01-27-2005, 06:04 PM
நண்பர்களின் தங்கைகள் - படித்ததில் பிடித்தது
'அண்ணன் குளிச்சிட்டிருக்கு
உள்ள வந்த
உட்காருங்கண்ணே"
என்று வரவேற்று
தேநீர் போட்டுத் தருகிறார்கள்
நண்பர்களின் தங்கைகள்.
கூச்சத்தைப் போக்க
தொலைக்காட்சிப்பெட்டி
மேலிருக்கும்
தலையாட்டிப் பொம்மைகளையும்
வரவேற்பறையிலிருக்கும்
ஓடாத கடிகாரங்களையும்
நாம் உற்றுப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
சகஜமாக தங்கள்
உரையாடலைத்
தொடங்குகிறார்கள்.
வானொலியில் கேட்ட பாட்டு:
கல்லூரியில் நடந்த சண்டை:
மூன்றாவது போர்சனில்
குடிவந்திருக்கும் மிலிட்டெரி
குடும்பம்: என
சொல்லுவதற்கு அவர்களிடம்
விசயம் ஏராளமிருக்கிறது.
தேர்வு நேரங்களில்
நண்பர்களின் வீட்டு
மொட்மை மாடியில் கும்பலாக
அமர்ந்து
படித்துக்கொண்டிருக்கையில்
'இந்த வருசமாவது
பாஸாயிடுவீங்களாண்ணே?"
என்று
செல்லமாய்ச் சீண்டுகிறார்கள்.
'என்
சூலொஜி ரெக்கோர்ட்டில்
படம் வரைஞ்சி
தர்றீங்களாண்ணா?
நான் வரைஞ்சா தவளை எல்லாம்
முதலையா மாறிடுது" என்று
வராத ஓவியத்திற்காய்
வருத்தப்படுகிறார்கள்.
பின்பொரு நாள்
பார்த்துக் கொண்டிருக்கையில்
சட்டென வளர்ந்து:
சாப்பாட்டு இலைகள் நோக்கி
உடைந்து எண்ணெய் வழியும்
அப்பளங்கள்
கூடைகளில் பயணிக்கும்
ஏதோ ஒரு கல்யாண மண்டபத்தில்
தாலி கட்டிக்கொண்டு
கண்கலங்கி விடைபெறுகிறார்கள்.
நண்பர்களின்
தங்கைகள் இல்லாத
நண்பர்களின் வீடு.
முற்றத்தில் பறிக்காமல்
உதிர்ந்து கிடக்கும்
பவழமல்லியுடனும்:
பயணிகள் இறங்கிவிட்ட
ரயில் பெட்டியின் வெறுமையுடனும்:
நூற்றாண்டுகள் கடந்த
மலைக்குகையின் மௌனத்துடனும்:
நம் முன் நிற்கிறது.
¸Å¢¨¾ - ¿¡. ÓòÐìÌÁ¡÷
'அண்ணன் குளிச்சிட்டிருக்கு
உள்ள வந்த
உட்காருங்கண்ணே"
என்று வரவேற்று
தேநீர் போட்டுத் தருகிறார்கள்
நண்பர்களின் தங்கைகள்.
கூச்சத்தைப் போக்க
தொலைக்காட்சிப்பெட்டி
மேலிருக்கும்
தலையாட்டிப் பொம்மைகளையும்
வரவேற்பறையிலிருக்கும்
ஓடாத கடிகாரங்களையும்
நாம் உற்றுப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
சகஜமாக தங்கள்
உரையாடலைத்
தொடங்குகிறார்கள்.
வானொலியில் கேட்ட பாட்டு:
கல்லூரியில் நடந்த சண்டை:
மூன்றாவது போர்சனில்
குடிவந்திருக்கும் மிலிட்டெரி
குடும்பம்: என
சொல்லுவதற்கு அவர்களிடம்
விசயம் ஏராளமிருக்கிறது.
தேர்வு நேரங்களில்
நண்பர்களின் வீட்டு
மொட்மை மாடியில் கும்பலாக
அமர்ந்து
படித்துக்கொண்டிருக்கையில்
'இந்த வருசமாவது
பாஸாயிடுவீங்களாண்ணே?"
என்று
செல்லமாய்ச் சீண்டுகிறார்கள்.
'என்
சூலொஜி ரெக்கோர்ட்டில்
படம் வரைஞ்சி
தர்றீங்களாண்ணா?
நான் வரைஞ்சா தவளை எல்லாம்
முதலையா மாறிடுது" என்று
வராத ஓவியத்திற்காய்
வருத்தப்படுகிறார்கள்.
பின்பொரு நாள்
பார்த்துக் கொண்டிருக்கையில்
சட்டென வளர்ந்து:
சாப்பாட்டு இலைகள் நோக்கி
உடைந்து எண்ணெய் வழியும்
அப்பளங்கள்
கூடைகளில் பயணிக்கும்
ஏதோ ஒரு கல்யாண மண்டபத்தில்
தாலி கட்டிக்கொண்டு
கண்கலங்கி விடைபெறுகிறார்கள்.
நண்பர்களின்
தங்கைகள் இல்லாத
நண்பர்களின் வீடு.
முற்றத்தில் பறிக்காமல்
உதிர்ந்து கிடக்கும்
பவழமல்லியுடனும்:
பயணிகள் இறங்கிவிட்ட
ரயில் பெட்டியின் வெறுமையுடனும்:
நூற்றாண்டுகள் கடந்த
மலைக்குகையின் மௌனத்துடனும்:
நம் முன் நிற்கிறது.
¸Å¢¨¾ - ¿¡. ÓòÐìÌÁ¡÷
--
--
--

