Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெளிநாட்டுப் பெண்ணொருவர் இராணுவத்தால் கடத்தல்.
#1
திருமலையில் வெளிநாட்டுப் பெண்ணொருவர் இராணுவத்தால் கடத்தல்.
செவ்வாய்கிழமை 25 சனவரி 2005 (லீமா)
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக மருத்துவ உபகரணங்களுடனும்ää மருந்துகளுடனும் வருகை தந்து திருமலையில் சேவையாற்றிய செக்கோ சிலாவாக்கியப் பெண்ணொருவர் இலங்கை இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்றைய தினம் தனியார் மருத்துவமனையொன்றின் முன்பாக இந்தப் பெண்மனி நின்றபோது 9395 என்ற இலக்கம் கொண்ட இராணுவ ட்றக் வண்டியில் இந்ததப் பெண் பலாத்காரமாக ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார். இந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி இராணுவத்தினர் வாகனத்தில் ஏற்றிய போதுää இதனைக் கண்ணுற்ற பொதுமக்கள் இராணுவத்தினரிடம் நியாயம் கேட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொடுக்கவா இவர்கள் திருமலைக்கு வந்திருக்கின்றார்கள் என இலங்கை அரச ஆக்கிரமிப்புப் படையினர் கேட்டுள்ளனர்.

இராணுவ ட்றக் வண்டியில் இரண்டு அமெரிக்கப் படையினரும் இருந்ததாகவும் அறியமுடிகிறது. இராணுவத்தினரால் ஏற்றிச் செல்லப்பட்டவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லையென்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Source : http://www.nitharsanam.com/?art=8278
Reply


Messages In This Thread
வெளிநாட்டுப் பெண்ணொருவர் இராணுவத்தால் கடத்தல். - by Vaanampaadi - 01-25-2005, 02:21 PM
[No subject] - by Thaven - 01-26-2005, 02:14 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)