Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்துநேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்
#2
<b>சென்னையில் இன்று மீண்டும் நில அதிர்வு!: அந்தமான் நில நடுக்கத்தின் எதிரொலி!!</b>

சென்னை:

இந்தோனேஷியாவும் அந்தமானின் கிரேட்டர் நிக்கோபார் பகுதியிலும் இன்று காலை பெரும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.5 ஆகப் பதிவானது. இதன் எதிரொலியாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.


சென்னையில் இன்று காலை 9.46 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

பல பகுதிகளில் இந்த நில அதிர்வை உணர முடிந்தது. இதையடுத்து மக்கள் வீடுகளையும் கட்டடங்களையும் விட்டு அலறியபடி வெளியேறினர்.

டிசம்பர் 26ம்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலுக்குப் பிறகு அந்தமான் தீவுகளில் 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

இந் நிலையில் இன்று காலை 9.46 மணிக்கு அந்தமானின் கிரேட்டர் நிக்கோபார் தீவுகளில் 6.5 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

இதனால் சென்னை மக்களிடையே பீதி ஏற்பட்டது. பலர் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். கடலில் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் மக்களிடம் பரவியுள்ளது. இதன் காரணமாக கடலோரப் பகுதியினர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

பௌர்னமி தினமான இன்று சுனாமி அலைத் தாக்குதல் ஏற்படும் என்று ஏற்கனவே சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சில தினங்களாக வதந்தி பரவி வந்தது. இந்தப் புரளியை அதிகப்படுத்தும் விதத்தில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.

இருப்பினும் இந்த நில அதிர்வுகளால் சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பூகம்பவியல் பிரிவு தலைவர் ராவ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் 26ம் தேதி சுமத்ராவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தையொட்டி சென்னையில் இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

thatstamil.com
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 01-24-2005, 10:26 AM
[No subject] - by Vaanampaadi - 01-24-2005, 11:19 AM
[No subject] - by Vaanampaadi - 01-24-2005, 11:22 AM
[No subject] - by Niththila - 01-24-2005, 04:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)