01-25-2005, 11:28 AM
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற போரினால் மிகுந்த துன்பங்களையும் அழிவுகளையும் சொல்லொணாத இடர்களையும் சந்தித்த எமது மக்கள் வாழ்க்கையின் அனுகூலங்கள் அனைத்தையும் இழந்தனர். தற்போது நிலவிவரும் போர் நிறுத்த காலத்தில் எமது மக்கள் கடற்கரையோரங்களில் குடியேறி தமது வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை மேற்கொண்டு வாழ்வியல் அனுகூலங்கiளை ஓரளவு உள்வாங்கத் தொடங்கினர்.
இந்நிலையில் கடந்த 26.12.2004 அன்று சற்றும் எதிர்பாராத விதமாக பொங்கி எழுந்த நிலவதிர்வுப் பேரலைகள் இலங்கைத்தீவு உட்பட தென்னாசியப் பிராந்தியத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கைத் தீவில் எமது தாயகப் பகுதிகளில் வாழும் எமது மக்கள் அதிகமான அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். இந்த இயற்கையின் கோரத் தாண்டவத்தால் இடம்பெயர்ந்த எமது மக்கள் தமது உறவுகளையும் வாழ்விடங்களையும் இழந்து பிரிந்த தமது உறவுகளின் சோகத்துடன் மனது பேதலித்த நிலையில் மீண்டும் நலன்புரிநிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் இருந்து வருகிறார்கள்.
இப்பேரனர்த்தம் காரணமாக தமிழர் தாயகத்திலும் ஏனைய தெற்காசிய நாடுகளிலும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முகமாக எதிர்வரும் 26.01.05 நாள் தேசிய துக்கதினமாக தமிழீழ விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்படுகிறது. இந்நாளில் தமது அன்புக்குரியவர்களையும் உறவுகளையும் இழந்து துடிக்கும் எமது உறவுகளின் சோகத்தில் பங்குகொள்வோம்.
மூர்க்கமாக எழுந்த கடலலைகளில் சிக்கி எமது உறவுகள் உயிர்நீர்த்த அந்தக் கணத்தில் தமிழர் தேசத்திலும் புலம்பெர்ந்து தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவுச்சுடரேற்றி இழந்துபோன உறவுகளை நினைவில் நிறுத்துவோம்.
இடம்: அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் Nedre Rommen3,0988Oslo
காலம்: 26.01.05 புதன்கிழமை மாலை 7.00 மணி
நினைவுச்சுடரேற்றி இழந்துபோன உறவுகளை நினைவில் நிறுத்தும் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்