01-26-2005, 01:54 PM
தொழிலாளியை சிங்கத்துக்கு இரையாக்கிய முதலாளி
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த விவசாய பண்ணை உரிமையாளர் மார்க் ஸ்காட். வெள்ளை இனத்தை சேர்ந்தவர். இவருக்கும் இவரது பண்ணையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி நெல்சன் சிசெல். சம்பளம் தொடர்பாகவும் வேறு சில காரணங்களாலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மார்க் ஸ்கட் அந்த தொழிலாளியை கட்டி வைத்து அடித்து உதைத்தார். துப்பாக்கியாலும் அடித்தார். அவரும் வேறு 2 தொழிலாளிகளும் சேர்ந்து நெல்சன் சிசேலை கயிற்றால் கட்டி அங்குள்ள ஒரு உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்ட பகுதியில் தூக்கி வீசினார்கள்.
5 சிங்கங்கள் நெல்சனை கடித்து குதறி தின்றுவிட்டன. இதையொட்டி மார்ஸ்காட் மற்றும் 2 தொழிலாளர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை நடக்கும் கோர்ட்டுக்கு வெளியே ஏராளமானவர்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>