01-27-2005, 07:28 AM
tamilini Wrote:அந்தப்பூசாரி தனது மனைவியை அழைத்துவந்ததுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ?பூசாரி தனது மனைவியை <b>"அழைத்து"</b> வந்ததாக அவர் எழுதியிருந்தால் நான் இந்த தொடரிலேயே எழுதியிருக்க மாட்டேன்.
என்ன எழுதியிருந்தார் என்று பாருங்கள்.
Vaanampaadi Wrote:கோவில் பூசாரியின் மனைவியே அங்கு கைச்சாத்திரம் சொல்லும் சாத்திரியாருடன் தலைமறைவானதும் ää உடனடியாகக் கோவில் பூசாரியால் காவல்துறையினருக்கு முறையிடபட்டதைத் தொடர்ந்து உடனடியாகப் பொலிசாரின் உதவியுடன் <b>மீண்டும் சட்டப்படியான கணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்</b>.
மனைவியை ஒரு பண்டம், பொருள் போல பூசாரியிடம் <b>ஒப்படைக்கப்பட்டார்</b> என்று எழுதியிருக்கிறது. நீங்கள் "பெண் போகப்பொருளாக கருதப்படவில்லை" என்று எழுதுகிறீர்கள்.
பூசாரி வேண்டாம், சாத்திரிதான் தேவை என்று போக அந்த பெண்ணுக்கு பூரண உரிமையிருக்கிறது. ஆனால் அந்தப்பெண்ணை ஒரு தொலைந்து போன பொருளைப்போல இன்னுமொரு ஆணிடமிருந்து பறித்து <b>சட்டப்படி</b> உரிமையான ஆணிடம் <b>ஒப்படைத்ததாக </b>எழுதியிருப்பதில் பெண் போகப்பொருளாக தெரியவில்லையா உங்களுக்கு? தொலைந்து போன பிள்ளைகளை இதனுடன் ஒப்பிடாதீர்கள். இது "பூசாரி வேண்டாம்" என்று வெறுத்து வேறொருவரை விரும்பிப்போன முழுமையாக வளர்ச்சியடைந்த சுதந்திரம் இருப்பவராக கருதப்படும் பெண், குழந்தையல்ல.
tamilini Wrote:அது போக நீங்கள் அப்படி கூறியது.. எந்த விதத்தில் சரி என்று சொல்லுகிறீர்கள்..?? :?:
சரியென்று யார் சொன்னது? உங்களைப்போன்ற பெண்களுக்கே நிதர்சனம் பெண்ணை பொருளாக கருதி எழுதியிருப்பது இன்னமும் புரியவில்லையல்லவா? அதைப்படிக்கும் உங்களைப்போன்ற பெண்கள் இதை ஏன் என்று கேட்க வேண்டும் என்பதற்காக தான் அப்படி எழுதினேன். நான் மற்ற களங்களில் எழுதியவற்றை படித்திருப்பீர்கள் அல்லவா? சிந்திக்க தூண்டுவதற்கு பல முறைகள் உண்டு. இது எனது அனுபவத்தில் சக்தி வாய்ந்த சிந்திக்க தூண்டும் முறை. ஆகவே முடிவாக நான் எழுதியது தவறானது.
அதை கட்டுப்பாட்டாளரும் நீக்கிவிட்டார்.
கூடுதலான செய்தித்தணிக்கை உள்ள நாடுகளை நீங்கள் அவதானித்தால் அவை பின்தங்கிள நாடுகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன. காரணம் அங்கே இவ்வாறாக மக்களை சிந்திக்க தூண்டும் விடயங்கள் பிரசுரமாவதில்லை. தணிக்கை செய்யப்பட்டு விடுகின்றன. ஆகவே மக்களுக்கு சிந்திக்கும் தூண்டுதலும் திறனும் குறைந்து கொண்டு போகின்றன. இது தமிழ்மக்களுக்கும் பொருந்தும்.

