Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுனாமியும் சுவாமியும்
#3
எழுத்து: நக்கீரன்

பாகம்1
மரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இருபது ஆண்டு காலம் போரினால் அழிவுண்ட வாழ்க்கையை மீள் கட்டியெழுப்ப பகீரத முயற்சி செய்து கொண்டிருந்த தமிழீழ கடலோர தமிழ் மக்களின் வாழ்க்கையோடு ‘விதி’ மீண்டும் விளையாடியுள்ளது.

மின்னாமல் முழங்காமல்ää சொல்லாமல் கொள்ளாமல்ää கண்ணை மூடி முழிக்கு முன் வரலாறு காணாத அனர்த்தங்களையும் அவலங்களையும் உயிர் அழிவுகளையும் சுனாமி ஏற்படுத்தியுள்ளது.

ஊருக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த சுனாமி சாதி மத பேதமின்றி எல்லோரையும் விழுங்கியுள்ளது. தேவாலயங்களில் திருப்பலி பூசையில் ஈடுபட்டிருந்த கிறித்தவர்கள்ää மசூதியில் குரான் ஓதிக்கொண்டிருந்த இஸ்லாமியர்ää கோயில்களில் வழிபாடு செய்து கொண்டிருந்த இந்துக்கள்ää பவுத்தர்கள் எல்லோரும் பலியானார்கள்.
முன்னாளில் கடற்கோளினால் நிலம் விழுங்கப்பட்டதை சங்க இலக்கியங்கள் பதிவு செய்து வைத்துள்ளன.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகள் தன் காலத்துக்கு முன் ஏற்பட்ட கடற்கோளை குறிப்பிடுகிறார்.

'வடிவேல் எறிந்த வான்பகை பொறாதுää
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ளää
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழ்க!"

பஃறுளி ஆறும் அதனை அடுத்து இருந்த குமரிமலையும் கொடுங்கடல் கொண்டதாக அடிகள் குறிப்பிடுகிறார். இந்தக் கடற்கோள் 2ää000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.பி. 1450ம் ஆண்டில் ஏற்பட்ட பயங்கர கடற் கொந்தளிப்பால் தமிழகத்தின் தென்பகுதி கடலில் மூழ்கின. இப்படித் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலப்பரப்பில் கச்சதீவு உட்பட 11 தீவுகள் உருவாகின. இப்படித் தோன்றிய தீவுகள் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன.

சுனாமி கடல் கொந்தளிப்பு இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. சுனாமி அலைகளின் தாக்குதல் பற்றி இப்போதுதான் முதல் முறையாக தெரியவந்துள்ளது.

இதற்கு முன்பு சுனாமி அலைகள் யப்பான்ää அமெரிக்காää இந்தோனேசியா ஆகிய 3 நாடுகளை மட்டும் தாக்கி இருக்கின்றன. எனவேதான் இந்த கொடூர அலைகளுக்கு "சுனாமி" என யப்பானிய மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. சுனாமி என்றால் 'துறைமுக அலை" என்று பொருளாம்.

சுனாமி அலைகள் கடலில் எப்படி தோன்றுகின்றன? ப10மியின் 71 விழுக்காடு நிலப்பரப்பு கடலுக்கு அடியில்தான் இருக்கிறது. அந்த 71 விழுக்காடு நிலப்பரப்பில்தான் நிறைய எரிமலைகள் உள்ளன. அவை அடிக்கடி வெடித்துச் சிதறுகின்றன. அது போல கடலுக்கு அடியில் உள்ள 71 விழுக்காடு நிலப்பரப்பில்தான் நிலநடுக்கம் அடிக்கடி இடம்பெறுகின்றன. எரிமலை மற்றும் சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படும்போதுää அவற்றின் அதிர்வுகள் கடல் தண்ணீரில் எதிரொலிக்கும்.

சாதாரணமாக ஒரு குளத்தில் கல் வீசினாலே அந்த தண்ணீரில் அதிர்வு ஏற்பட்டு வளையம்ää வளையமாக அலைகள் கரைவரை போவதைப் பார்க்கலாம்.

நடுக்கடலில் நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வு அலைகளும் இதே மாதிரித்தான் வளையமாக கிளம்பி கரையை நோக்கி பாய்ந்து வரும். இந்த சுனாமி அலைகள் வழக்கமாக கடலில் சந்திரனின் ஈர்ப்புச் சக்தியாலும் காற்று அமுக்கத்தாலும் எழும் அலைகள் போல அல்லாது அவை மிக மிக சக்தி வாய்ந்தவை.

கடந்த டிசெம்பர் நத்தார் நாளன்று காலை சுமாத்ரா தீவின் தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவில் 9 புள்ளி நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் நில நடுக்கம் இரண்டு காரணங்காளால் ஏற்படுகின்றன.

பூமிக்கு கீழேயுள்ள தீக் குழம்பின் மீது நாம் வாழும் தளம் அடுக்கு முறையில் ஒன்றன் மேல் ஒன்றாகவும் அருகருகாகவும் இருக்கிறது. இந்த அடுக்கில் விரிசல் ஏற்பட்டு ஒன்றில் இருந்து ஒன்று விலகும் போது நில நடுக்கம் ஏற்படுகிறது. அல்லது ஒன்றோடு ஒன்று உராயும் போதும் நில நடுக்கம் ஏற்படுகிறது. அப்போது ஏற்படும் அதிர்வுகள் கடலின் மேல்மட்டத்தில் எதிரொலிக்கும். மேலெழும் அலைகள் கரையை நோக்கிப் பாய்கின்றன.

இந்த அலைகள் கிளம்பி கரையை நோக்கிப் பாய்ந்து வரும்போது கடற்பகுதியில் அதன் தாக்கம் தெரியாது. ஆழ்கடலில் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை கூட இந்த அலைகள் சாதாரணமாக ஒரு குலுக்கு குலுக்கி விட்டு கடந்து வந்து விடும்.

கரையை நெருங்க நெருங்க சுனாமி அலைகள் தங்கள் சுயரூபத்தை காட்டத் தொடங்குகின்றன. கரையை நெருங்க சில கிலோ மீட்டர் தூரம் இருக்கும்போது சுனாமி அலைகள் சூடுபிடித்து 50 மைல் வேகத்தில் ஓ.. ஓ.. ஓ... என்ற பேரிரைச்சலோடு காதை கிழித்துக் கொண்டு செல்லும்.

கரையை நெருங்கியதும் சுனாமி அலைகள் மதம்கொண்ட யானை போல எம்பி எழுந்து உயரத்தில் சுழலும். குறைந்த பட்சம் 30 அடி முதல் 60 அடி உயரத்துக்கு கடல் தண்ணீர் கொந்தளித்து எழும்பும்.

உயரே எழும்பி சுழலும் கடற் கொந்தளிப்பு 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஊருக்குள் புகுந்து விடும். அந்தச் சமயத்தில் எதிர்கொள்ளும் மனித உயிர்கள்ää பொருட்கள் எல்லாவற்றையும் சுனாமி அலை துவம்சம் செய்து விடும். கடற்கரையை சுனாமி அலைகள் வெறித்தனமாக துவம்சம் செய்யும்போது அதன் சக்தி அணுசக்தி வெடிப்புக்கு ஈடான விளைவுகளை கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் சுனாமி அலைகளின் எடை பல தொன் கணக்கில் இருக்கும். எனவேதான் இந்த அலைகள் பெரிய கட்டிடங்களைää கப்பல்களை மிக இலேசாக கவிழ்த்து விடுகின்றன.

உலகில் சுனாமி அலைகள் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான் தோன்றுகின்றன. இந்தியப் பெருங்;கடலில் சுனாமி அலைகள் இதுவரை ஏற்பட்;டதே இல்லை.

சுனாமி அலைகளை கண்டு பிடிக்க பசிபில் பெருங்கடல் பகுதியில் நவீன கருவிகளை அமெரிக்கா நிறுவி உள்ளது. எனவே சுனாமி அலைகள் பசிபிக் பெருங்கடலில் தோன்றும் போதெல்லாம் அமெரிக்கா தன் செயற்கை கோள்கள் மூலம் அதை கண்டுபிடித்து விடுகிறது. சுனாமி அலைகள் கரைக்கு எப்போது வரும் என்று அமெரிக்கா துல்லியமாக ஆராய்ந்து தன் மக்களை விளிப்புப் படுத்தி வெளியேற்றி விடுகிறது.

சுனாமி அலைகளின் முதல் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை நமக்குத் தெரியாமலே போய் விட்டது. முதல் தாக்குதல் நடந்த பிறகே இந்திய பெருங்கடலில் தோன்றிய சுனாமி அலைகள் பற்றி உலக ஆய்வு நிறுவனங்கள் தங்கள் பார்வையை திருப்பின.

ஹாவாய் தீவின் தலைநகரான கொனலுலுவில் (Honolulu) இருக்கும் ஆய்வு மையதத்தில் டிசெம்பர் 12-26 நத்தார் நாளன்று காலை சுமாத்ரா தீவின் தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் காலை ரிக்டர் அளவில் 9 புள்ளி நிலநடுக்கம் பதிவாகியது. அதன் விளைவாக கடல் அலைகள் 60 அடிக்கு கெம்பும் என்றும் பல ஆயிரம் மைல்கள் அது பயணிக்கும் என்பதும்; ஆய்வாளர்களுக்குத் தெரிந்து விட்டது. உடனே இலங்கை நேரத்தின்படி காலை 7.00 மணிக்கு தங்கள் இணையதளத்தில் சுனாமி பற்றிய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.

அதாவது இலங்கையின் வட-கிழக்கு மற்றும் தென்பகுதியை சுனாமி அலைகள் தாக்குவதற்கு 2 மணித்தியாலங்கள் முன்னரே கொனலுலு ஆய்வு மையம் தனது இணைய தளத்தில் எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் அந்த மையம் வேறு வழிகளில் அதனை அறிவிக்கத் தவறிவிட்டது. தொலைபேசிää வானொலிää தொலைக்காட்சி மூலம் அந்த அனர்த்தத்தை வெளியிட்டிருக்கலாம். அல்லது இலங்கைää இந்தியாää பங்காளதேஷ் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்களுக்கு அந்தச் செய்தியை அறிவித்து கரையோரத்தில் வாழும் மக்களை அப்புறப்படுத்தச் சொல்லி இpருக்கலாம். ஆனால் இதில் எதையுமே அந்த மையம் செய்யத் தவறிவிட்டது. அதன் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் அநியாயமாக கடலுக்குப் பலியாகின.

அறிவியலும் தகவல் தொழில் நுட்பமும் கொடிகட்டிப் பறக்கும் இன்றைய நவீன உலகில் இப்படியொரு ஒரு தவறு ஏற்பட்டது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

தாய்லாந்து நாட்டுக்கு இந்தச் செய்தி கொடுக்கப்பட்டது. ஆனால் தாய்லாந்து அரசு தனது சுற்றுலாதுறைக்கு பின்னடைவு ஏற்படும் என்ற பயத்தில் அதனை மூடி மறைத்துவிட்டதாச் சொல்லப்படுகிறது.

கண்கெட்ட பின் ஞாயிறு வணக்கம் செய்வது போல இப்போதுதான் இந்தியா சுனாமியை முன்கூட்டி அறியும் கருவிகளை பல கோடி ரூபாயில் நிறுவ முயற்சி செய்கிறது.

சுனாமி கடலலைகள் உலக வரைபடத்தில் ஆசியப் பிராந்திய நாடுகளின் அமைவிலும் மாற்றத்தை ஏற்படுத்துமளவுக்கு பலம்வாய்ந்தவையாக அமைந்து விட்டன என அமெரிக்காவின் பிரபல இயற்பியல் நிலவியல் அறிவியலாளர் ஹென் ஹட் கட் தெரிவித்துள்ளார்.

இந்த பூமி நடுக்கம் சுமாத்திராவின் தென்கிழக்கு மூலையின் 25 க.pமீ. அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதோடு அதனைச் சூழவுள்ள சிறுதீவுகள் அமைந்திருந்த நில அமைப்பை 20 மீட்டர் (66 அடி) தூரத்திற்கு அப்பால் தள்ளிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் வடமேல் முனையான சுமாத்திரா தீவும் 36 மீட்டர் தூரம் அதன் முன்னைய அமைவிலிருந்துதென்மேற்குத் திசைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சுமாத்திரா தீவு இவ்விதம் அமைப்பு அடிப்படையில் நகர்த்தப்பட்டிருப்பது மட்டுமன்றி அதன் முன்னைய கடல் மட்டத்தினின்றும் மேலுயர்ந்து உள்ளது.

இந்தியா மற்றும் பர்மா ஆகிய நாடுகள் முன்னரை விட அவற்றின் கடல் மட்டத்திலிருந்து தாழ்ந்திருக்கிறது.

சுமாத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதை தொடர்;ந்து எழுந்த சுனாமி கடல் பேரலைகள் ப10மி தன்னைத்தானே சுற்றிச் சுழல்கிற அச்சுப்பாதையையே (கற்பனை கோடு) குலுக்கி அசைத்து விட்டது என்கிறார்கள். பூமியின் சுற்றுவட்ட பாதையில் மாற்றம் இருக்காது. ஆனால் பூமி தன்னைத்தானெ சுற்றுவதில் சிறிய மாற்றங்;கள் இருக்கக் கூடும். அதாவது பூமியின் சுழர்ற்;சி வேகம் சற்று அதிகரிக்கலாம். இதனால் ஒரு நாளின் நேரத்தில் 3 மைக்ரோ வினாடிகள் வரை குறையலாம்.

இயற்கையின் சீற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது. அந்தளவுக்கு அறிவியல் இன்னும் முன்னேறவில்லை. ஆனால் அதை முன்கூட்டியே அறிந்து தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும் ஆற்றல் மனிதனுக்கு இருக்கிறது.

வழக்கம் போல பழமைவாதிகளும் மதவாதிகளும் பழியை அப்பாவியான கடவுள் மீது போட்டுவிட்டார்கள்.

தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து சுனாமியால் ஏற்பட்ட அழிவுகள் 'கடவுள் சித்தம்" என்று சொல்லியிருக்கிறார். பதைக்கப் பதைக்க இரண்டு இலட்சம் மக்களை கொன்று குவித்த சுனாமி கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்பது அந்தக் கடவுளை கருணையற்ற ஒரு பாபியாக சித்தரிக்கும் முயற்சியாகும். ஜெயலலிதா சொல்வது உண்மை என்றால் அவர் குறிப்பிடும் கடவுள் கடவுளாகவே இருக்க முடியாது!

திரைப்பட நடிகர் ரஜனிகாந்த் 'உலகில் பாவிகள் அதிகரித்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது" என்று தத்துவம் பேசியுள்ளார். அவரை மன்னிக்கலாம். அந்தப் பாவிகளில் அவரும் ஒருவரா இல்லையா என்பதை அவர் சொல்லவில்லை.

சங்கர மடத்தை சேர்ந்த காவி ஒன்று 'மடத்துக்கு களங்கம் கற்பித்தைப் பொறுக்காத ஆண்டவன் இந்த அனர்த்தத்தை ஏற்படுத்தி மக்களைத் தண்டித்துள்ளான்" எனப் பேசியிருக்கிறது. சங்கராச்சாரியாரை தீபாவளி நாளன்று கைது செய்தது ஜெயலலிதா. அவரல்லவா கடவுளின் தண்டனைக்கு ஆளாகி இருக்க வேண்டும்? மாறாக ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?

இப்படி சுனாமி விளைவித்த அழிவுக்கு ஆளாள் மனம் போன போக்கில் காரணம் கற்பிக்கிறார்கள்.

சிறையில் வாடும் ஜெயேந்திரர் 'சின்ன பெரியவாள் சிறைக்கு வந்து விட்டால் சந்திரமௌலீஸ்வரர் பூசை நின்று போய்விடும். நியமப்படி அது நடக்காமல் போனால்ää இப்போ சந்தித்திருப்பதை விட மிகப் பெரிய இயற்கை அழிவை நம் தேசம் சந்திக்க நேரிடும்" என்கிறார்.

சந்திரமௌலீஸ்வரர் பூசை நாளும் செய்த பலனாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒருவர் இப்படி மற்றவர்களைப் பயமுறுத்துவது நல்ல நகைச்சுவையாக இருக்கிறது!

'திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடக்கிற மிகப்பெரிய திருவிழாää கார்த்திக தீபப் பெருவிழா. மலையில் தீபத்தை ஏத்துவது மீனவ இன மக்கள்தான். இவங்கள் 'பர்வத ராஜகுல மரபினர்" என்று சொல்றாங்க. சில சமயம்ää கார்த்திகை மாசத்தில் இரண்டு கிருத்திகை வருமாம். அதில் இரண்டாவது கிருத்திகையில்தான் நேரங்காலம் பார்த்து தீபம் ஏத்துவாங்களாம். இந்த ஆண்டு அப்படி ஒரே மாசத்தில் இரண்டு கிருத்திகை வந்ததை முன்கூட்டியே கவனிக்காமல் முதல் கிருத்திகையில் தீபத்தை ஏத்தினதால்தான் சுனாமி பயங்கரம் நடந்து மீனவர்கள் வாழ்க்கையை சூறையாடிடுச்சு" என்று திருவண்ணாமலை பக்தர்கள் புலம்பறாங்களாம்!

ஆக இவர்கள் கற்பனை பண்ணுகிற கடவுள் 'அப்பு" போல ஒரு பெரிய தாதாவாக இருப்பார் போல் தெரிகிறது!

முடிவாக நிலநடுக்கும்ää எரிமலைää சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகளை மனிதனால் தடுக்க முடியாது என்பது உண்மையே. ஆனால் அறிவியலின் துணையோடு அவற்றை முன்கூட்டியே அறிந்து தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதன் தாக்கத்தை குறைக்கலாம். உயிரழிவுகளைப் பெருமளவு தவிர்க்கலாம்.

மதவாதிகள் நம்புவது போல் சுனாமிக்கும் சுவாமிக்கும் துளிகூட தொடர்பில்லை. பூசை செய்வதாலோää யாகம் வளர்ப்பதாலோää ஜெபம் செய்வதாலோää நேர்த்தி செய்வதாலோ எந்தப் பயனும் இல்லை. புத்தியைப் பயன்படுத்தினால் மட்டுமே பயன் உண்டு


பாகம் 2
.
அண்மையில் இந்திய சனாதிபதி அப்துல் கலாமைப் பார்த்து ஒரு பள்ளி மாணவன் கேட்டான் 'நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? 'ஆம்" என்று பதில் அளித்தார் கலாம்.

சனாதிபதி அப்துல் கலாம் ஒரு ஏவுகணை அறிவியலாளர். ஆனால் சமய அடிப்படையில் அவர் ஒரு முஸ்லிம். கடவுளை மறுக்கும் முஸ்லிமை பார்க்க முடியாது. காரணம் கடவுளை மறுப்பவர்கள் முஸ்லிமாக இருக்க முடியாது!

ஆனால் நத்தாரை அடுத்து வந்த சுனாமி கடற்கோள் அரும்புகள், மொட்டுக்கள்ää பூக்கள்ää பிஞ்சுகள், காய்கள், கனிகள் மற்றும் இன, மத பேதம் இன்றி எல்லோரையும் பலியெடுத்தது.

இலங்கையில் மட்டும் வீடுவாசல் இழந்து ஏதிலிகளாக நிற்பவர்கள் தொகை 4,41,410. இடம் பெயர்ந்தோரில் 1,86,000 உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் 2,50,000. நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளனர். இதுவரை 38,195 பேர் இறந்துள்ளார்கள். காணாமல் போனோர் தொகை 6,034.

கடற்கோள் தாக்கிய நாடுகளில் 2,25,000 மக்கள் இறந்திருக்கிறார்கள். பல கோடி பெறுமதியான வீடு வாசல்கள்ää தோட்டம் துரவுகள், வள்ளங்கள் வலைகள் அழிந்துள்ளன.

இறந்தவர்களில் பெரும்பாலோர் கடலை நம்பி வாழ்ந்தவர்கள். ஏழைகளிலும் ஏழைகள். அன்றாடும் உழைத்துச் சாப்பிடும் அன்னக்காவடிகள். அன்றாடக் காய்ச்சிகள்.

இறந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள். கடல் கொந்தளித்து ஊருக்குள் பேரிரைச்சலோடு நுளைந்தபோது ஓடித் தப்ப முடியாமல் அகப்பட்டுக் கொண்டவர்கள். தாய் தந்தையரின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டவர்கள்.

சுனாமி கடற்கோள் உயிர்களையும் உடைமைகளையும் மட்டும் வாரிக் கொண்டு போகவில்லை. கடவுள் பற்றிய பல்வேறு நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் வாரிக் கொண்டு போயிருக்கிறது!

கடவுள் விரும்புகிறாரோ இல்லையோ இந்தக் கடற்கோள் அழிவுகள் எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த கருணையுள்ள ஒரு கடவுள் ஒருவர் இருக்கிறாரா? என்ற விவாதத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.

சுனாமி கடற்கோள் பற்றி தொலைக்காட்சியில் மதத் தலைவர்கள் தங்கள் தங்கள் சமய சாத்திரங்களின் (theology) அடிப்படையில் விளக்கம் அளித்து வருகிறார்கள். செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் வெளியிடும் கட்டுரைகள் 'சுனாமியும் சுவாமியும்" பற்றி தீவிர விவாதத்தை தொடக்கி வைத்துள்ளன.

வௌ;வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள் இந்தச் சுனாமிக்கு என்ன அர்த்தம் எனக் கேட்டு தங்கள் கடவுளிடம் முறையிடுகிறார்கள். அவர்களது கடவுள் நம்பிக்கை பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தீவிர கடவுள் பக்தர்கள் கூட சுனாமி அனர்த்தம் விடுத்துள்ள அறைகூவல் பற்றி கையைப் பிசைகிறார்கள்.

சுனாமி அனர்த்தத்தில் இருந்து தப்பியவர்கள் தாங்கள் எந்தக் கடவுளை பக்தியோடு வழிபாட்டார்களோ அதே கடவுள் தங்களை கைவிட்டு விட்டதாக குமுறுகிறார்கள். தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த கடல் தங்களது உறவுகளை விழுங்கிப் பசியாறிவிட்டது என அழுகிறார்கள்.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்குப் பதில் கைவிடப்பட்டுள்ளார்கள்!

சிவாய நம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்றார்கள். அதுவும் பொய்த்து விட்டது.

சுனாமி அனர்த்தத்தில் கடவுளின் கைகளைப் பாhக்கிறோமா? எட்டாத வானத்தில் கடவுள் இருக்கிறாரா? சுனாமி கடற்கோள் கோபம் கொண்ட கடவுளின் செயலா? இப்படியான கொடூரம் அப்பாவி மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏன் ஏற்பட வேண்டும்.? இந்த அழிவினால் ஏதாவது நன்மை ஏற்பட்டதா?

ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் எப்போதும் ஒரு பனிப்போர் இருந்து வருகிறது. எல்லாம் வல்ல கடவுள் என்ற கருதுகோளுக்கு அளவை அடிப்படையில் (தர்க்க ரீதியாக) ஆத்திகர்களால் விளக்கம் கொடுக்க முடியாது.

பொதுவாக கடவுள்ää விதி என்பன மனிதன் தன்னால் விளக்க முடியாததற்கு விளக்கம் கொடுக்கும் (explain the unexplainable) எத்தனமே.

இந்த இடத்தில் ஆத்திகம் நாத்திகம் இடையில் நடக்கும் வாதம் பற்றி அதாவது கடவுள் உண்டா? இல்லையா? என்ற கேள்விக்கு புகழ்பெற்ற கிரேக்க தத்துவவாதியான எபிகியூரஸ் (Epicurus- 341-271 BCE) ஒரு புதிர் மூலம் விடை சொல்லி இருக்கிறார்.

எபிகியூரஸ் பொருள்முதல்வாத (போகப் பொருள்கள் மட்டுமே உலகம்) அடிப்படையில் இயற்கை எண்ணம் (metaphysics) அறிவியல் அடிப்படையில் அல்லாது அனுபவ வாயிலாகää அறிவின் தோற்றம் எல்லை (empiricist epistemology) கிரேக்கத்தின் ஒழுக்கவியல் (ethics) ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்தவர்.

எபிகியூரஸ் உலகம் அணுக்களால் ஆனது என்றும் எல்லா இயற்கை நிகழ்வுகளை அணுக்களின் அடிப்படையில் (சமணர்களது கோட்பாடும் இதுதான்) விளக்கினார்.

எபிகியூரஸ் ஆன்மீகத்தின் அடிப்படையான பொருளற்ற ஆன்மா இருப்பதை நிராகரித்தார். அது மட்டும் அல்லாமல் மனிதர்களது வாழ்க்கையில் கடவுள் செல்வாக்குச் செலுத்துவதில்லை எனச் சொன்னார். ஐம்புலனின் உதவியுடன் உலகம் பற்றிய அறிவை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

மனித வாழ்க்கையின் குறிக்கோள் இன்பம் என்றும் அதனை ஆசைகளை மட்டுப்படுத்துவதன் மூலமும் கடவுள் பயம் மற்றும் மரண பயம் இரண்டையும் விரட்டுவதன் வழியாகவும் அடையலாம் என்றார். பயத்தில் இருந்து விடுதலை என்ற அவரது கோட்பாடு அவருக்குப் பின் பல நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கியது. இப்போது எபிகியூரசின் புதிரைப் பார்ப்போம்.

'கடவுள் தீமையைத் தடுக்க விரும்புகிறார், ஆனால் இயலவில்லை? அப்படியென்றால் அவர் எல்லாம் வல்லவர் அல்ல!

அவரால் இயலும்ää ஆனால் விரும்பவில்லை? அப்படியென்றால் அவர் தீய உள்ளம் படைத்தவர்!

அவரால் இயலும் அதே நேரம் விரும்பமும் உள்ளவர். அப்படியென்றால் தீமை எங்கிருந்து வருகிறது?

அவரால் இயலவும் இல்லை விரும்பவும் இல்லை? அப்படியென்றால் ஏன் அவரை கடவுள் என்று அழைக்க வேண்டும்?

இயற்கையின் விதிகளை மனிதன் மாற்ற முடியாது. ஒரு கல்லை ஒருவன் தலைக்கு மேலே செங்குத்தாக எறிந்தால் அது திரும்பி கீழே வந்து அவனது தலையைப் பதம் பார்க்கும். காரணம் ஈர்ப்பு விதிதான்.

கடவுள் உண்டா இல்லையா? என்ற விவாதத்தில் பிரித்தானிய ஊடகங்களும் மக்களும் முன்னணியில் இருக்கிறார்கள்.

கடவுள் என்பது மனிதன் தனது மனதில் பொத்தி வைத்திருக்கும் ஒரு எண்ணம்தான். மேலே நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தையும் கீழே பஞ்ச பூதத்திலான பூமியையும் பார்த்த மனிதன் இவற்றை படைத்த காரணன் ஒருவன் இருக்க வேண்டும் என நினைத்தான். பானை இருந்தால் குயவன் இருக்கத்தானே வேண்டும். அந்த குயவனுக்கு கடவுள் என்று பெயர் சூட்டினான்.

கடவுள் என்றொருவர் இருந்தால் அவர் இந்த கடற்கோளையும் அதனால் ஏற்பட்ட மனித அனர்த்தங்களை எப்படி அனுமதித்தார்?

அல்லது எல்லாம் வல்ல கருணையுள்ள ஒரு சக்தி இருப்பது என்பது வெறும் கற்பனையா? மக்கள் அச்சம் காரணமாக கண்டு பிடித்த ஒரு ஊன்று கோலா? அல்லது பாரத்தை இறக்கி வைக்கும் ஒரு சுமை தாங்கியா?

இந்தக் கேள்விகள் உலகம் தோன்றிய காலம் தொட்டு பல சிந்தனையாளர்களது மனதைக் குடைந்து வந்திருக்கிறது. Pierre Simon de Laplace
என்ற பிரஞ்சு நாட்டு கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் Mecanique Celeste என்ற நூலை எழுதினார். அப்போது பிரஞ்சு நாட்டின் சக்கரவர்த்தியாக இருந்தவன் நெப்போலியன். Pierre Simon de Laplace

அந்த நூலில் உலகத்தைப் படைத்துக் காக்கும் கடவுளின் பங்கு பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஏன்; சொல்லவில்லை என்று அவரை நெப்போலியன் கடிந்து கொண்டான். அதற்கு Pierre Simon de Laplace
இறுத்த பதில் 'ஐயாää எனக்கு அந்த அனுமானம் தேவையற்றது" என்பதாகும்.

அவ்வளவு தூரம் போவானேன். மகாபாரதப் போரில் ஏற்பட்ட உயிரழிவுகளைப் பார்த்துவிட்டு சார்வாகர் என்ற சனாதனதர்ம தத்துவவாதி கடவுள் ஒருவர் இருப்பதை மறுத்தார்.

மனிதனின் அறிவீனம் அல்லது முட்டாள்தனமே அழிவுக்கு மூலகாரணம் என எடுத்துரைத்தார்.

இந்த சார்வகரே சார்வாகம் என்ற உலகாயுத மதத்தை தோற்றுவித்தவர். சார்வாகம் இனிமையாகப் பேச வல்லவர்கள் என்ற பொருள் தரும் சொல்லாகும்.

சார்வாகம் காட்சியே அளவையாவதென்றும், நிலம், நீர், தீ, வெளியெனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி சிறப்பால் தோன்றிப் பிரிவால் மாய்வதாய் உடம்பின் கண்ணே அறிவு மதுவின்கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியுமென்றும், மறுமை இல்லை என்றும், உடம்பே ஆன்மாவென்றும், கடவுள் இல்லை என்றும் இன்பமும் பொருளுமே உறுதிப்பொருள்கள் (புருஷார்த்தங்கள்) என்று உரைக்கிறது.

சில நெருக்கடி காலங்களில் கடவுள் நம்பிக்கை உலகத்தில் வாழும் பலகோடி மக்களுக்கு மன ஆறுதல் தரவல்லதாக இருக்கலாம். ஆனால் சுனாமி போன்ற அனர்த்தம் இயற்கையின் சீற்றமாகும். இயற்கையையும் அதன் விதிகளையும் கற்பதன் மூலமே அதனைப் புரிந்து கொள்ளலாம்.

ஒருவிதத்தில் இயற்கையையும் கடவுளும் ஒன்றுதான். ஆதி மனிதன் ஞாயிறு, கோள்கள், தீ, கடல்ää காடுää மலைää ஆறு போன்ற இயற்கை பொருள்களையே வழிபட்டான்.

இன்றைய மனிதன் இயற்கையை அழித்து வருகிறான். காடுகளை அழிக்கிறான். நீர்நிலைகளை அழிக்கிறான். சுற்றுச் சூழலை மாசு படுத்துகிறான். அவற்றின் விளைவே சுனாமி போன்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்றன என்ற கருத்தும் நிலவுகிறது.

சுனாமி ஏற்படுத்திய வரலாறு காணாத அழிவு மனிதர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நிற்கும் தரகர்களான மதத் தலைவர்களுக்கு பெரிய சோதனையாகி விட்டது.

பூமியில் நடக்கும் எல்லாவற்றையும் வழிநடத்திக் கொண்டும் வழிகாட்டிக் கொண்டும் ஒரு தெய்வீக சக்தி இருப்பது உண்மையென்றால் டிசெம்பர் 26, 2004 அதிகாலை அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

இந்தக் கேள்வியை கவிஞர் புதுவை இரத்தினதுரை அழுதழுது அழகான புதுக் கவிதை வரிகளில் கேட்கிறார்.

<b> முதுகிற் பாரச்சிலுவை சுமந்த
பாவப்பட்ட மக்களின் பயணப்பாடு முடிந்தது
இயேசுவே!
எம்மையேன் இரட்சிக்கமறந்தீர் சுவாமி!

ஆலமுண்ட நீல கண்டனே!
எம்மைச் சாவுதின்ற போது தாங்காதிருந்ததுக்கு
அன்று மட்டும் உமக்கென்ன அலுவலிருந்தது பிரபு!
அல்லாவே!

பிள்ளைகளைக் கைவிட்டதேனோ?
புத்த பெருமானே!

வெள்ளம் வருகிறதென்றாயினும் சொல்ல வேண்டாமா?
எல்லோரும் ஒதுங்கிக் கொணடீர்கள்
நாங்கள்தான் தனித்துப் போனோம்!</b>

நக்கீரன் கனடா

கருத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன.. ஒரு தலைப்பின் கீழ் -- யாழினி
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-08-2005, 03:15 PM
சுனாமியும் - சுவாமி - by Sriramanan - 01-23-2005, 11:35 AM
[No subject] - by Danklas - 01-23-2005, 02:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)