Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அஞ்சலி நிகழ்வுக்கு அதிரடிப்படை தடை
#1
<img src='http://www.pathivu.com/img/startsite/news.gif' border='0' alt='user posted image'>

செய்திகள்
செவ்வாய்க்கிழமை 25.01.05 - 13:24 மணி தமிழீழம்
சுனாமியால் உயிரிழந்தோரின் அஞ்சலி நிகழ்வுக்கு அதிரடிப்படை தடை
அம்பாறை விநாயபுர நலன்புரி நிலையத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்விற்கு விசேட அதிரடிப்படையினர் தடை விதித்துள்ளனர். சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தோரின் 31 ஆம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்வுக்கு ஆரம்ப ஆயத்தங்கள் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற அதிரடிப்படையினர் அந்நிகழ்வு இடம்பெறவிடாது தடுத்துள்ளனர்.

படைஉயர் அதிகாரிகளின் அனுமதி பெற்றே நிகழ்வுகள் நடத்தப்படவேண்டும் என அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்களுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மக்கள் அதிரடிப்படையினரைத் திட்டித் தீர்த்தனர். பெண்களையும் குழ்தைகளையும் பல உறவுகளையும் இழந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட அனுமதி இல்லையா என கூச்சல் குரல் எழுப்பினர்.

Source: Pathivu
Reply


Messages In This Thread
அஞ்சலி நிகழ்வுக்கு அதிரடிப்படை தடை - by Vaanampaadi - 01-25-2005, 02:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)