Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
`காதல்' சினிமா பட இசை அமைப்பாளர் காதலியுடன் ஓட்டம்
#1
`காதல்' சினிமா பட இசை அமைப்பாளர் காதலியுடன் ஓட்டம்: புது பட பூஜையில் போலீசார் கண்காணிப்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் "காதல்" சினிமா படத் தின் மூலம் இசை அமைப் பாளராக அறிமுகம் ஆனவர் ஜோஸ்வா ஸ்ரீதர் (வயது28 ). இவரது மனைவி உகாலி (25 ). நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந் தவர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சென்னை அண்ணா நகர் அனபோயா குடியிருப்பில் ஜோஸ்வா மனைவி, குழந்தை களுடன் வசித்து வருகிறார்.

சினிமாவுக்கு இசை அமைக்கும் முன் இவர் கிறிஸ்தவ கூட்டங்களிலும், ஆலயங்களிலும் இசை அமைத்து வந்தார். பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவி நடாஷா (24). இவரது இசை குழுவில் `கீ போர்டு' வாசிப்பார்.

இசை நிகழ்ச்சிகள் தொடர்பாக ஜோஸ்வாவும் நடாஷாவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இதில் 2 பேருக் கும் நெருக்கம் ஏற்பட்டது. இதனால் காதல் மனைவி உகாலியை மறந்து புதிய காதலி நடாஷாவுடன் ஜோஸ்வா தங்கி இருந்தார்.

2 முறை சென்னையில் தங்கிய நடாஷாவை அவரது குடும்பத்தினர் வந்து பெங்க ளூருக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜோஸ்வாவை சந்திக்க சென்னை வந்த நடாஷா அதன் பிறகு பெங்க ளூர் திரும்பவில்லை.

சென்னையில் பல இடங்களில் தேடியும் ஜோஸ்வாவை யும்-நடாஷாவையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதனால் நடாஷாவின் தாயார் பெங்களூர் போலீசில் புகார் செய்தார்.

ஜோஸ்வா-நடாஷா காதல் ஜோடி திருமணம் செய்ய இருப்பதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பெங்களூர் பே ர் சென்னை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், அண்ணா நகர் உதவி கமிஷனர் ஆகியோர் சென்னையில் விசாரணை நடத்தினார்கள்.ஜோஸ்வாவின் தாயார், மனைவி உகாலி ஆகியோரி டம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே `காதல் வளர்த்தேன்' என்ற புதிய படத்தின் இசை அமைப்பாளராக ஜோஸ்வா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இந்த படத்தின் தொடக்க விழா இன்று காலை 10.30 மணிக்கு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது.

இதில் கலந்து கொள்ள வருவார் என்று எதிர்பார்த்து போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர். ஆனால் ஜோஸ்வா வரவில்லை. படத்தின் கதாநாயகன் மனோஜ், கதாநாயகி `அழகி' புகழ் மோனிகா, இயக்குனர் கலா புதியவன், தயாரிப்பாளர் ஹயாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இயக்குனர் தயாரிப்பாளர் கூறுகையில், "ஜோஸ்வாவை நாங்கள் பார்த்து 10 நாட்கள் ஆகிவிட்டது. இன்று பட பூஜைக்கு வரு வார் என்று எதிர்பார்த்தோம். அவர் வரவில்லை. அவர் எங்கு போனார் என்றும் தெரியவில்லை" என்றனர்.

ஜோஸ்வாவின் இயற்பெயர் ஸ்ரீதர் தந்தை சரவணன். இவர் அண்ணா நகர் துவரகா அபார்ட்மென்ட்டில் தனியாக வசித்து வருகிறார்.

ஜோஸ்வா, நடாஷாவை காதலித்த பிறகு காதலிக்காக மதம் மாறி ஸ்ரீதர் என்ற பெயரை ஜோஸ்வா ஸ்ரீதர் என மாற்றிக் கொண்டார். பல இசை அமைப்பாளர்களிடம் கீ போர்டு வாசித்தார். காதல் படத்தில் அவருக்கு இசை அமைப்பாளர் அந்தஸ்து கிடைத்தது.

இந்த படத்துக்கு இசை அமைக்கும் போது கூட அடிக்கடி ஜோஸ்வா-நடாஷா காதல் பிரச்சினை ஏற்பட்டது. அப்போதும் போலீசார் அவரை தேடினார்கள்.

இதனாÖல் ஜோஸ்வா தனது தங்குமிடத்தை யாருக்கும் தெரிவிப்பது கிடையாது. நண்பர்கள் வீட்டில் தங்கி யிருந்து இசை அமைத்து வந்துள்ளார். வெளிïருக்கு காதலியை வரச்சொல்லி அங்கு தங்கி விட்டுச் சென்று விடுவார்.

இப்போது கூட அவர் சென்னையில்தான் காதலியுடன் தங்கியிருக்கலாம் என்று கருதி போலீசார் தேடி வருகிறார்கள்.

காதல் படம் மூலம் பிரபலமான இசை அமைப்பாளர் ஜோஸ்வாஸ்ரீதர் காதல் பிரச்சினையில் சிக்கி இருப்பது தமிழ் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதல் ஜோடியை தேடும் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.
Reply


Messages In This Thread
`காதல்' சினிமா பட இசை அமைப்பாளர் காதலியுடன் ஓட்டம் - by vasisutha - 01-23-2005, 04:50 PM
[No subject] - by Nanthaa - 01-23-2005, 06:27 PM
[No subject] - by sinnappu - 01-23-2005, 09:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)