின் கிழக்குக் கரையும் அதற்குத் தப்பவில்லை. 30000 உறுதிப்படுத்தப்பட்ட சாவுகள், காணாமல் போனவர்களின் கணக்கையும் சேர்ந்து 6000 ஆக அதிகரிக்கும் ஏது நிலை காணப்படுகிறது. 'பொருண்மிய சுனாமி" அடிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்த மனித பொருண்மிய அவலங்களை வெளிப்படுத்த வேண்டிய தென்னிலங்கை ஊடகங்கள் 26.12.2004 இல் இருந்து 04.01.2005 வரையான பத்து நாட்களும் நடந்து கொண்ட முறை நாகரிக சமூகத்தினர் வெட்கித்தலைகுனிய வேண்டிய விதத்திலேயே அமைந்தது.
வடக்குக் கிழக்கின் பொது மக்களது சேத வீகிதங்களை பெருமளில் இரட்டிப்பு செய்த இந்த ஊடகங்கள் தென்னிலங்கை சேதங்களையும் 28ஆம் திகதி வரை பெரிதாக வெளிவிடவில்லை. கொழும்பிலிருந்து 1500 பேருடன் புறப்பட்ட புகையிரதங்களில் கிட்டத்தட்ட அனைவருமே பலியாகியதைக் கூட வெளியிடாத இந்த ஊடகங்கள் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் சேதங்களை மட்டும் தங்கள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி 29ஆம் திகதியிலிருந்து வெளியிடத் தொடங்கின. இராணுவத்தின் இழப்புக்களை வெளியிட்ட அதே கையோடு புலிகளின் சேதங்கள் என்று அவை கூற விருபியவற்றை அல்லது ஆட்சிப் பீடத்தினர் 'கேட்க விரும்பிய"வற்றை அவை வெளியிட்டன.
இதற்கு அடியெடுத்து கொடுத்தவர் வேறுயாருமல்ல சந்திரிகாதான். புலிகளின் வளங்கள் பெரும்பாலும் சுனாமி கொண்டு போய்விட்டது. இனி அவர்கள் போருக்கு வரமாட்டார்கள் என்று கூறியவர் அவர்தான்.
அதையும் விட 28.12.2004 அரசு ஊடகங்களின் தலைவர்களுக்கென நடாத்தப்பட்ட அறிவுறுத்தல் கூட்டத்தில் இந்துசமுத்திரப் பிராந்தியம் முழுவதுமே சுனாமியினால் பாதிக்கப்பட்டதாகக் காட்டும் விதத்தில் செய்திகளை வெளியிடும் படியும் சிறிலங்காவைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் இழப்புகளை பூதாகாரமாக்கி காட்டும் படியும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. (ஆதாரம் சண்டேலீடர் 02.01.2005 post Shots)
அரச ஊடகங்கள் மட்டுமல்லாது ஏனைய தென்னிலங்கைப் பத்திரிகைகளும் இதையே வேத வாக்காக கொண்டுவிட்டதுபோல் நடந்து கொண்டன. 29.11.2004 க்கும் பின்பு ஆயுதப் படைகளின் சேத விபரங்கள் வெளிவரவில்லை. இந்தப் பின்னணியில் புலிகள் பற்றிய செய்திகளை எப்படியான கோணத்தில் இந்தத் தென்னிலங்கைப் பேரினவாத ஆங்கில இதழ்கள் கையாண்டன என்று பார்ப்போம்.
02.01.2005 ஞாயிறு சண்டேலீடரில் பிறட்றிக்கா ஜான்ஸ் எழுதிய கட்டுரையின் தலைப்பு.
'புலிகளின் பிரதேசங்கள் துடைத்தழிப்பு" என்பதாக அமைந்ததோடு முல்லைத்தீவில் இருந்த புலிகளின் முக்கிய முகாம் ஒன்று சுனாமியால் தகர்க்கப்பட்டது. அவர்களது நிலத்தடிக் காப்பரண்களும் கருவி கல நிலையங்களும் தகர்க்கப்பட்டிருக்கின்றன. என்று கூறியிருந்தார். இதே கட்டுரையில் 5 அதிகாரிகள் மற்றும் 71 வீரர்கள் முப்படை,பொலிஸ் தரப்பில் பலியானதாகவும் எழுதியிருந்தார்.
02.01.2005 சண்டே ஜலண்டின் பாதுகாப்பு செய்தியாளர் ஒருபடி மேலே போய் முடமாக்கும் வகையிலான அடியை சுனாமி புலிகளுக்கு வழங்கியது என்று தலைப்பிட்டு கட்டுரை வரைந்திருந்தார். 200க்கும் மேற்பட்ட புலிகள் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் பிரமாண்டமான அளவில் புலிகளின் படைக்கலங்கள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், தலைவர் பிரபாகரனையும் விட்டுவைக்கவில்லை. என்றும் அவர் சுனாமிக்கு பலியானரா என்பது பற்றி உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் (ஏக்கத்துடன்) குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் புலிகளின் முக்கிய தளபதிகள் அனைவரும் மீட்புப் பணியில் நின்றதாக கூறியிருந்தார். முதல் தடவையாக எமது தளபதிகளின் கேணல் நிலையை வழமை போல் 'கேணல்" என்று குறிப்பிடாமல் மேற்கோள் குறி இல்லாமல் குறிப்பிட்டிருந்தது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
இதே கட்டுரையில் புலிகளின் கடல்புலிப் பிரிவு (கிட்டத்தட்ட முழுமையாக) அழிக்கப்பட்டது என்றும் 100க்கு மேற்பட்ட சண்டைக் கலங்கள் மூழ்கிவிட்டன அல்லது பாரிய சேதத்திற்கு உள்ளாகிவிட்டன என்றும் கரையோரமாக இருந்த புலிகளின் தொலைத்தொடர்பு நிலையங்கள் கடற்புலித்தளங்கள், ரேடர் நிலையங்கள் ஆட்டிலறிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன என்றும் ஒருபத்தியில் கூறியிருந்தார்.
பின்பு ஒரு பந்தியில் சாலைத்தளம் ஒப்பீட்டளவில் குறைந்த சேதம் அடைந்தது என்று கூறிகிறார்.
இன்னும் சில பந்திகள் கடந்ததும் முழுமையாக அழிக்கப்படாத தங்கள் படகுகளை தேட 'பெரும் எண்ணிக்கையிலான தங்கள் உறுப்பினர்களை கடற்புலிகள் ஈடுபடுத்தினர் என்று கூறுகிறார். 'கிட்டத்தட்ட முழுமையாக" அழிந்துவிட்ட கடற்புலிகளின் பிரிவில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர் மீண்டதன் மர்மத்தை அந்த செய்தியாளரிடம் தான் கேட்கவேண்டும்.
02.01.2005 சண்டே ரைம்ஸ் பத்திரிகை சுனாமியின் போது பிரபாகரனும், சூசையும் கொல்லப்பட்டதாக கூறிவிட்டு அதை தாமே மறுப்பது போல் வதந்திகளை முறியடிக்கும் விதத்திலே பிரபாகரன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து தமிழில் ஒப்பமிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளிக்க சூசை அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் எழுதியிருக்கிறது. 'தமிழில் ஒப்பமிட்டு" என்பதை தடித்த எழுத்துக்களில் போட்டு ஏதோ அப்படி ஒப்பமிடுவது மகா பாவம் என்று காட்ட முனைந்திருக்கிறார்.
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தது போல் அமைந்தது அத்தாஷின் 02.01.2005 சண்டே ரைம்ஸ் கட்டுரையாகும்.
அவரது தலைப்பு இன்னும் சுவையானது:
'புலிகளை சுனாமி நொருக்கியதோடு போர் அச்சுறுத்தல் தணிகிறது" என்ற தலைப்பில் அவர் கட்டுரை வரைந்திருந்தார். அக்கட்டுரையிலே:
புலிகளின் படை இயந்திரம் சுனாமியால் மோசமான சேதமாகியிருக்கிறது.
கடற்புலிகளின் பிரதானமுகாமான சாலை மிக மோசமான சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது
கரையோரம் இருந்த முகாம்கள் சிறு பிரிவுகள் இவ்வாறே சேதப்பட்டுள்ளன.
திங்கள் (27.12.2004) அளிவிலே புலிகளின் சண்டையிடும் உறுப்பினர்கள் 2100 பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என சண்டே ரைம்ஸ்சுக்கு அறியக் கிடைத்தது.
யாழ்,நாகர்கோவில் பகுதிகளில் 250க்கு மேல் புலிகள் பலியாகியதாக கூறப்படுகிறது.
முல்லை, சாலை, நாயாறு அயற்பகுதிகளில் 1400க்கு மேற்பட்ட புலிகள் பலியாகினர்.
சம்பூர், கூனித்தீவு, கொக்குத்தொடுவாயில் அதிகளவில் பலி.
வெருகல், கதிரவெளி, வாகரை அயற்பகுதிகளில் 150 புலிகள் பலியானர்கள் என்று கூறப்படுகிறது. இத் தொகைகள் அதிகரிக்கலாமென்று தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன என்று அத்தாஷ் கூறியிருகிறார்.
இதேபோன்று 29.12.2004 ஜலண்ட இப்படிக் கூறியது.
புலிகளின் வள்ளங்களில் பெரும் பகுதியை சுனாமி அடித்துச் சென்றது"
ஞாயிறு கடல் பயங்கரம் பாதுகாப்புப்படையினரதும் சிறப்பாக கடற்படையினரதும் புலிகளுடைய வளங்களுக்கும் குறிப்பிடத்தக்களவு சேதம் விளைவித்துள்ளது என்றும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பலவற்றைத் தாக்கியழித்த சுனாமி புலிகளை மட்டும் தப்பவிட்டிருக்காது என்றும் அவர்களுடைய வளங்களில் அநேகமானவை கிழக்குக் கரையிலேயே இருந்தன. அவர்களுடைய நடவடிக்கை ரீதியான கலங்கள் சுனாமிக்குத் தாக்குப் பிடித்திருக்கமுடியாது அவற்றுள் அரைவாசியையாவது இழந்திருப்பார்கள் எனவும் படை அதிகாரிகள் தெரிவித்தனர் என செய்தி வெளியிட்டிருக்கும் இதே ஜலண்ட் பத்திரிகை புலிகளின் ஆட்லறி வான்பிரிவு தரைவழிப் படைகளுக்கு சேதம் ஏற்படவில்லை என்று கூறி தன்னைத் தானே மறுதலித்துக் கொண்டுள்ளது.
இந்தச் 'செய்தியாளர்"களுக்கும் 'ஆய்வாளர்"களுக்கும் பொதுவான ஒரு விடயமாக அவர்களுக்கு உண்மையான கள நிலைமைகள் தெரியாது என்பது இருக்கிறது. முன்பு 'லங்கா புவத்" இருந்தது. அதுகோயபல்சுக்கு பெரியப்பாமுறை, புலிகளின் தாக்குதலில் அல்லது இராணுவத்தின் நடவடிக்கையில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டால் (1இராணுவத்திற்கு 10 புலிகள் என்ற கணக்கில்) 100 புலிகள் கொல்லப்பட்டனர் என்று லங்காபுவத் கூறிவிடும். ஆகாசபுளுகர்களுக்கு லங்காபுவத் என்று தமிழ் மக்கள் பெயர் வைக்கும் அளவிற்கு லங்காபுவத் 'நம்பகத் தன்மை"யின் குறியீடாக இருந்தது.
லங்காபுவத்தையே தோற்கடிக்கும் அளவிற்கு தங்கள் மன விகாரங்களையும் படை அதிகாரிகள் 'தகவல் வட்டாரங்கள்" என்ற பெயரில் அனாமதேயமாகத்தரும் ஊடகக் குறிப்புக்களையும் வெளியிட்டு பொச்சம் தீர்த்துக்கொள்ளும் இந்த பத்திரிகைகள் ஒரு போதும் திருந்தப் போவதில்லை. சுனாமி வரப் போகும் தகவலை தருவதற்கு முழுமுயற்சி எடுக்காமல் இப்போது நிவாரண உதவிகளுடன் இத்தீவில் கால் வைக்க முயலும் மாகானுபாவர்களை கண்ணடிக்க வக்கில்லாமல் ஆதார மற்றசெய்திகளை வெளியிடுவதோடு பலசந்தர்ப்பங்களில் அவற்றோடு முரண்படம் செய்திகளையும் தாங்களே வெளியிடும் இவர்களைக் கண்டு பரிதாபப்படுவதை தவிர எமக்கு வேறு வழியில்லை.
வின்சென்ற் புளோறன்ஸ் ஈழநாதம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>