Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழ போராட்டம் ஒத்திவைப்பு: விடுதலை புலிகள்
#1
ஜனவரி 23, 2005

ஈழ போராட்டம் ஒத்திவைப்பு: விடுதலை புலிகள்

கிளிநொச்சி:



தமிழீழ போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுனாமி பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. அங்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதேபோல அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையின் மற்ற பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

இந் நிலையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், நார்வே நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜான் பீட்டர்சனுக்கும் இடையே கிளிநொச்சியில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்டன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் சுனாமி பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. இங்கு சுனாமி பேரலைக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.



சுனாமி நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக எங்களது பிரதானக் கோரிக்கையான தமிழீழ போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். ஆனால் கைவிட்டுவிடவில்லை.

இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் இணைந்து சுனாமி நிவாரணத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதையேதான் நார்வே குழுவினரும் வலியுறுத்தியுள்ளனர். புலிகளும், இலங்கை அரசும் கூட்டாக திட்டங்களை வகுக்க வேண்டும். அப்போதுதான் நிவாரண உதவிகள் மக்களை நேரடியாக சென்றடைய முடியும் என்றார் பாலசிங்கம்.

Source: Thatstamil
Reply


Messages In This Thread
ஈழ போராட்டம் ஒத்திவைப்பு: விடுதலை புலிகள் - by Vaanampaadi - 01-23-2005, 08:26 AM
[No subject] - by hari - 01-23-2005, 09:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)