01-24-2005, 11:19 AM
இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நில நடுக்கம்; வீடுகள்-கடைகள் இடிந்தன
ஜகார்த்தா, ஜன. 24-
கடந்த மாதம் 26-ந்தேதி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப்பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பம் பேரழிவை ஏற்படுத்தியது.
பூகம்பத்தில் ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தோனேஷிசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலத்தீவு உள்பட 11 ஆசிய நாடுகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியதுடன் 2 லட்சத்துக்கும் அதிக மானவர்களின் உயிர்களை பலி வாங்கியது.
உலகம் முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 9 புள்ளிகளாக பதிவானது இந்த பூகம்பம் மற்றும் சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரண பணி கள் இன்னும் முடிவடைய வில்லை.
பேரழிவில் இருந்து இந்தோனேஷிய மக்கள் இன்னும் மீளாத நிலையில் அங்கு மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள் ளது.
இன்று அதிகாலை 3.10 மணிக்கு இந்தோனேஷியாவின் சுலாவெசி மாகாணத்தின் பாலு நகரத்தில் இருந்து தெற்கே 16 கிலோ மீட்டர் துரத்தில் உள்ள இடத்தில் இந்த பூகம்பம் தாக்கியது.
ஜகார்த்தாவில் இருந்து இது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
பூகம்பம் ஏற்பட்டபோது மக்கள் வீடுகளில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அலறிஅடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்த பூகம்பத்தில் ஏராளமான வீடுகள், கடைகள் இடிந்து தரைமட்டமானது.
இதில் ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்த நில நடுக்கம் 6.2 ரிட்டர் அளவாக பதிவாகி இருந்தது.
இதேபோல துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர பகுதியிலும் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள காஸ்நகரம், அந்தல்யா ஆகிய பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் பெரிய அளவில் சேதம் எதும் ஏற்பட வில்லை.
கடந்த 1999-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத் தில் 17 ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.