Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழ போராட்டம் ஒத்திவைப்பு: விடுதலை புலிகள்
#2
சுனாமி அனர்த்த உதவி மூலம் அரசின் படைப்பலம் அதிகரிப்பு
நோர்வே உயர்மட்ட க்குழுவிடம் தேசியத்தலைவர் பிரபா
* உதவி சமமாகப் பகிரப்பட வேண்டும்.

* பேச்சை காலம் தாழ்த்த முடியாது.

* பிராந்திய கட்டமைப்பு வேண்டும்.

* புரிந்துணர்வு அரசிடம் இல்லை.


(கிளிநொச்சியில் இருந்து ஆர்.புஷ்பபரன்)

""இரக்கம் கொண்ட சர்வதேச நாடுகள் வழங்கிய ""சுனாமி'' அனர்த்த உதவிகளை கொண்டு இலங்கை அரசு இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்து படைபலத்தை மேம்படுத்த முற்பட்டுள்ளது.

சுமார் 150 மில்லியன் ரூபா நிதியில் ஈரானில் இருந்து இராணுவத் தளபாடங்களை கொள்வனவு செய்ய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இது இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான நேரமல்ல'' என தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்சன் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பின் போதே தலைவர் இக் குற்றச்சா ட்டை அவர் தெரிவித்துள்ளார் என சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் அரசியல் ஆலேõசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் கலந்து கொண்டார். சர்வதேச சமூகத்திடம் நாம் கேட்பது வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இழுபறிப்படும் இனப்பிரச்சினையை சுனாமி கடல் கொந்தளிப்பை காரணம் காட்டி மேலும் காலம் தாழ்த்துவதை அனுமதிக்க முடியாது என்றும் வடக்குகிழக்கில் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் நேரடியாக சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்காக தனியான பிராந்திய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் தலைவர் பிரபாகரன் நோர்வே உயர் மட்டக் குழுவினரிடம் வலியுறுத்தினார் என அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சந்திப்பு நீடித்தது. இச்சந்திப்பில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியற்றுறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், கடற் புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை, காவற் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பு தொடர்பாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு அருகிலுள்ள விடுதலைப் புலிகளின் திட்டமிடல் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அளித்த பதில்கள் வருமாறு:


கடந்த கால யுத்த அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்குகிழக்கில் தற்போதைய சுனாமி கடல் கொந்தளிப்பினாலும் சுமார் 75 ஆயிரம் குடும்பங்கள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சுனாமி அழிவு இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வடகிழக்கு பகுதியிலேயே கூடுதலாக உள்ளது. நாம் சர்வதேச சமூகத்திடம் கேட்பது வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களிற்கும் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அது வடகிழக்குப் பகுதிகளிலுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என்ற எந்தவொரு பாகுபாடுமின்றி இருக்க வேண்டும்.


சுனாமி கடல் அனர்த்தத்தினால் விடுதலைப் புலிகள் பாரிய இழப்புகளை சந்தித்துள்ளனரா என எழுப்பப்பட்ட கேள்வியை மறுதலித்த அவர் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கடற்புலிகளும் புலிகளின் மருத்துவப் பிரிவினருமே மீட்டெடுத்திருந்தனர்.
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 01-23-2005, 09:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)