Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்கங்கள்
#15
தமிழ்ச் சங்கம்


சங்கம் என்ற சொல் "கழகம்", "கூடல்" என்று பொருள்தரும் வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். பௌத்தம் இந்தியாவில் உயர்நிலையிலிருந்த காலத்தில் பௌத்த குருமாருடைய கூடல் "சங்கம்" எனப்பட்டது. தற்போதும் இச்சொல் பௌத்தசமயத்துடன் பெரிதும் தொடர்புள்ளது.

இதைவிடக் குறிப்பிட்ட நோக்கத்துடன் பலர் கூடி அமைக்கும் ஒரு குழுவும் "சங்கம்" என அழைக்கப்படுகின்றது. இதன்படி, தமிழ் அல்லது தமிழர் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படும் சங்கங்கள் தமிழ்ச்சங்கங்கள் எனப் பெயரிடப்படுகின்றன. இவ்வாறான தமிழ்ச்சங்கங்கள் பல தமிழகத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ளன.

எனினும், தமிழ் தொடர்பில் சங்கம் என்ற சொல் பண்டைத் தமிழகத்தில் இருந்ததாகச் சொல்லப்படும், தமிழ்ச் சங்கங்களையே விசேடமாகக் குறிக்கும். தொல்பழங்காலத்தில், அக்காலத்துப் பாண்டிய அரசர்களின் ஆதரவில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று தமிழாய்ந்த சங்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என இன்று குறிப்பிடப்படும் இச் சங்கங்களில் முதற்சங்கம், கடல்கோளினால் அழிந்துபோன பழைய மதுரையில் இருந்ததாம். இரண்டாவதான இடைச்சங்கமும், இதேபோல இன்னொரு கடல்கொண்ட பழந் தலைநகரான கபாடபுரத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது. கடைச் சங்கம் பாண்டிநாட்டின் பிற்காலத் தலைநகரான மதுரையில் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது.

நக்கீரர் என்னும் புலவரே தானெழுதிய இறையனார் அகப்பொருள் உரை நூலில் இச்சங்கங்கள் பற்றி விபரித்துள்ளார். ஒவ்வொரு சங்கமும் இருந்த காலமும், அச்சங்கங்களில் இருந்த புலவர்களின் எண்ணிக்கைகளையும் இவர் கொடுத்துள்ளார். இதன்படி:

முதற்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இடைச்சங்கம் 3700 புலவர்களுடன் 3700 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் இருந்து, 449 புலவர்களுக்கு இடமளித்துள்ளதாம்.

இதன்படி மூன்று சங்கங்களினதும் மொத்தக் காலம் 9990 ஆண்டுகளாவதுடன், முதற்சங்கத்தின் தொடக்கம் அண்னளவாக 12000 வருடத்துக்கு முன் செல்கிறது. தற்போதுள்ள சான்றுகளின்படி, மேற்படி காலக்கணக்கு நிறுவப்பட முடியாத ஒன்றாகும்.

மேற்கூறிய சங்கங்கள் இருந்தது பற்றியே சில ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும், கிறீஸ்து சகாப்தத்துக்குச் சற்று முன்பின்னாகத் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று பலர் கருதுகிறார்கள். புறநானூறு, அகநானூறு போன்ற தொகை நூல்கள், சங்ககாலம் என்று குறிக்கப்படும் மேற்படி காலத்தில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மைத் துணிபு.

பின்வருவனவற்றையும் பார்க்கவும்.
சங்க இலக்கியம்
Reply


Messages In This Thread
சங்கங்கள் - by thamizh.nila - 01-25-2005, 08:46 AM
[No subject] - by hari - 01-25-2005, 09:43 AM
[No subject] - by hari - 01-25-2005, 09:47 AM
[No subject] - by tsunami - 01-25-2005, 10:09 AM
[No subject] - by thamizh.nila - 01-25-2005, 12:00 PM
[No subject] - by KULAKADDAN - 01-25-2005, 12:23 PM
[No subject] - by tsunami - 01-25-2005, 06:32 PM
[No subject] - by Niththila - 01-25-2005, 08:27 PM
[No subject] - by kavithan - 01-25-2005, 11:08 PM
[No subject] - by tamilini - 01-25-2005, 11:10 PM
[No subject] - by kavithan - 01-25-2005, 11:11 PM
[No subject] - by tamilini - 01-25-2005, 11:13 PM
[No subject] - by shiyam - 01-26-2005, 02:35 AM
[No subject] - by thamizh.nila - 01-26-2005, 04:40 AM
[No subject] - by hari - 01-26-2005, 05:28 AM
[No subject] - by kavithan - 01-26-2005, 07:32 AM
[No subject] - by thamizh.nila - 01-27-2005, 08:27 AM
[No subject] - by hari - 01-27-2005, 08:30 AM
[No subject] - by thamizh.nila - 01-27-2005, 08:31 AM
[No subject] - by hari - 01-27-2005, 08:35 AM
[No subject] - by thamizh.nila - 01-27-2005, 08:37 AM
[No subject] - by Niththila - 01-27-2005, 03:55 PM
[No subject] - by tamilini - 01-27-2005, 04:00 PM
[No subject] - by kavithan - 01-27-2005, 10:51 PM
[No subject] - by kavithan - 01-27-2005, 10:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)